ஸ்ரீ உடையாப்பட்டி கருமாரியம்மன் உபதேச கவசம்

ஸ்ரீ உடையாப்பட்டி கருமாரியம்மன் உபதேச கவசம்

ஓம் ஸ்ரீ கணேசாய நம:
ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஆதிஅந்தமற்ற ஆனைமுகக் கடவுளே அடியேன் உன்னை வேண்டுகிறேன்
வேதாகமபுராணம் போற்றும் மூஷிக விநாயகா உன்னை வேண்டுகிறேன்
வேண்டுகிறேன் மூவர் தேவர் முனிவர் போற்றும் விக்னேஸ்வரா உன்னை வேண்டுகிறேன்
வேண்டுகிறேன் கலிதோஷம் நீங்க சேலம் உடையாப்பட்டி கருமாரி கவசமதைத் தந்து தடுத்தாட் கொண்டிடுவாய் 1

வேதாகமபுராணம் போற்றும் விக்னேஸ்வரா வேண்டுகிறேன்
பத்ரகாளி பகவதி பராசக்தி எனப்போற்றும் கருமாரி அம்மன் கவசத்தை
முழு முதற் கடவுளான சேலம் ஸ்ரீ ராஜ கணபதியே அனுக்ரஹிப்பாய்
ஞான பண்டிதா ஸ்கந்தகுரோ வேண்டுகிறேன் கருமாரி கவசம் தந்து ரக்ஷிப்பாய் 2

இறையருளின் இருப்பிடமே ப்ரம்ம ப்ரணவ மயமானவனே
அழிவற்ற மெய்ப்பொருளே பரம்பொருளே பரஞ்ஜோதி ஸ்வரூபமே
மறைவாழ வைகுண்டம் கைலாயம் வாழ வானுலகும் மண்ணுலகும் வாழ
ஆனை முகத்தோடவதரித்த வல்லபை விநாயகா மகமாயி எனப் போற்றும் கருமாரி கவசம் அருள்வாய் 3

ப்ரம்மத்தின் சக்தியான பராசக்தி ஸ்ருஷ்டித்த அர்த்தநாரீஸ்வரனின் ஜேஷ்ட புத்திரனே
விக்னமகற்றி வைக்கும் வல்லபை மஹாகணபதியே
சேலம் நகர் அடுத்துள்ள ஸ்கந்தாஸ்ரம பஞ்சமுக ஹேரம்ப கணபதியே
சேலம் உடையாப்பட்டி கருமாரி அம்மன் கவசம் தந்து மனக்கவலையைப் போக்கிடுவாய் 4

மூவருக்கும் மூத்தவளே முழுமுதற் கடவுளின் ப்ரம்ம சக்தியானவளே
இவன் கல் மனம் உருகிடக் கருமாரி கவசம் தந்து கடையனைக் காத்து ரக்ஷிப்பாய்
சேலம் நகரக்கு அடுத்து இருக்கும் உடையாப்பட்டி கருமாரி அம்மா
இவன் பாவத்தைப் பொசுக்கி உனது பக்தனாக்கிக் கொண்டிடுவாய் 5

அறம் பொருளுடன் அடியேன் அழிவற்ற இன்பத்துடன் வாழ்ந்திடவே
ஆதிபராசக்தியான கருமாரி அறியாமையைப் பொசுக்கிடுவாய்
சேலத்தைக் காத்தருளும் சொர்ணாம்பிகைத் தாயே ஸ்ரீ ஸுகவனேஸ்வரன் பத்தினியே
காம க்ரோதத்துடன் இவன் கவலையைப் பொசுக்கிடுவாய் 6

கள்ளம் கபடற்ற உள்ளத்தை மகமாயி தந்திடம்மா
பொய் பொறாமை சூதுகளை சிவகாசி மகமாயி பொசுக்கிடம்மா
பேராசை பூதத்தை சிறுவாச்சூர் மதுரகாளி எரித்திடம்மா
இவனைப் பரிசுத்தமாக்கிட பட்டீஸ்வரம் துர்க்கையாய் பராசக்தி வந்திடம்மா 7

தமிழகத்தை தனக்குக் கோவிலாக்கிக் கொண்ட தாயே பராசக்தி
தமிழகத்தின் குலதெய்வம் மஹாமாயையான மாரியம்மன் என்றறிந்து கொண்டேன்
உனது மகனின் மன மாசுகளை கடையநல்லூர் இசக்கியம்மா பொசுக்கிடுவாய்
உலக மக்களின் உயிராய் இருந்து வரும் சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயே 8

உலக மக்களின் மூச்சாக இருந்து வரும் மகமாயித் தாயே கேள்
உலக மக்களின் அன்பாக இருந்து வரும் தமிழகத்தின் தாயே கேள்
உலக மக்களின் ஆத்மசக்தியாய் இருந்து வரும் ஆதிபராசக்தியே கேள்
உலக மக்களின் அறிவாய் இருந்து வரும் சேலம் உடையாப்பட்டி கருமாரி அம்மா கேட்டிடுவாய் 9

ஐம்புலனை அடக்கியாள அம்மா மகமாயி உன்னைப் பற்றிவிட்டேன்
இரவுபகல் இடைவிடாது கருமாரியம்மன் திருவடியைப் பற்றிவிட்டேன்
பராசக்தி இருவினைகளைப் பொசுக்கி இவனைத் தடுத்தாட் கொண்டிடம்மா
இவன் அறியாமையைப் பொசுக்கி அனுக்ரஹம் செய்திடம்மா 10

செயற்கரிய செயலை இம்மையில் இவன் செய்வதற்கு சோட்டானிக்கரை பகவதியே வரமருள்வாய்
ஒழுக்கத்துடன் இருந்துவர சேலம் கோட்டைப் பெரிய மகமாயி வரமருள்வாய்
பணிவுடன் பண்பையும் அன்பையும் சென்னை திருவேற்காடு கருமாரி வரமருள்வாய்
அறச்செயலை இவன் உறுதியாய்ச் செய்வதற்கு ஆதிசக்தியான சேலம் செவ்வாய்ப்பேட்டை மகமாயி வரமருள்வாய் 11

நல்லறிவோடு நல்ல ஒழுக்கம் உள்ளவர்களிடம் பொடிப்பாளயத்து பத்ரகாளி நட்பை உண்டாகி வைப்பாய்
நல்லன அனைத்தையும் தந்திட தாயே வால்பாறை மசானி அம்மனாய் வந்திடுவாய்
சொற்குற்றம் அனைத்துமே சொல்லம்பாகுமென்றாள் செங்கன்னூர் பகவதியும்
சொல்லின் செல்வனைப் போல் இவனையும் உனது பக்தனாக்கிடம்மா கொடுங்கலூர் பகவதியே 12

ஒழுக்கமில்லை என்றால் நீயும் உயிருள்ள பிணமென்றாய் சிவகாசி பத்ரகாளி
பொய் பொறாமை உள்ளவன் உயிருடன் நடமாடும் பேய் என்றாள் ராஜபாளையத்து ராணிமகமாயி
பேராசை உள்ளவனை நம்பிடாதே என்றாள் திண்டுக்கல் கோட்டை மகமாயி
ஆசைகள் ஒவ்வொன்றும் மிகக் கொடிய அரக்கன் என்றாள் தொட்டியத்து மதுரகாளி 13

உனதுள் இருக்கும் பொய் பொறாமை உன்னைக் கெடுக்கும் என்றாள் மஹாகாளிகுடி மஹாகாளி
தேவைகள் இருக்கும் வரை கொடிய தீமைகள் உன்னைப் பற்றும் என்றாள் திண்டுக்கல் ராஜகாளி
பேராசை உள்ளவனை மூதேவி பற்றும் என்றாள் உறையூர் வெக்காளி அம்மன்
நிராசையுள்ளவனை ஸ்ரீதேவி பற்றும் என்றாள் மடப்புரத்து மஹாகாளி 14

வன்சொல் பொய் புறம் பேசுவது மிகக் கொடிய குற்றம் என்றாள் கொல்லங்குடி காளியாத்தா
பயன்படாத சொற்கள் பயன்கொடாத பதராகுமென்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி
பொல்லாங்கு சொல்பவனை நம்பிடாதே என்றாள் சேந்தமங்கலம் ஸ்ரீதத்தகிரி வனதுர்க்கை
கோபத்தை போன்றதொரு கொடிய விஷமில்லை என்றாள் கல்கத்தா மஹாகாளி 15

அன்னை கருமாரி ஆறுவது சினமென்றாள் மனமே மறந்திடாதே
உண்டி கொடுப்பதுவே உயிர் கொடுப்பதாகுமென்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி
உனதுள் இருக்கும் மிகக் கொடிய சினம் உனது முதல் பகைவன் என்றாள் சேலம் நகர் மகமாயி
அகப்பற்றும் புறப்பற்றும் ஆசையின் வேலை என்றாள் அங்காள பரமேஸ்வரி 16

விருப்பும் வெறுப்பும் பிறவியின் வித்தாகும் என்றாள் திருச்செந்தூர் சந்தன மகமாரி
ஆசாபாசமெல்லாம் உன்னைக் கெடுக்கும் என்றாள் பம்பாய் மஹாலக்ஷ்மி
குறையற்ற செல்வம் நிராசைக்குள் இருக்குது என்றாள் தொட்டியத்து மதுரகாளி
முதலும் முடிவுமற்ற சேலம் உடையாப்பட்டி கருமாரியின் அருள்வாக்கைப் பற்றிடப்பா பற்றறுக்க 17

செம்பொருளான மகமாயியெனப் போற்றும் கருமாரி இவனை
இவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல தொண்டினைச் செய்திடச் செய்
மனமேநீ நினைத்தபடி நீயுமாகிவிடுவாய் கடவுளை நினைத்திடுவாய்
அழிவற்ற உனதான்மாவை அகத்துள் நினைத்திடுவாய் மறந்திடாதே மறந்திடாதே 18

உலகில் இருப்பது உனதான்ம சக்தியாகும் என்றாள் புதுக்கோட்டை புவனேஸ்வரித் தாய்
ப்ரம்மசக்தியான சேலம் கோட்டை பெரியமாரி இவனைக் கெடுக்கும் மதமாத்சர்யங்களைப் பொசுக்கிடம்மா
அழிவற்ற உனது ஆன்மசக்தி பரப்ரம்மத்தின் பத்தினி என்றாள் மதுரை மீனாக்ஷி
அழிவற்ற ப்ரம்மசக்தியே உனதான்மசக்தி என்றாள் காஞ்சி காமாக்ஷி
அழிவற்ற உனது ஆன்மசக்தியே உலக மக்களின் உயிர் என்றாள் காசி விஸாலாக்ஷி 19

மஹாமாயையான பராசக்தியின் த்யானம் உன்னை மாமனிதனாக்கிவிடும்
மனிதனை மாமனிதனாக்கும் சேலம் உடையாப்பட்டி கருமாரி அம்மா உன்னை நம்பிவிட்டேன்
இவனை அறச்செயலைச் செய்யவைத்து அழியாத வீட்டையும் தந்திடுவாய் சேலம் செவ்வாய்ப்பேட்டை மகமாயி
ஆத்தாள் மகமாயி அழிவற்ற உனதறிவான அற்புத சக்தியப்பா மறந்திடாதே 20

சேலம் உடையாப்பட்டி கருமாரி எனக்குள் நீ அன்புமயமாய் இருந்து உனது மஹத்துவத்தை உண்டாக்கி வைப்பாய்
மஹாமாயையான தமிழகத்தின் மகமாயி அழிவற்ற உனது ஆத்மசக்தியாகுமப்பா மறந்திடாதே
ஆதிபகவானோடு ஊடுருவியிருப்பவள் தமிழகத்தின் கருமாரியப்பா மறந்திடாதே
பராசக்தியின் ஆயிரம் நாமஜபம் பிறவிப்பிணி அறுக்கும் நம்பிடுவாய் 21

பிறவிப்பிணியை வேரறுக்கும் சக்தியின் மஹாமந்திரம் மகமாயியின் மஹாமந்திரம் ஆகுமப்பா
ஈரேழுலகும் நிறைந்துள்ள மகமாயியே உனதாத்ம சக்தியென்பதை நீயும் மறந்திடாதே
மாரியம்மன் திருவடியை சிக்கெனப் பற்றிவிட்டால் நீயும் அழிவற்ற சிவமாகிவிடுவாய் நம்பிடப்பா
இரண்டற்ற ஒருபொருளே உனது ஆத்மாவகுமென்ற உபதேசத்தை மனமே மறந்திடாதே 22

பற்றற்று இருப்பதற்கு பராசக்தியின் திருவடியை சிக்கெனப் பற்றிடப்பா மறந்திடாதே
உனக்குள் அறியாமை உள்ளவரை உலகப்பற்று உன்னை விடாதென்றாள் கோவைத் தண்டுமாரி
அஞ்ஞானம் ஒழிவதற்கு ஆயிரம் கண்ணுடைய சமயபுரத்தாளை சரணமடைந்திடப்பா மறந்திடாதே
சாகாக்கலை என்பதெல்லாம் உணமையான சரணாகதிக்குள் இருக்குதப்பா மறந்திடாதே 23

உனக்குள் அறியாமை உள்ள வரை நீயும் அஞ்சி அஞ்சி செத்திடுவாய் என்றாள் கருவூர் வஞ்சியம்மன்
அச்சமே மிகக் கொடிய பாவத்தை உண்டாக்கி வைக்கும் மனமே நம்பிடுவாய்
அச்சத்தைப் பொசுக்கும் சக்தி மஹாமாரியிடம் இருக்குதப்பா மறந்திடாதே
அறியாமை ஒழிவதற்கு ஆதிபராசக்தியின் ஆயிரம் நாமத்தை ஏத்திடப்பா 24

மனமே வரப்போகும் தீமைகளை வருமுன் அறிந்து காத்துக் கொண்டிடுவாய்
மனமே தற்புகழ்ச்சி உனது நல்லறிவுக்கண்ணை மறைக்குமப்பா மறந்திடாதே
மனமே எண்ணித் துணிவாய் என்ற பொய்யா மொழியை இரவுபகல் மறந்திடாதே
மனமே குணம் குற்றம் சீர்தூக்கி நண்பனைத் தேர்ந்தெடுத்திடப்பா மறந்திடாதே 25

அறநெறி வழுவாத வாழ்வின் பன்னாரி மகமாயி மனஅமைதி கிட்டும் என்றாள்
பேராசையினால் மிகக்கொடிய மஹாபாவம் உனக்குள் பெருகி வருமென்றாள் காரியூர் கொண்டத்துக் காளியம்மா
உனக்குள் இருக்கும் பேராசையை நிராசையினால் வென்றிடு என்றாள் கோபி சாரதா மகமாயி
இதம் தரும் இனிய சொற்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் என்றாள் எங்கள் நல்லமுத்துமாரி 26

நல்லன அனைத்தும் தரும் நல்லறத்தைச் செய்யப் பிறந்த மகனே கேட்டிடப்பா
உன்னை அருள் மயமாக்கி விடும் நல்லறத்தை உறுதியாய்ச் செய்திடப்பா
நல்லறத்தை செய்வதொன்றே உலகில் நல்ல தவமாகும் என்றாள் மகமாயி
மாயவாழ்க்கையை மெய்யென்றெண்ணி மோசம் பொய் விடாதே என்றாள் மாயூரம் வேப்பிலை மகமாயி 27

பகையை முளையிலேயே களைந்திட வேண்டும் என்ற மலையாள பகவதியை நம்பிடப்பா மறந்திடாதே
உள்ளத்தில் பகையுடன் பொய் பொறாமையுள்ளவனின் உறவு உனக்கு வேண்டாமப்பா
உள்ளத்தில் பகையுள்ளவனை மிகக்கொடிய விஷப்பாம்பென்று சொல்லிவிட்டாள் கடும்பாடி மகமாயி
ஆசை காட்டி மோசம் செய்யும் அரக்கனை உனது கனவிலும் நம்பிடாதே என்றாள் எண்ணூர் கருமாரி 28

சூதாடி வருவதெல்லாம் பாவத்தின் சின்னமென்றாள் தொட்டியத்து மதுரகாளி
பெருந்தீனி எல்லாம் பெருவியாதியின் சின்னமென்றாள் திண்டுக்கல் ராஜகாளி
பணத்திமிரால் எவரையும் படைத்திடாதே என்றாள் பொடிப்பாளையத்து பத்ரகாளி
பதவிச்செருக்கினால் பாவத்தைச் செய்திடாதே என்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி 29

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன் உறவு உன்னைக் கெடுக்கும் என்றாள் மானாமதுரை மகமாயி
உனது உண்மையான பக்தி ஒன்றே உனது பகைவனைப் பொசுக்கும் என்றாள் கோபிகுண்டத்து பத்ரகாளி
இன்னா செய்தார்க்கும் இனியவை செய் என்றாள் ஈரோடு பெரிய சிறிய மகமாயி
கற்றபடி நிற்பதே கல்வி கற்றதின் பயனென்றாள் மஹாசரஸ்வதித் தாய் மறந்திடாதே 30

தீமையை நினைப்பதுவும் தீமையைப் பேசுவதுவும் தீமையைச் செய்வதுவும் மிகக் கொடிய பாவமென்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி
அறியாமையை ஒழிப்பதுவே உலகில் அரிய தவமாகும் என்றாள் சேலம் கோட்டைப் பெரிய மகமாரி
மனிதனுடன் மனிதனை சேர்த்து வைப்பதுதான் மாதவமாகும் என்றாள் ஆத்தாள் முத்துமாரி
தமிழகத்தின் குலதெய்வம் மகமாரியெனப் போற்றும் பராசக்தி என்பதை நீயும் மறந்திடாதே 31

பொறுமையிலும் உயர்ந்த தவம் உலகில் இல்லை என்றாள் சேலம் மகமாயி
த்ருப்தியிலும் உயர்ந்த தவம் ப்ரபஞ்சத்தில் இல்லை என்றாள் பட்டினத்து பத்ரகாளி
ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்த பத்ரகாளியான மகமாயி உன்னைப் பற்றிவிட்டேன்
அனைவர் உள்ளத்திலும் ஆத்மசக்தியாய் இருக்கும் ப்ரம்மசக்தி நீதான் அம்மா 32

உலகில் வேறுபாடல்லாத சக்தி மெய்ப்பொருளான ப்ரம்மசக்தியாகுமப்பா மறந்திடாதே
ஈரேழுலகில் நிறைந்திருக்கும் ப்ரம்மசக்தி உனக்குள் நான் என்று இருக்குதப்பா மறந்திடாதே
அணுவிற்கணுவாய் இருந்துவரும் ஆத்தாள் மகமாரியை உனதறிவாக உணர்ந்திடப்பா மறந்திடாதே
ப்ரபஞ்சத்திலுள்ள உயிர்களெல்லாம் உனது உயிர் ஆகும் என்றாள் ஆத்தாள் மகமாயி 33

தமிழகத்தின் மக்களைத் தடுத்தாட்கொள்ள வந்திட்ட ஸ்ரீ தத்தகிரி வனதுர்க்கா கேட்டிடம்மா
எங்கும் எல்லாமாயிருந்துவரும் ஈஸ்வரியே மகமாயி என்னைத் தடுத்தாட்கொண்டிடம்மா
தமிழகமே மாரியம்மன் கோயிலென்று உலகம் உன்னைப் போற்றுதம்மா
வேட்கைவிடுநெறி வேதாந்தமாகும் என்றாள் மெய்ப்பொருளான மகமாயி 34

தமிழகத்தில் தீயை மிதிக்க வைத்து திருவிளையாடல் புரியும் கோபிநகர் குண்டத்துத் தாயே கேட்டிடம்மா
மஞ்சள்நீர் வேப்பிலையில் குடியிருந்துவரும் சேலம் கோட்டை மகமாயி கேட்டிடம்மா
இவனை நல்லவனாக்கிவிட எனக்குள் வந்திடம்மா சென்னை நகர் காளிகாம்பா
இவனகத்துள் நானென்று இருந்துவரும் ப்ரம்மசக்தி தாயே பத்ரகாளி ஆகுமப்பா 35

அழிவற்ற ஆத்மசக்தியான ஆத்தாள் மகமாரியே ஆதிசக்தி ஆகுமப்பா
ஆத்மசக்தியாய் இருந்துவரும் ஆத்தாளை அகத்துள் நீ ‘நான்’ என்று உணர்ந்திடப்பா
உலகிலுள்ள மக்களுக்குள் நான் நான் என்றிருப்பதுதான் அழிவற்ற மஹாகாளியப்பா
ஆத்மஞானம் வேண்டின் உனதகத்துள் நான் என்றிருக்கும் ப்ரம்மத்தின் சக்தியைப் பற்றிடப்பா 36

ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபண்ணும் ஞானமப்பா மறந்திடாதே
சைவசித்தாந்தமெல்லாம் தான் அவனாகி விடுவதாகும் மறந்திடாதே
தாயே பராசக்தி எனக்குள் உனது நிஜஸ்வரூபத்தை நான் என்று உணர்ந்திடச் செய்திடம்மா
மனமே ஈரேழுலகத்தை ஸ்ருஷ்டித்த சேலம் உடையாப்பட்டி கருமாரி உனக்குள் நான் என்று இருக்குதப்பா மறந்திடாதே 37

அழிவற்ற உனது ஆத்மசக்தியே சேலம் கோட்டை பெரிய மகமாரி அப்பா மறந்திடாதே
அழிவற்ற உனது ஆத்மசக்தியே சென்னை நகர் காக்கும் கற்பகாம்பாள் மறந்திடாதே
அழிவற்ற உனது ஆத்மசக்தியே சேலம் ஸ்கந்தாஸ்ரமம் மஹாலக்ஷ்மி துர்க்கை அப்பா மறந்திடாதே
அழிவற்ற உனது ஆத்மசக்தியே மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வதி ஆகுமப்பா மறந்திடாதே 38

சேலம் உடையாப்பட்டி தங்கக் கருமாரித் தாயே இவன் சிரசினைக் காத்திடம்மா
தமிழகத்தைக் கவர்ந்திட்ட சென்னைக் கருமாரித் தாயே இவன் கண்களுடன் காதுகளைக் காத்திடுவாய்
செங்கல்பட்டு மகமாயி இவன் மூக்குடன் நாக்கையும் பற்களையும் காத்திடுவாய்
தென்னாற்காடு மகாமாரி இவன் நெற்றியுடன் இருபுருவங்களையும் காத்திடுவாய் 39

நாகை நகர் துர்க்கை அம்மா இவன் அறிவை இடைவிடாது காத்திடுவாய் மறந்திடாதே
தஞ்சை முத்துமாரித் தாயே இவன் மூளையுடன் முகத்தினையும் காத்திடுவாய் மறந்திடாதே
திருச்சி சமையபுரத்தாளே இவன் இதயத்தில் நீயிருந்து மார்புடன் வயிற்றையும் காத்திடம்மா
புதுக்கோட்டை நார்த்தாமலை மகமாயி இவன் கழுத்துடன் கைகளையும் முதுகினையும் காத்திடுவாய் 40

மதுரை மாநகர் காக்கும் தெப்பக்குளம் மகமாரி இவன் இடுப்புடன் குதம் குறியினைக் காத்திடுவாய்
திண்டுக்கல் கோட்டைக் காளியம்மா இவன் தொடைகளுடன் கால்களையும் காத்திடுவாய்
ராமநாதபுரத்தை ஆளும் ராஜராஜேஸ்வரித் தாயே இவன் இதயத்தை உறுதியாய்க் காத்திடுவாய்
நெல்லை பத்ரகாளி மகமாயி இவன் உள்ளங்கை கால் விரல்களையும் காத்திடுவாய் 41

கன்னியாகுமரித் தாயே இவன் உயிரினை இடைவிடாது இருந்து காத்திடுவாய்
சேலம் கோட்டை மகாமாரி இவன் அகம் புறம் மேல் கீழ் இடைவிடாது இருந்து காப்பாய்
கோவை நகர் காக்கும் கோணியம்மனான மஹாகாளி இவனை பத்து திக்கிலும் நின்று பத்திரமாய் காத்திடம்மா
பாண்டிச்சேரி முத்துமாரி இவன் உள்ளத்திலிருந்து இவன் உடலின் மாம்சத்தை காத்திடுவாள் 42

தர்மபுரி போற்றும் மகமாயி இவன் ஸ்வதர்மத்தைக் காத்திடம்மா மறந்திடாதே
ஈரோட்டில் நிறைந்துள்ள பெரிய சிறிய மகமாயி இவன் உடலிலுள்ள உயிரணுக்களைக் காத்திடம்மா
நீலகிரி மகாமாரி இவன் ரத்தத்தை காத்திடம்மா மறந்திடாதே
சிவகங்கையைக் காத்தருளும் வெட்டுடையாள் காளி மகமாயி இவன் உடம்பில் உள்ள நரம்பினைக் காத்திடம்மா 43

சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தை கண்ணிமைபோல் காத்துவரும் உடையாப்பட்டி கருமாரி இவன் எலும்புகளைக் காத்திடுவாய் மறந்திடாதே
உலக மக்களை ரக்ஷிக்கவந்த சேலம் கோட்டை மகமாயித் தாயே என் கனவிலும் நீ நின்று காப்பாய்
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா இவனுக்கு நல்ல புத்தி சக்தியை தந்தருள்வாய்
இவன் இதயத்துள் ப்ரம்ம சக்தியாய் இருந்து வரும் ப்ரபஞ்சத்தில் உள்ள பராசக்தி இவன் மூச்சுக்காற்றாய் இருந்திடம்மா 44

தமிழகத்தின் மதுரகாளி இவன் அறியாமையை இக்கணமே எரித்திடம்மா மறந்திடாதே
கொங்குநாட்டைத் தனக்குக் கோவிலாக்கிக் கொண்ட காளி மகமாயி இவன் பேராசைகளைப் பொசுக்கிடம்மா
தமிழ்நாடெங்கும் நிரம்பியுள்ள தமிழ்த் தாயே மகமாயி தரித்திரத்தை ஓட்டிடம்மா
உலகில் தமிழகமே உனது திருக்கோவில் என்பதை உலகம் அறியச் செய்த தாயே 45

சிங்கப்பூர் மலேயாவைக் காக்கும் தெய்வமான மகமாரி இவனை மாமனிதனாக்கி விடுவாய்
நல்லவரம் கொடுத்தருளும் சேலம் கோட்டைப் பெரிய மாரியம்மா இவன் வீட்டையும் நாட்டையும் காத்திடம்மா
நாட்டில் உள்ள மக்களுக்கு நல்லறிவைத் தந்திடுவாய் சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயே
நாட்டு மக்களுக்கு நல்ல மனத்தைத் தந்திடுவாய் தஞ்சை நகர் காக்கும் முத்துமாரித் தாயே 46

மனக்கவலையை உண்டாக்கும் பேராசையை இக்கணமே சுட்டெரிப்பாய் புதுவை நல்லமுத்துமாரியம்மா
நினைப்புகள் ஒவ்வொன்றும் உனக்குப் பிறவியைத் தரும் என்றாள் கோபிநகர் குண்டத்து மஹாசக்தி
இச்சைகள் உள்ளவரை இவ்வுலகில் நீ பிறப்பாய் என்றாள் சிவகாசி மகமாயி
சங்கல்பம் உள்ளவரை பிறப்பதும் இறப்பதுமே உனது தொழிலாகி விடுமென்றாள் நாமக்கல் மகாமாரி 47

பலனை விரும்பும்வரை உனக்குள் பாவம் பெருகுமென்றாள் நாமக்கல் நாமகிரித் தாய்
இச்சையுள்ளவரை உனக்குள் அச்சம் இருக்கும் என்றாள் புதுக்கோட்டை புவனேஸ்வரித் தாய்
வலுவான பேராசை உனதான்மாவை மறைக்குமென்றாள் ஈரோடு பெரிய சிறிய மகமாயி
மிகக்கொடிய பொறாமை உன் மனத்தைக் கெடுக்கும் என்றாள் சென்னப் பட்டிணத்து மகமாரி 48

ஆசை அகத்துள் அணு இருப்பின் அதுவே நரகம் என்றாள் சென்னை அப்போலோ ஆஸ்பத்ரி புத்துமாரி
உனது உடம்பில் உயிரை வைத்து உன்னைக் கெடுக்கும் ஆசைகளை உடனடியாகத் துரந்திடென்றாள் திருச்சி மகமாயி
ஆசை இருக்கும் வரை உனக்குள் மனவேதனை மலை போல் இருக்குமென்றாள் ஆத்தாள் யோககருமாரி
சேர்க்கையின் தோஷம் உன்னைச் சித்ரவதை செய்யும் என்றாள் செங்கோட்டை மகமாயி 49

உனக்குள் ஆசையிருக்கும் வரை பொய் போட்டி பொறாமை உனக்குள் கடல் போல் பொங்குமென்றாள் மலையாள பகவதியும்
தன்னம்பிக்கையற்ற நாகரிகம் உன்னைக் கெடுக்கும் என்றாள் தமிழகத்திலுள்ள மகமாயி
ஒற்றுமை ஒன்றினாலே உனக்குள் மனஅமைதி கிட்டும் என்றாள் சேலம் செவ்வாய்ப்பேட்டை மஹாகாளி
எனது உனது என்கிற எண்ணம் உன் நல் வாழ்க்கையை கெடுக்கும் என்றாள் சேலம் உடையாப்பட்டி தங்கக் கருமாரி 50

பேராசையினால் வேற்றுமைகள் மேரு மலை போல் ஆகுமென்றாள் சேந்தமங்கலம் தத்தகிரி வனதுர்க்கை
ஆவல் உள்ள வரை உனது ஐம்புலன்கள் அடங்காது என்றாள் பெரியபாளையத்து பவானித் தாய்
காலத்தை வெல்வதற்கு கற்பனைகளை ஒழித்திடு என்றாள் மஹாமாயையான துலக்கானத்து மாரியம்மன்
பேராசை உள்ள வரை உனக்கு பேரின்பம் கிட்டாதென்றாள் மதுரை மீனாக்ஷி 51

ஆசையுள்ளவன் மனம் மாநரகமாகும் என்றாள் காஞ்சிபுரம் காமாக்ஷி
ஆசைகள் ஒவ்வொன்றும் உனது மனதைக் கெடுக்கும் என்றாள் காசி விஸாலாக்ஷி
ஆசைகள் ஒவ்வொன்றும் பிறவிக்கு வித்தாகும் என்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி
ஆசைகள் ஒவ்வொன்றும் உனது நிஜஸ்வரூபத்தை மறைக்கும் என்றாள் புதுக்கோட்டை புவனேஸ்வரித் தாய் 52

சென்னை ஆவடி எண்ணூர் மாம்பலத்து மகமாயியை சிக்கெனப் பற்றிவிட்டால் ஆசையின் வேரறுந்து விடும் மறந்திடாதே
ஆசைகள் ஒவ்வொன்றும் அழிவற்ற உனதாத்மாவை மறைக்குதென்றாள் திருவொற்றியூர் பத்ரகாளியம்மா
ஆசைகளை த்யாகம் செய்தால் நீயும் உனது ஆன்மாவை உணர்வாய் என்றாள் திருச்சி அகிலாண்டேஸ்வரித் தாய்
ஆசைகளை த்யாகம் செய்தால் நீயும் அழிவற்ற தெய்வம் ஆவாய் என்றாள் ஸ்ரீமாதா த்ரிபுர சுந்தரித் தாய் 53

நீ நினைக்கும் விஞ்ஞானம் உனக்குள் இருக்கும் மெய்ஞானத்தை மறைக்குது என்றாள் ஆவூர் மகமாயி
உனக்குள் மெய்ஞானம் உண்டாவதற்கு ‘நான் யார்’ எனக் கேள் என்றாள் திருவண்ணாமலை மகமாயி
தன்னை நான் யாரெனக் கேட்டுணர்வது தான் தத்துவ ஞானத்தின் ஸாரமென்றாள் கும்பகோணம் மகமாயி
‘நான் யார்’ எனக் கேட்டுணர்ந்து கொண்டு தான் தானாய் இருப்பது தான் தத்துவ ஞானியின் அடையாளம் ஆகும் என்றாள் காவிரிப்பூம்பட்டினத்தாள் 54

சேரிடமறிந்து சேர் என்றாள் சேலம் செவ்வாய்ப்பேட்டை மகமாயி
வேத வேதாந்தத்தின் ஸாரமான அழிவற்ற உனதான்மாவை எனதாத்மாவென்று பராசக்தி உணர்த்திடம்மா
உனதான்ம சக்தியே ப்ரம்மத்தின் ஆதிசக்தி மகமாரியப்பா மறந்திடாதே
ஆத்தாள் மகமாரியைச் சரணடைந்தால் அறியாமை எரிந்து சாம்பலாகி விடும் மறந்திடாதே 55

ஈரேழுலகிற்கும் சாட்சியாக இருந்து வரும் உனது ஆத்ம சக்தியை நீ நம்பிடென்றாள் ஜகன்மாதா பராசக்தி
மனமாயைப் பேய் பிசாசுகளை பொசுக்கிச் சாம்பலாக்கும் மகமாரியை நீ நம்பிடப்பா மறந்திடாதே
அழிவற்ற சிவனுடலில் பாதியான பராசக்தியை நீயும் நம்பிடப்பா மறந்திடாதே
உனதுள் இருக்கும் தீய சக்திகளை எல்லாம் காட்டுத்தீயான மகமாரி எரித்திடுவாள் மறந்திடாதே 56

ப்ரபஞ்சத்தின் உள்வெளியில் ஊடுருவி இருந்து வரும் ப்ரம்மத்தின் சக்தி மகமாயியப்பா
இருப்பது அழிவற்ற பரம்பொருள் நீயும் அதுதான் என்றாள் ஆத்தாள் பராசக்தி
முப்பத்து முக்கோடி தெய்வத்தின் சக்தி மகமாயி என்பதை மனமே மறந்திடாதே
சச்சிதானந்த மயமான ப்ரம்ம சக்தி ஆத்தாள் மகமாரியப்பா மறந்திடாதே 57

புதுகை திருவக்கூர் மாரியம்மா எனக்குள் உன்னை நான் என்று உணர்ந்து கொள்ள எனக்கு நல்ல வரம் தருவாய்
கபடத்தை சூதை காம க்ரோதத்தை புதுவை பராசக்தி பொசுக்கிடுவாள்
பொய் பொறாமை பேராசைகளை தக்ஷின மஹாகாளி பொசுக்கிச் சாம்பலாக்கிடுவாய்
ஜனன மரண பயத்தையெல்லாம் சிவகாசி சிவசக்தித் தாயே சிதைத்து எரித்திடுவாய் 58

பாரினைக் காத்து ரக்ஷிக்கும் பராசக்தியின் உபதேசம் என்னவென்றால் கருணையிலும் பெரிய அறம் இல்லை என்பதாகும்
பாரிலுள்ள தாய்க்குலத்தில் அவதரித்த பராசக்தித் தாயான மகமாயியை உறுதியாய் நம்பிடப்பா
பாரெல்லாம் பராசக்தி உனது சக்திமயம் என்பதை எனக்குள் நான் என்று உணர மஹாமாயி வரமருள்வாய்
அகந்தையைப் பொசுக்கி இவனை உனது அறிவு மயமாக்கி விடுவாய் மகமாயித் தாயே மறந்திடாதே 59

உலகிலுள்ள ஆண்களையும் பெண்களையும் பராசக்தி உனது சக்தி மயம் என்று உணர எனக்கு வரமருள்வாய்
எனக்குள் உன்னை நான் என்றுணர இவனுக்கு வரமருள்வாய் என் தாயே மஹாகாளி
உலகில் அழிவற்ற ப்ரம்மத்தின் சக்தியே மகமாயி தாயப்பா மறந்திடாதே
நீர் நிலம் தீ வெளி காற்றாகி நிற்பனவும் நடப்பனவும் மகமாயி தானப்பா மறந்திடாதே 60

ஆதி அந்தமற்ற மயிலாப்பூர் முண்டகக்கண்ணி ஜகம் பொய் என தம்பட்டம் அடித்து விட்டாள் மறவாதே
நாமரூபமற்ற சென்னை முப்பாத்தா தேவியைப் பற்றிவிட்டால் பற்றற்று இருப்பாயப்பா
எங்கும் நிறைந்துள்ள மந்தைவெளித் தண்டுமாரியை மனமே மறந்திடாதே
நான் யாரென உன்னை நீ கேட்டிட்டால் உனக்குள் இருக்கும் ‘நான்’ ஒற்றைவாடை நாகம்மா என்று உன்னை உணர்வாயப்பா 61

ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்த ப்ரம்மத்தின் சக்தியெனப் போற்றும் பராசக்தியான மெய்ப்பொருளை மறவேன் யான்
உனதாத்மாவாய் பரமாத்மாவாய் அந்தராத்மாவாய் இருப்பவள் சேலம் உடையாப்பட்டி கருமாரி அப்பா மறந்திடாதே
பாலில் நெய் போல எனக்குள் ஊடுருவி இருந்து வரும் பராசக்தியான சேலம் கோட்டை பெரியமகமாயியை மறவேன் யான்
உலகில் ஆற்றல் மிக்க ஆயுதம் மன்னிப்பதாகும் என்றாள் தமிழகத்தின் தாயான மகமாரி 62

மோக்ஷத்தின் வித்தான பராசக்தி உன்னை நான் என்று எனக்குள் உணர்த்திடுவாய்
இவன் அகந்தையை வேரறுப்பாய் ரேணுகா தேவியான அம்மா மகமாயி மறந்திடாதே
ப்ரணவமயமான ப்ரம்ம பத்தினித் தாயே எனக்குள் உன்னை நான் என்று உணர்ந்திடச் செய்
அம்மா மகமாயி உனது நிஜஸ்வரூபத்தைஎனக்குள் நான் என்று அறிந்திடச் செய் 63

வாழ்வாவது மாயமென்று உபதேசித்த மகமாயை என்னையே நீ என்று நான் உணர எனக்கு வரமருள்வாய்
நீ வேறு நான் வேறு என்பது தான் அறியாமை ஆகுமென்றாள் வடமயிலை கோலவிழித் தாய்
நீயே நான், நானே நீ, என்று உணர்வது தான் மெய்ஞானம் ஆகுமென்றாள் ஆத்தாள் பராசக்தி
உலக மக்களுக்குள் ‘நான் நான்’ என்றிருப்பது தான் அழிவற்ற பரப்ரம்மம் என்றாள் பெரியபாளையத்து பவானித் தாய் 64

அஹிம்சையின் உருவமே ஆத்தாள் மகமாரியின் நிஜஸ்வரூபமாகுமப்பா மறந்திடாதே
சத்தியமே மகமாயியின் சத்யமான உருவமாகும் சத்தியமாய் நம்பிடப்பா
ஆதிசக்தி மகமாயி உனதுள் இருக்கும் அன்பு உருவமாகுமப்பா மறந்திடாதே
ஞான ஆனந்தத்தின் திருவுருவமே பராசக்தி மகமாயின் திருவுருவமாகுமப்பா மறந்திடாதே 65

உனதுள் இருக்கும் துக்கத்தை தரித்திரத்தை மஹாபயத்தை பொசுக்குபவள் மஹாகாளி ஆகுமப்பா
சென்னை நகர் காக்கும் சென்னம்மா தேவியே பக்தனை ரக்ஷிக்கும் பராசக்தி என்பதை மறந்திடாதே
சென்னை காளிகாம்பாவான பத்ரகாளி மகமாயி பிறவிப் பிணியான மஹாரோகத்தைப் போக்கிடுவாள் மறந்திடாதே
சென்னப்பட்டினத்தின் செருக்காளத்தம்மையே இச்சையை உண்டாக்கும் ஆசையைப் பொசுக்கிடுவாய் 66

ஆசையே உனது பிறவிக்கு வித்தாகும் என்று சொன்ன ஆத்தாள் மகமாயியை மறந்திடாதே
நாட்டிலுள்ள ஜாதி மதச் சண்டையெல்லாம் உனது மனமாயையின் வேலை என்றாள் மேல்மருவூர் புத்துமாரி
உலகில் ஜாதி இரண்டென்று சத்யமாய்ச் சொல்லிவிட்டாள் தமிழ்த்தாயான பத்ரகாளி மகமாயி
ஆண்பெண் ஜாதிகளே ப்ரபஞ்சத்தில் உண்மையென்றாள் ஆதிபராசக்தி மறந்திடாதே 67

பாரிலுள்ள ப்ராணிகளின் உயிர்க்கு உயிராய் இருந்து வரும் பராசக்தி மகமாயி அனுக்ரஹம் செய்திடுவாய்
ஆசாபாசமுள்ளவரை உனக்கு மனஅமைதி கிட்டாதென்றாள் ஆத்தாள் கன்னிகா பரமேஸ்வரித் தாய்
நிர்மலமான பரிசுத்த வாழ்க்கை நிராசைக்குள் இருக்குதென்றாள் தக்ஷிணகாளி
நிராசையுடன் தனது கடமையைச் செய்பவனே நித்யமுக்தன் ஆவான் என்றாள் சேலம் நகர் பத்ரகாளி 68

எனது கடமையைக் கட்டுப்பாட்டுடன் அடக்கத்தோடு செய்வதற்கு அம்மா அனுக்ரஹிப்பாய் மகமாயி
பூமா தேவியைப் போல் பொறுமையுடன் உனது கடமையைச் செய்வதொன்றே மாதவமாகுமென்றாள் ராஜபாளையத்து ராணிமகமாயி
மனம் வாக்கு காயத்தால் அஹிம்சையைப் பற்றிவிடு என்றாள் ஆத்தாள் அபிராமி மறந்திடாதே
மகனே அஹிம்சையைப் பற்றிக் கொண்டால் நீயும் முழு மனிதன் ஆவாய் என்றாள் மவுண்ட் ரோடு மகமாரியான ஆலையம்மா 69

மனமே உலகில் ஜீவனுள்ள அனைத்துயிர்களையும் சிவம் என்றாள் கருபாளையம் முடக்குமாரி மறந்திடாதே
உனது உடம்பில் மூச்சுள்ளவரை உண்மையைப் பேசுவதே நல்ல தவமாகும் என்றாள் பனையேறி எனப் போற்றும் பாரதத்தாய்
தங்கம்மையான ஆத்தாள் மகமாயி ப்ரபஞ்சத்தில் அனைத்துமாய் இருக்கின்றாள் மறந்திடாதே
உனது ஊனாய் உயிராய் உணர்வாய் உனக்குள் கலந்து இருந்து வரும் ஆத்தாள் மகமாயியை நம்பிடப்பா 70

இச்சை உள்ள வரை உன்னை மறுபிறவி பற்றும் என்றாள் ஆதிபராசக்தி கும்பாளம்மா மறந்திடாதே
ஆசை உனக்குள் இருந்ததாலே இந்த ஜன்மம் உனக்கும் வந்தது என்றாள் சேலம் புத்துமாரி
சுக துக்கமனைத்தும் பேராசையினால் வருகுதென்றாள் ஆத்தாள் மகமாரி
நீ பிறப்பதும் இறப்பதும் உனதுள் இருக்கும் ஆசையின் வேலையென்றாள் ஆளி நதிக் கரையிலிருக்கும் கருமாரி 71

உலகில் ஜாதிகளின் பெயர் சொல்லி சண்டையிட போதிப்பவனை சாம்பலாக்கும் சமையபுரம் மகமாயி கேட்டிடம்மா
பாரதமாதாவும் நீயே மற்றும் உலகத்திலுள்ள பராசக்தியும் நீதானம்மா
சண்டி சாமுண்டி பத்ரகாளி மகமாரியும் நீதானம்மா
இவ்வுலகிற்கு ஏற்புடைய செயலைச் செய்வதற்கு பராசக்தி இவனை ஈடுபடுத்திடுவாய் 72

ப்ரபஞ்சத்தில் உள்ள பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதமிலா மகமாயித் தாயை மனமே மறந்திடாதே
அஷ்டலக்ஷ்மியான அன்னையெலாம் ஆத்தாள் மகமாயி தானப்பா மறந்திடாதே
மஹிஷாசுரமர்த்தனியும் சேலம் ஸ்கந்தாஸ்ரமம் மஹாலக்ஷ்மி துர்க்கையும் மகமாயி தானப்பா மறந்திடாதே
விந்த்யாசலநிவாசினியும் சுவாசினியும் சுந்தரியும் மகமாயி தானப்பா மறந்திடாதே 73

ராஜராஜேஸ்வரியும் லலிதா மஹா த்ரிபுர சுந்தரியும் மகமாயி தானப்பா மறந்திடாதே
புவனத்தை உய்விக்க வந்த புதுக்கோட்டை புவனேஸ்வரியும் காசி விஸாலாக்ஷியும் மகமாயி தானப்பா மறந்திடாதே
காஞ்சி காமாக்ஷியும் மதுரை மீனாக்ஷியும் ஆன மகமாரித் தாயே கேட்டிடம்மா
அன்னபூரணித் தாயும் ஆதிபராசக்தி காமாக்யாதேவியும் நீதானம்மா 74

ஸ்ருங்கேரி சாரதாம்பிகையும் மூகாம்பிகாதேவியும் பராசக்தி மகமாயி தானப்பா மறந்திடாதே
ஆனந்த மயமான உனது ஆன்ம சக்தியாய் இருப்பவள் ஆத்தாள் மகமாயி என்பதை மனமே மறந்திடாதே
உலக மக்களின் ஆத்மசக்தியாய் இருந்து வரும் ஆதிபராசக்தி எனப்போற்றும் மகமாயித் தாயை கனவிலும் மறந்திடாதே
ஆதிபராசக்தியான மஹாமாயையே இவ்வுலகில் மகாமாரியாய் இருக்கின்றாள் மறந்திடாதே 75

சகல ரோகத்துடன் உனது கொடிய கோபத்தைச் சாம்பல் மயமாக்கும் சக்தி சமையபுரம் மகமாயியப்பா மறந்திடாதே
ஸ்தாவர ஜங்கமத்தின் உயிருக்குயிராய் இருந்து வரும் சக்தி மகமாயியை மனமே மறந்திடாதே
சதகோடி சூரியனைப் போல் உனதாத்மாவாய் ஜொலிக்கும் பராசக்தி மகமாயித் தாயை மறந்திடாதே
மனமே ஈரோடு சூரபட்டி எல்லையில் இருந்து வரும் சுயம்பு மயமான மாரியம்மா கேட்டிடம்மா 76

ஏ மனமே உனது மனமாயையைப் பொசுக்கிவிட இக்கணமே நீயும் சேலம் நகர்க் கோட்டை பெரிய மாரியம்மனைப் பற்றிடப்பா
ஆத்மசக்தியை இடைவிடாது நினைப்பதுவே அரிய தவம் ஆகுமென்றாள் விருதுநகர் மகாமாயி
பாவிகளை உய்விக்க பாரில் அவதரித்த மகாமாரியானவளை நம்பிடப்பா மறந்திடாதே
தாயே மகமாயி இவனை நன்னெறியில் இருத்தி வைத்து நல்லவனாக்கிடம்மா மறந்திடாதே 77

ஸர்வ மங்கள ஸ்வரூபியான சக்தி மகமாயியை சத்தியமாய் நம்பிடப்பா மறந்திடாதே
தமிழகத்தின் தெருவெல்லாம் மகமாரி கோவிலென்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி
ப்ரம்ம சக்தியாய் இருந்து வரும் பராசக்தியை உனக்குள் பற்றிவிட்டால் உனது ஆத்ம சக்தியை நீயும் உணர்வாயப்பா
உனது உயிர்க்குயிராய் இருந்து வரும் பராசக்தியை உனது ஆத்மசக்தியென்று நீயுணர உன்னை நான் யார் எனக் கேட்டிடப்பா மறந்திடாதே 78

முழுமுதற் கடவுளின் முப்பெரும் சக்தியெல்லாம் உனக்குள்ளே நான் என்றிருக்கும் மூலப்பொருளாகுமப்பா மறந்திடாதே
தத்துவத்தின் மெய்ப்பொருளான மகமாயி சத்திய மயமாகுமப்பா மறந்திடாதே
சித்ஸ்வரூபமான பராசக்தி மகமாயி இவனுக்குள் சித்தசுத்தியைத் தந்திடுவாய் மறந்திடாதே
நான் என்று உனக்குள் நீங்காது இருந்து வரும் ப்ரம்ம சக்தியான மகமாயித் தாயை மனமே மறந்திடாதே 79

உலகைக் காத்து கவனித்து அளித்தருளும் சக்தி உக்ரப் ப்ரத்யங்கிரா எனப் போற்றும் பத்ரகாளி ஆகுமப்பா மறந்திடாதே
இவன் பிறவிப் பிணி அகல சேலம் உடையாப்பட்டி கருமாரி இவனுக்கு அனுக்ரஹிப்பாள் மறந்திடாதே
சேலம் நகர் மகமாயி அடைமழை போல் இவனகத்துள் உனது திருவருளை பொருந்திடம்மா மறந்திடாதே
அண்டங்களைப் படைத்த ஆத்தாள் பன்னாரி மகமாயியை மனமே தினமும் மறந்திடாதே 80

அதர்மத்தை வேரறுக்க வந்த பரம்பொருளான பாரியூர் கொண்டத்துக் காளியம்மா கேட்டிடம்மா
மலைமகளாய் கலைமகளாய் அலைமகளாய் இருப்பவள் நீதானென்று தெரிந்துகொண்டேன்
பொய்யாயிணையும் உலகமெல்லாம் மனமாயை என்று உபதேசித்த மகமாயியை மனமே மறந்திடாதே
தாயே உனது குழந்தையிடம் குற்றம் குறைகளைப் பாராது நல்ல வரம் தந்திடம்மா மறந்திடாதே 81

மகாமாயே மகமாரி உலகம் உனது மாயஜாலம் என்று உணர்த்திடம்மா மறந்திடாதே
சேலம் புத்துமாரித் தாயே புவனத்தின் உயிரான பத்ரகாளியம்மா கேட்டிடுவாய்
தமிழர்களின் நல்ல தவத்திற்கு இரங்கி நல்லறிவைத் தந்திடம்மா மேல்மருவூர் புத்துமாரி மறந்திடாதே
கலியின் கொடுமையினால் மகமாயி உலக மக்களின் மனம் தடம் புரண்டு ஓடுதம்மா 82

பெரியபாளையத்து பெருந்தேவி மகமாயி உனது கருணையினால் இவன் மனத்தை அடக்கி ஆண்டிடுவாய் மறந்திடாதே
வடவேட்டி மகமாரித் தாயே நீயும் தமிழகத்தைக் காத்திடம்மா மறந்திடாதே
உலகம் நிறைந்த சமையபுரத்து மகமாயி உனது தமிழக மக்களுக்கு நல்லொழுக்கத்தை இக்கணமே அனுக்ரஹிப்பாய்
நீலகிரி பொக்காபுரம் மாரியம்மா இவன் மனத்தை நீ நல வழியில் செலுத்திடம்மா மறந்திடாதே 83

இவன் இருவினைகளையெல்லாம் ஸ்ரீவைஷ்ணவித் தாயான மகமாயி இக்கணமே துடைத்திடம்மா மறந்திடாதே
தீராத நோயெல்லாம் பாரதத்தில் புகழ்பெற்ற பன்னாரித் தாயே இக்கணமே தீர்த்து இவனை ரக்ஷிப்பாய்
தஞ்சை நகராளும் நல்லமுத்துமாரித் தாயே இவன் அகத்திலுள்ள கவலைகளை இக்கணமே போக்கிடம்மா மறந்திடாதே
சேலம் உடையாப்பட்டி கருமாரி இவன் அறிவை இக்கணமே வளமடையச் செய்திடம்மா மறந்திடாதே 84

மஹாசக்தியான பன்னாரி மகமாயித் தாயே எனது மனமாயையை துடைத்திட்டு இவனுள் நான் என்றிருப்பதை நீ என்று உணர்த்திடம்மா
ஈரோடு சூரப்பட்டி எல்லையில் இருந்துவரும் சுயம்புவான மாரியம்மா இவனுக்குக் குறைவற்ற செல்வத்தை குறைவின்றித் தந்திடம்மா
தொண்டைநாட்டைக் காக்கும் மகமாயி உனது மக்களின் மனக்குறைகளைப் போக்கிடம்மா
கொங்கு நாட்டை தனக்குக் கோவிலாக்கிக் கொண்ட பத்ரகாளியான மகமாயி உனதருளைத் தமிழகத்தில் மாரி போல் பொழிந்திடுவாய் 85

உலகிலுள்ள தமிழகத்தில் மகமாயி வேப்பிலையில் இருக்கின்றாள் மறந்திடாதே
உலகிலுள்ள தமிழகத்தில் மகமாயி மஞ்சள்நீரில் இருக்கின்றாள் மறந்திடாதே
உலகிலுள்ள தமிழகத்தில் மகமாயி நல்லநாகப்பாம்பாய் இருக்கின்றாள் மறந்திடாதே
உலகிலுள்ள தமிழகத்தில் மகமாயி மக்களின் மாதாவாய் இருக்கின்றாள் மறந்திடாதே 86

பாரிலுள்ள பாவிகளை உருக்கி வார்த்து ரக்ஷிக்கும் பன்னாரி மகமாயி கேட்டிடம்மா
நீசனையும் மேன்மகனாக்குவிக்கும் உடையாப்பட்டி கருமாரி இவனை மாமனிதனாக்கிடுவாய்
மகமாரி பெயர் சொன்னால் நீ செய்துள்ள கொடிய பாவமெல்லாம் எரிந்து சாம்பலாகுமப்பா மறந்திடாதே
மகமாயியைப் பற்றிவிட்டால் உனது மன அழுக்கு மறைந்துவிடும் மறவாதே மறவாதே 87

உலகில் இருந்து வரும் உயிர்களெல்லாம் மகமாரியின் உயிராகுமப்பா மறந்திடாதே
மகமாயித் தாயே உனது ஞானத் தீக் கொண்டு இவன் ஆணவத்தை வறுத்திடுவாய் மறந்திடாதே
இவனை நன்னெறியில் இருத்திவைப்பாய் புதுவைநல்லமுத்து மாரியம்மா மறந்திடாதே
ராசிபுரம் மகமாயி உனதருளை இவனகத்துள் கடல் போல் பொங்கிடச் செய்திடுவாய் மறந்திடாதே 88

தமிழகத்தில் எலுமிச்சம்பழமாக இருந்து வரும் மகமாயி உன்னைப் பூஜிக்க வரமருள்வாய் மறந்திடாதே
பில்லி சூன்யம் பெரும் பூதப் பேய் பிசாசை உடையாப்பட்டி கருமாரி உடனடியாய் விரட்டிடம்மா
பொங்கி வரும் துஷ்ட தேவதைகளைப் பொடியாக்கும் சேலம் பெரிய கோட்டை மகமாயி கேட்டிடம்மா
இவன் கஷ்டங்கள் விலகியோட மகமாயி மஞ்சள் நீர் வேப்பிலையில் வந்திடுவாய் மறந்திடாதே 89

அங்கிங்கெனாதபடி நிறைந்துள்ள தாயே மகமாயி இவன் ஆசைகளைப் பொசுக்கிடம்மா மறந்திடாதே
கொங்குதேசமெங்கும் குடியிருக்கும் மகமாயி இவன் பிறவிப் பிணியைப் பொசுக்கிடம்மா மறந்திடாதே
ஈரேழுலகம் நிறைந்த மகமாயி இவன் அறியாமையை எரித்திடுவாய் மறந்திடாதே
கரகமெடுத்து நெருப்பில் விளையாட வைக்கும் கோபிநகர் குண்டத்துக் காளியம்மா கேட்டிடம்மா 90

ஆதிபராசக்தியெனப் போற்றும் பன்னாரி மாரியம்மா இவன் இதையத்தை உனது திருக்கோயிலாக்கிக் கொண்டிடம்மா
மதுரை தெப்பக்குளம் மாரியம்மா இவன் மனமாசுகளைப் பொசுக்கிடம்மா மறந்திடாதே
பேரின்பத்தில் இவனை இக்கணமே இருத்திவிட சேலம் நகர் நிறைந்த மகமாயி ஓடோடி வந்திடுவாய்
பதினாயிரம் கண்ணுடைய சேலம் உடையாப்பட்டி தங்கக் கருமாரி உனது கடைக் கண்ணால் இவனைப் பார்த்திடம்மா 91

பாரதத் தாயான பராசக்தி மகமாயி பேதமற்ற பரம்பொருள் நீயென்று உணர்த்திடம்மா மறந்திடாதே
இவன் அறியாமையை அகற்றி அழிவற்ற உனது உருவை இவனுள்ளத்தில் உணர்த்திடம்மா மகமாயி மறந்திடாதே
கயிற்றில் கண்ட பாம்பைப் போல் உலகைக் கண்டு வர வரமருள்வாய் பட்டுக்கோட்டை நாடியம்மா
மனமே உலகம் ஒரு நாடகமப்பா நாடகத்தை உண்மை என்று நம்பி மோசம் போய் விடாதே ஜாக்ரதை 92

காலனுக்கு வசமாகும் உலகை நம்பி நீயும் மோசம் போய் விடாதே மனமே மறந்திடாதே
உலகைப் பகல் கனவென்று உண்மையாக நம்பிடுவாய் மனமே மறந்திடாதே
பந்தபாசத்தை உண்டாக்கும் இவ்வுலகில் நீ பார்ப்பதொன்றும் சத்யமில்லை மனமே மறந்திடாதே
மனமாயையை நீ வெல்வதற்கு உனக்குள் பாஞ்சாலங்குறிச்சி ஜக்கம்மாவான மகமாயியை மனமே உண்மையாய் நம்பிடுவாய் மறந்திடாதே 93

ஆதிபராசக்தியே சண்டி சாமுண்டீஸ்வரி மகமாயி மனமே மறந்திடாதே
ப்ரத்யங்கிரா பத்ரகாளி பாலா பகவதியே மகமாரித் தாயாவாள் மனமே மறந்திடாதே
காளராத்ரியான கருமாரி சேலம் ஸ்கந்தாஸ்ரமம் மஹாலக்ஷ்மி துர்க்கை அம்மா இவ்வுலகின் உண்மையை உணர்த்திடம்மா
உலகத்தின் தீமைகளை சேலம் உடையாப்பட்டி கருமாரி அரைநொடிக்குள் எரித்திடம்மா 94

ஈரேழுலகெங்கும் மெய்ப்பொருளாய் நிறைந்திருக்கும் மகமாயி தேவியை மனமே மறந்திடாதே
உனது கண்களால் உலகில் நீ காண்பதெல்லாம் சக்தி மயமாகுமப்பா மறந்திடாதே
மனஅமைதிக்கு மாமருந்து மாரியம்மனை முழுமனத்துடன் பற்றிடுவாய்
ஆதிபராசக்தித் தாயே உனது நாம மஹாமந்திரம் மனஅமைதிக்கு மருந்தாகுமென்று மகரிஷிகள் சொன்னார்கள் 95

மனிதனை மாமனிதனாக்குவிக்கும் பராசக்தியை உண்மையாய் பற்றிடப்பா மறந்திடாதே
பராசக்தியின் திருவடிப் பற்று முற்றிலும் உன்னைப் பற்றற்றவனாக்கிவைக்கும் மறந்திடாதே
உலகில் உணமையாய் இருப்பதெல்லாம் மகமாயி என்பதை நீயும் மறந்திடாதே
மகமாரித் தாயே உன்னை இவன் ஆத்மசக்தியென்று உணர்த்திடுவாய் மறந்திடாதே 96

மகமாயித் தாயே இவனகத்துள் நீயும் மகாமாயையெனப் போற்றும் மகாகாளியாய் இருப்பதை உணர்த்திடுவாய்
ஈரேழுலகெங்கும் மகமாயி தானப்பா மறந்திடாதே மறந்திடாதே
ஆத்தாள் மகமாயி உனக்குள் நான் என்று இருக்கின்றாள் நீயும் மறந்திடாதே
இவன் மனமாயையை மாய்த்துவிட மகமாரி இவனகத்துள் இவனறிவாய் இருந்திடுவாய் மறந்திடாதே 97

ஆதிபராசக்தித் தாயே இவன் உடம்பெனும் கோவிலுக்குள் இவன் உயிராய் அறிவாய் அன்பாய் உன்னை உணர்த்திடம்மா
மனமே உனதுயிராய் உனதறிவாய் உனதான்மாவாய் மகமாரி இருக்கின்றாள் மறந்திடாதே
உலகில் அரக்க குணமுடையவனை உருக்கி வார்க்கும் சேலம் நகர் பத்ரகாளி கேட்டிடம்மா
இவன் அகந்தையை எரித்திடுவாய் ஆதிபராசக்தித் தாயே மகமாயி மறந்திடாதே 98

ஆதிபராசக்தியெனப் போற்றும் அகிலாண்டேஸ்வரித் தாயே உலகில் யாவுமாய் யாவருமாய் இருக்கின்றாள் மறந்திடாதே
ஆதிபராசக்தியை சத்தியமாய் நம்பினவன் கெடுவதில்லை என்பது நான்குமறை முடிவாகுமப்பா மறந்திடாதே
காரைக்குடியில் குடியிருக்கும் கொப்புடையம்மா கொடியவனை ரக்ஷிப்பாய் மறந்திடாதே
அழிவற்ற உனது ஆத்மசக்தியே சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தின் மஹாலக்ஷ்மி துர்க்கை அம்மா மறந்திடாதே 99

குமாரி குண்டலினி கௌரி காத்யாயனியான மகமாயித் தாயே கேட்டிடம்மா
வராகி பைரவியே மகமாயி மறவாதிவனைக் காத்திடுவாய்
காசி விசாலாக்ஷி காமாக்ஷி மீனாக்ஷித் தாயே காத்திடுவாய் இவன் நாட்டினையும்
தக்ஷிணகாளியான தாயே மகமாயி இக்கணமே தந்திட்டேன் என்னை உனக்கு 100

ஜெயதுர்க்கே ஜெயா விஜயாவெனப் போற்றும் மகமாயி உன்னைத் தந்திடம்மா எனக்கு
மாகாளிக்குடி மஹாகாளியான தாயே மூகாம்பிகைத் தேவியே இவனிடமுள்ள இருவினைகளுடன் மும்மலத்தை அகற்றி விடம்மா
வாகீஸ்வரித் தாயே மகமாயி இவன் வாக்கில் அமர்ந்திட்டு உனது அருள்வாக்கை மாரி போல் பொழிந்திடுவாய்
சேலம் மாவட்டத்திலுள்ள புத்துமாரி முத்துமாரித் தாயே இவன் மனம் தன்னலம் நாடாதிருக்க வரமருள்வாய் 101

சேலம் கன்னிமார் ஓடையில் சப்தமாதாவெனப் போற்றும் சக்தி தேவியை மகமாரியென்று அறிந்து கொண்டேன்
மஹிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியே இவன் ஆசைகளை இக்கணமே வதம் செய்வாய்
படைவீட்டில் இருக்கும் ரேணுகாதேவியே பறந்தோடி வந்திட்டு இவனை சிவமயமாக்கிடம்மா
உஜ்ஜயினி மஹாகாளி ஓடோடி வந்திட்டு உனது மஹாமந்திரத்தை இவனுக்குத் தந்திடுவாய் 102

வேதம் நான்கிலும் மெய்ப்பொருளான தாயே மகமாயி இவன் தரித்திரத்தை ஓட்டிடம்மா
கேரளத்தின் பகவதியே தமிழகத்தின் த்ரௌபதியே அன்புடன் தயை புரிவாய் மறந்திடாதே
நவமாரி சிவமாரியான தாயே இவன் சினத்தை இக்கணமே எரித்திடுவாய் மறந்திடாதே
தண்டுமாரி தவமாரி சேலம் உடையாப்பட்டி கருமாரி உனது திருவருளை மாரிபோல் பொழிந்திடம்மா 103

ஆதிமூலமான சேலம் உடையாப்பட்டி மகமாயித் தாயே அருட்பெருஞ்ஜோதியானவளே உன்னை மறவேன் யான்
தமிழகத்தின் திசைகள் தோறும் மகமாயி கோயிலப்பா மறந்திடாதே
சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தின் ஜகஜ்ஜோதிர் மயமான மஹாலக்ஷ்மி துர்க்கே கேட்டிடம்மா
மஞ்சள்நீர் வேப்பிலையில் மகிழ்வோடிருந்துவரும் சேலம் உடையாப்பட்டி கருமாரி கேட்டிடம்மா 104

பதினாயிரம் கண்ணுடைய பாரதத்தின் பத்ரகாளி உலகில் விலை மதிப்பற்ற உனது உயிர்களைக் காத்திடம்மா
கற்பின் கனல் நிறைந்த கண்ணகியும் மகாமாரி தானப்பா மறந்திடாதே
விறகினுள் தீயாயும் பாலினுள் நெய்யாயும் உடம்பினுள் உயிராய் இருந்து வரும் தாயே மகமாயி தத்துவ ஞானத்தை உணர்த்திடம்மா
தமிழகத்தின் தாயே செங்கன்னூர் பகவதியே இவனை இன்பதுன்பமற்ற இடத்தில் இருத்தி வைப்பாய் 105

கொடுங்கோளூர் பகவதியே மனஅமைதியைத் தந்து இவனை உனது பக்தனாக்கிக் கொண்டிடம்மா
மங்களூர் மங்களா தேவியே இவன் தன்னம்பிக்கையுடன் இருந்துவர மனவுறுதியைத் தந்திடம்மா மறந்திடாதே
பாரதத்தின் பத்தினி தெய்வமே பற்றற்ற வாயுவைப்போல் இவனை இருந்திடச் செய்திடம்மா
பாரதத்தின் தாயான சமையபுரத்தாளே உலகில் ஜாதி இரண்டென்று அறுதியிட்டு சொல்லிவிட்டாள் நம்பிடுவாய் 106

தஞ்சை புன்னைநல்லூர் மகமாயி இவன் அகத்திலுள்ள உனது ஞானக் கண்ணைத் திறந்திடம்மா
பல்லாயிரம் கண்ணுடைய திருச்சி முத்துமாரி இவனை தைரிய புருஷனாக்கிடம்மா
நெரூர் அவதூத மஹாபுருஷன் புகழ்ந்து போற்றியுள்ள தஞ்சை புன்னைநல்லூர் முத்துமாரி இவன் மமதையைப் பொசுக்கிடம்மா
நாகப்பட்டினம் மகமாயி இவனுக்கு நீ நல்லறிவைத் தந்திடம்மா மறந்திடாதே 107

கொல்லங்கோட்டு பகவதியே இவன் ஊழ்வினையை உடனடியாய் எரித்திடம்மா மறந்திடாதே
பட்டுக்கோட்டை நாடியம்மா பூமாதேவியைப் போல் இவனுக்குப் பொறுமையைத் தந்திடம்மா
புதுச்சேரி முத்துமாரி உனது அடிமையின் லக்ஷியத்தை அறநெறியில் இருத்திடுவாய்
சென்னைத் தண்டு மாரித் தாயே இவனுக்கு உனது உத்தமர்களின் உறவைத் தந்திடம்மா 108

த்யாகராஜா குடியிருக்கும் திருவாரூரைக் காத்து வரும் மகாமாயி நற்குணத்தை இவனுக்கு இக்கணமே தந்திடம்மா
இலங்கை நகர் மகமாரி இவனைப் பாரில் புகழ்பெறச் செய்திடம்மா மறந்திடாதே
மைசூர் சாமுண்டேஸ்வரித் தாயே உலகில் உள்ள ஜாதிமத வெறிகளைச் சுட்டெரித்து சாம்பலாக்கிடம்மா
மஹிஷாசுரமர்த்தினியே இவனைக் கெடுக்கும் மனமாயைப் பேயைப் பொசுக்கிடம்மா மறந்திடாதே 109

பொள்ளாச்சி மகமாரித் தாயே உனது திருவருள் மயமாக இவன் மனத்தை இக்கணமே மாற்றிடம்மா
செட்டிநாட்டிலிருந்து வரும் கொப்பனாப்பட்டி மகமாரித் தாயே உனது மகனின் புகழை உலகம் அறிந்திடச் செய்திடம்மா
நாட்டுக்கோட்டை ராயபுரத்தாளே தமிழகத்தின் மக்களை நல்வழியில் செலுத்திடம்மா
சென்னை சூளையில் குடியிருக்கும் மகமாயி இவனிடமுள்ள கேடுகளை இக்கணமே களைந்திடம்மா 110

அங்காளபரமேஸ்வரித் தாயே இவன் மனம் மொழி மெய்களை உனது மயமாக்கிக் கொண்டிடம்மா
திருவல்லிக்கேணி எல்லையம்மா இவனுடையதெல்லாம் இக்கணமே உன்னுடையதென்று உணர்த்திடம்மா
திருஅண்ணாமலை அருகிலிருக்கும் ரேணுகாதேவித் தாயே இவன் இதயத்துள் அழிவற்ற ஜோதியாய் நீ இருந்திடம்மா
இருக்கங்குடி பரமக்குடி உரப்பள்ளி மகமாயி இவ்வுலகை காணல் நீரென்று உணர்த்தி வைப்பாய் 111

திருஆமாத்தூர் மகமாயி இவனைத் திக்குகள் பத்தும் இருந்து காத்திடுவாய்
கர்நாடக பனசங்கரித் தாயே வாக்தேவியாய் நீயிருந்து இவன் வாக்கினைக் காப்பாயம்மா
நாமக்கல் நரசிம்ஹத்துடன் இருக்கும் மஹாலக்ஷ்மித் தாயே இவனிடமுள்ள தரித்திரத்தை ஒழித்திடம்மா
சேந்தமங்கலம் தத்தகிரி முருகனுடனிருக்கும் அகஸ்தியர் வழிபட்ட வனதுர்க்கா தேவியே இவன் கொடிய வறுமையைப் பொசுக்கிடம்மா 112

தூத்துக்குடி சிவகாசி சீர்காழி சிதம்பரம் நகர் காக்கும் மகமாயி இவன் விரோதிகளின் மனத்தை இக்கணமே மாற்றிடம்மா
மாயவரம் தருமை ஆதீனத்துள் இருக்கும் ஸ்ரீ வன துர்க்கா தேவியே இவனுள் இருக்கும் வஞ்சனையைப் பொசுக்கிடம்மா
அகஸ்தியர் வழிபட்ட சேந்தமங்கலம் ஸ்ரீ தத்தகிரி வனதுர்க்காம்பிகையே இவனை சொக்கத் தங்கமாக்கிடம்மா
கொள்ளிடக் கரை மகமாயி குடவரசித் தாயே இவன் சம்ஷயத்தை பொசுக்கி பரிசுத்தனாக்கிடம்மா 113

அஷ்ட பைரவித் தாயே உலக மக்களிடமுள்ள உடமை உடல் உயிர் எல்லாம் உனது மயமென்றறிந்திடச் செய்திடம்மா
சென்னை நகர்க் காக்கும் முண்டகக்கண்ணியம்மா இவனுக்கு இக்கணமே நல்லொழுக்கத்தை தந்து இவனை நல்லவனாக்கிடம்மா
சென்னைப் பட்டினத்து முப்பாத்தா தேவியே நல்லதொன்றையே இரவுபகல் நினைக்க வரமருள்வாய்
பட்டினத்தின் பாதாளப் பொன்னித்தாயே இவனுள் இருக்கும் மனமாசுகளைப் பொசுக்கிடம்மா மறந்திடாதே 114

சென்னை வடமயிலை கோலவிழித் தாயே இவன் மமதையைப் பொசுக்கிடம்மா
மந்தைவெளி தண்டுமாரி இவன் ஆத்மசக்தியை மகமாயியென்று உணர்ந்திடச் செய்திடம்மா
தேனாம்பேட்டை மகமாரி இவன் இவனகத்துள் நான் என்று உணர்த்தி வைப்பாய் மறந்திடாதே
யானைக்கவுணி நாகம்மா இவன் மனத்தை இக்கணமே அழிவற்ற சிவமயமாக்கிடம்மா 115

சென்னை நகர் சென்னம்மா இவனகத்துள் மறை போற்றும் மெய்ப்பொருளை நான் என்று உணர்த்திடம்மா
சென்னைப் பட்டினத்தை காக்கும் காளிகாம்பா அழிவற்ற இவன் ஆத்மாவை ஸ்ரீ பத்ரகாளி என்று உணர்த்திடம்மா
திருச்சூர் திருப்பறையார் பகவதியே இவனுக்கு மனமௌனத்தை தந்திடம்மா
பெரியபாளையத்துத் தாயே சோட்டானிக்கரை பகவதியே இவனுக்கு இனிப் பிறவா வரம் தருவாய் மறந்திடாதே 116

இஷ்ட சித்தி தரும் ஸ்ரீ பத்மாவதித் தாயே அஷ்ட லக்ஷ்மியை இவனுடன் இருத்தி வைப்பாய்
நாகம் குடை பிடிக்கும் சேலம் உடையாப்பட்டி கருமாரி மக்களின் மனத்தைக் காத்திடுவாய்
மேல்மருவூர் ஆதிபராசக்தித் தாயே தமிழகத்தில் நல்ல தர்மத்தை நிலை நிறுத்திடம்மா
ஸ்வயம்பு மயமான மருவத்தூர் பராசக்தி உனது மக்களின் அறியாமையைப் பொசுக்கிடம்மா 117

மண்டைக்காடு கொல்லம் கோட்டையம் பகவதியான பரமேஸ்வரித் தாயே இவன் கல் மனத்தைக் கரைத்திடம்மா
வாசவியெனப் போற்றும் கன்னிகாபரமேஸ்வரியே இவனுக்கு நல்ல அறவாழ்வை அனுக்ரஹிப்பாய் மறந்திடாதே
திருச்சி இளங்கன் மகமாயியெனப் போற்றும் அழிவற்ற பராசக்தி இவனை பரப்ரம்மமென்று உணர்த்திடம்மா
ஏ மனமே சென்னை சின்னக்கடை மகமாயியை மயிலஞ்சந்தை மாரியம்மனை அழிவற்ற உனது ஆத்மசக்தியென்று உணர்த்திடம்மா 118

அழிவற்ற சிவமெனப் போற்றும் சிவசக்தி மயமான மகமாயியி இவன் சிந்தையில் நீயிருந்திடம்மா
மனமே ப்ரம்ம சைதன்ய ஸ்வரூப மயமான பராசக்தியே மகமாயி என்பதை மறந்திடாதே
சேலம் செவ்வாய்ப்பேட்டை மகமாயி உனது உயிர்க்குயிராய் இருப்பதை மறந்திடாதே
அழிவற்ற செல்வத்தை மாரி போல் பொழிந்திடுவாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி தேவி அப்பா மறந்திடாதே 119

பக்திக்கும் சக்திக்கும் முக்திக்கும் வித்தான மகமாயியைப் பற்றிவிட்டால் நீயும் பாரில் புகழ் பெறுவாய் மறந்திடாதே
பிறவிப் பயன் எல்லாம் ஒருங்கே தரவல்ல பரப்ரம்மத்தின் சக்தி மகமாரியப்பா மறந்திடாதே
கேரளத்தின் பகவதியே பாரதத்தின் தாயப்பா மறந்திடாதே
ஓங்காரி வாராஹி பைரவி பகமாலினியே மகமாரி ஆவாளப்பா மறந்திடாதே 120

தாயே உனது நெற்றிக்கண் கொண்டு பார்த்து இவன் நினைப்புகளை எரித்திடம்மா மறந்திடாதே
அழிவற்ற ஞானம் இவன் அகத்துள் நான் என்றிருப்பதை மகமாயி எனக்குள் உணர்த்தி வைப்பாய்
மஞ்சள்நீர் வேப்பிலையுடன் மக்களை நெருப்பில் விளையாட வைக்கும் பாரியூர் கொண்டத்துக் காளி மகமாயி கேட்டிடம்மா
சப்தமாதாவெனப் போற்றும் சப்த கன்னிகைகளும் சாமுண்டி தேவியும் மகாமாரியம்மன்ப்பா மறந்திடாதே 121

உனது நாட்டு மக்களை ஞானச் செம்மல்கள் ஆக்கிடுவாய் ஆதிபராசக்தியம்மா
மனமே உனது அன்பிற்கும் அறிவிற்கும் உயிருக்கும் அடித்தளமாயிருந்து வரும் மகமாயி உனது ஆத்மசக்தி ஆகுமப்பா
வேதாகம புராணம் போற்றும் பராசக்தி மகமாயி உன்னைச் சரணடைந்தேன்
பாரதத்தாயே மகமாயி இவன் நாட்டை எழிலுடன் உலகில் ஏற்றமடைந்திடச் செய்திடுவாய் 122

தமிழகத்தின் தாயே மகமாயி தமிழகத்தில் நல்ல ஸ்வதர்மம் தழைத்தோங்கிடச் செய்திடம்மா
தமிழகத்தை புனித மயமாக்கும் தாயே மகமாயி இவனகத்துள் உன்னை இருத்தி வைத்திடம்மா
ஆதிபராசக்தி அடியேன் இடைவிடாது ஆன்மவிழிப்புடன் இருந்திடச் செய்திடம்மா
இவன் ஆத்ம சக்தியாய் இருந்து வரும் மகமாயித் தாயே உன்னைச் சரணடைந்தேன் இவனை உனது மயமென்று உணர்ந்திடச் செய் 123

தஞ்சை நகர்க் காக்கும் தாயே முத்துமாரி உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் நீ தானம்மா
சமையபுரம் மகமாயி நீயே கருமாரி காளி சாமுண்டேஸ்வரி என்றறிந்தேன்
வைஷ்ணவி வாராஹி நாரசிம்ஹியான மகமாரி எனக்குள் உன்னை நான் என்று உணர்த்திடம்மா
அதர்வண பத்ரகாளியான ஆதிசக்தி மகமாயி என்னை உன்னுடன் ஒன்றாக்கிடம்மா 124

பச்சைக்கிளியுடைய பச்சையம்மனான தாயே இவன் கொடிய பாவத்தைப் பொசுக்கிடம்மா
மலையாள பகவதியே இவன் மனத்தை உனது திருவடியில் உறுதியாய் இருத்தி வைத்திடம்மா
சோட்டானிக்கரை பகவதியே இவன் சோகமோகத்தை துடைத்துக் காத்திடம்மா
கொல்லம் கோட்டையத்தின் பகவதியே இவன் காம க்ரோதத்தை எரித்திடம்மா மறவாதே 125

ஆதிபராசக்தியான புன்னைநல்லூர் முத்துமாரி உனது திருவடியை உறுதியாய்ப் பற்றிவிட்டேன் கேட்டிடம்மா
அம்மையே மனமிரங்கி உனது மஹாமந்திரத்தை அடிமைக்கு உபதேம் தந்திடம்மா
மகனே ஈரேழுலகத்தின் தாயான பராசக்தியின் மஹாமந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ என்பதை உனக்குள் இருத்திவிட்டேன்
‘ஓம் க்லீம் ஓம்’ என்று நீயும் முழுமனத்துடன் உறுதியாய் ஜபம் செய்திடப்பா 126

சத்தியத்தின் உருவமான சமையபுரத்தாளின் சத்தியமான மந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ என்பதை மகனே மறந்திடாதே
ப்ரம்ம சக்தியான தஞ்சை முத்துமாரியம்மனின் மஹாமந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ ஆகுமப்பா
மஹாமாயையான மகமாயி தேவியின் ‘ஓம் க்லீம் ஓம்’ என்ற மஹாமந்திரத்தின் சக்தி சொல்லுக்கடங்காதப்பா
ப்ரபஞ்சத்தின் உயிர்களுக்குள் ஊடுருவி இருப்பவள் பரப்ரம்மத்தின் சக்தியப்பா 127

ஈரேழுலகமாய் இருந்து வரும் பராசக்தி ‘ஓம் க்லீம் ஓம்’ என்ற மந்திரத்துள் அடக்கமப்பா
ஆயி மகமாயி அங்காளபரமேஸ்வரி ஆத்தாள் கருமாரியின் மந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ என்பதை மறந்திடாதே
ஈரேழுலகெங்கும் பூரணமாய் நிறைந்துள்ள ப்ரம்மசக்தியின் மந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ என்பதை சத்தியமாய் நம்பிடப்பா
ஸர்வ சைதன்ய ஸ்வரூபமான அழிவற்ற ப்ரம்மசக்தி உனது ஆத்மாவிற்குள் உண்மையாய் இருக்குதப்பா மறவாதே 128

ஏ மனமே உனதுடம்பை கருங்கல் மலை போல் அசைவற்று நிறுத்தி வைத்திட்டு
உனதகத்துள் ‘ஓம் க்லீம் ஓம்’ என்ற மந்திரத்தை உறுதியாய் ஜபம் செய்வாயப்பா
‘ஓம் க்லீம் ஓம்’ என்ற மந்திர ஜபம் உன்னை அழிவற்ற ப்ரம்மத்தின் சக்தியென்று உணர்த்தி வைக்கும்
‘ஓம் க்லீம் ஓம்’ என்ற அழிவற்ற மஹாகாளியின் மஹாமந்திரம் உன்னை பராசக்தி மயமாக்கும் மறந்திடாதே 129

‘ஓம் க்லீம் ஓம்’ என்று அகத்துள் ஜபம் செய்வாயானால் உனதான்ம சக்தியை நீயும் ப்ரம்ம சக்தியென்று உணர்வாய்
‘ஓம் க்லீம் ஓம்’ என்று உனது மூச்சை உள்ளே வாங்கி விட்டால் உனதான்மாவை நீயும் ஸ்வயம்ப்ரகாசமாய் உணர்வாய்
உனது இருபுருவத்தின் நடுவில் ‘ஓம் க்லீம் ஓம்’ என்ற மந்திரத்தை உறுதியாய் இருத்திவிட்டால் உனக்குள் பேரின்பம் பெருக்கெடுக்குமப்பா
உனது இதயத்துள் ‘ஓம் க்லீம் ஓம்’ என்ற மந்திரத்தின் நிஜஸ்வரூபம் உண்மையாய்
இருக்குமானால் உன்னை அழிவற்ற பரஞ்ஜோதிர் மயமாக்கிவிடும் 130

‘ஓம் க்லீம் ஓம்’ என்று அக்ஷரம் மூன்று கோடி அகத்துள் ஜபம் செய்வாயானால் ஆதிபராசக்தியை உனது ஆத்மசக்தியாய் உணர்வாயப்பா
ப்ரம்ம சக்தியே நான், நானே ப்ரம்ம சக்தியென்று உனக்குள் உணர்த்தி வைக்கும் மஹாமந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ ஆகுமென்பதை மனமே மறந்திடாதே
அழிவற்ற பராசக்தியான மகமாயியின் மஹாமந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ என்பதை உறுதியாய் நம்பிடுவாய்
உன்னை ப்ரம்மானந்தமயமாக்கும் மஹாகாளியின் மஹாமந்திரம் ‘ஓம் க்லீம் ஓம்’ என்றாள் ஆதிபராசக்தி மறந்திடாதே 131

மனமே மஹரிஷிகள் போற்றியேத்தும் மஹாமாயையான மகமாயி மந்திரத்தை மஹாகாளி உனக்கு அனுக்ரஹம் செய்துவிட்டாள் மறந்திடாதே
முக்திக்கு வித்தான மஹாகாளி மஹாமந்திரம் உனது சித்தத்தில் குடியிருக்கும் அழிவற்ற சிவபரம்பொருள் ஆகுமப்பா
அழிவற்ற பரப்ரம்மத்தின் சக்தி ஆத்தாள் மஹாமாயையான மகமாயி ஆகுமப்பா மறந்திடாதே
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த சக்தி அழிவற்ற ப்ரம்மத்தின் சக்தியான மகமாயி தானப்பா மறந்திடாதே 132

உனது இதயத்துள் ஆன்மாவெனப் போற்றும் நாம ரூபமற்ற அழிவற்ற பரம்பொருளே மஹாமாயையான மகமாயி மறந்திடாதே
எல்லாம் வல்ல ப்ரபஞ்சத்தின் பகவதியே இவன் உடலை உனது கோவில் ஆக்கிக் கொண்டிடம்மா
ஆதிபராசக்தி எனப் போற்றும் மகமாயி தேவியின் சக்தி சொல்லுக்கடங்காதப்பா மறந்திடாதே
ஈரேழுலகில் இருந்து வரும் சக்தியெலாம் மாரியம்மனின் மஹாசக்தி என்பதை மனமே மறந்திடாதே 133

ப்ரபஞ்சத்தைப் பொய்யாக்கி உனக்குள் ப்ரம்மத்தை நான் என்று உணர்த்தி வைக்கும் சேலம் உடையாப்பட்டி கருமாரி கவசமப்பா மறந்திடாதே
சத்திய ஸ்வரூபமான கருமாரி உனக்குள் மெய்ப்பொருளான சத்தியத்தை உணர்த்தி வைப்பாள் மறந்திடாதே
ஆதிபராசக்தியான மகமாயி உனக்குள் ஞான மயமாயிருப்பதை உணர்த்தி வைப்பாள் மறந்திடாதே
அழிவற்ற ஆனந்த மயமான மஹாகாளி உனது அறிவு மயமாய் இருப்பதை உணர்த்தி வைக்கும் கருமாரி கவசத்தை மறந்திடாதே 134

அன்பு மயமான சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தின் மஹாலக்ஷ்மி துர்க்கை அன்பே அழிவற்ற கடவுள் என்று உனக்குள் உணர்த்தி வைப்பாள் மறந்திடாதே
நல்லதை நினைத்திடவும் நல்லதைப் பேசிடவும் நல்லதை செய்திடவும் சேலம் உடையாப்பட்டி மகமாயி உனக்கும் வரமருள்வாள் மறந்திடாதே
எங்கும் நிறைந்துள்ள மகமாயியின் சக்தியை உலகில் உயிருள்ள பெண்களிடம் இருந்து வரும் ப்ரம்ம சக்தியென்று நம்பிடப்பா
ஹரிஹரப்ரம்மாவின் ஆன்மசக்தியாய் இருந்து வரும் ஆத்தாள் மகமாயியை உலகிலுள்ள பெண்களென்றும் நம்பிடப்பா மறந்திடாதே 135

கலியுகத்தை நீவெல்வதற்கு சேலம் உடையாப்பட்டி கருமாரி அம்மனின் கவசத்தை உனது அகத்தில் இருத்திடப்பா மறந்திடாதே
மனமே கலியுகத்தை நீவெல்வதற்கு சேலம் உடையாப்பட்டி கருமாரி மந்திரத்தை உண்மையாய் நம்பிடப்பா
கலியுகத்தை நீவெல்வதற்கு பராசக்தி மயமான சேலம் உடையாப்பட்டி கருமாரி அம்மனை முழு மனத்துடன் த்யானம் செய்திடப்பா
கலியுகத்தை நீவெல்வதற்கு சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயை முழுமனத்துடன் சரணம் அடைந்திடப்பா 136

அசையும் பொருளாக அசையாப் பொருளாக ப்ரபஞ்சத்தில் இருப்பவள் ஆத்தாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி அப்பா மறந்திடாதே
பஞ்ச க்ருத்யங்களைச் செய்யும் சேலம் உடையாப்பட்டி பராசக்தி தாய்க்குக் குடையாய் இருப்பவன் நாகராஜனப்பா மறந்திடாதே
பஞ்ச பூதங்களை ஸ்ருஷ்டித்த சேலம் உடையாப்பட்டி பராசக்தியின் பராக்ரமம் சொல்லுக்கு அடங்காதப்பா
உலகிலுள்ள மக்களுக்குள் பகுத்தறிவாக இருப்பவள் உனது ஆத்மசக்தியான மகமாயி ஆகுமப்பா மறந்திடாதே 137

நெருப்புடன் நீராக நிலமாக காற்றோடு ஆகாயமாய் இருப்பவள் உடுமலை மாரியம்மன் என்பதை நீயும் மறந்திடாதே
உனது உள்ளும் புறமும் அருள்மாரி பொழிகின்ற சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயை நீ கனவிலும் மறந்திடாதே
நினைப்பென்று ஒன்று உனக்குள் இருக்குமானால் அது மகமாயியின் நினைப்பாக இருக்க வேண்டும் மனமே மறந்திடாதே
உலகின் உள்ளும் புறமும் உண்மையாய் இருப்பது அழிவற்ற பரப்ரம்மத்தின் சக்தியப்பா மறந்திடாதே 138

உலக மக்களுக்குள் நான் நான் என்றிருப்பதுதான் அழிவற்ற பராசக்தியாகுமப்பா மறந்திடாதே
உனக்குள் நான் நான் என்றிருக்கும் அழிவற்ற ப்ரம்மத்தின் சக்தியை நீ உண்மையாய் நம்பிடப்பா மறந்திடாதே
நீ உனக்குள் நான் யாரெனக் கேட்டால் மெய்ப்பொருளான பராசக்தி உனக்குள் நான் என்றிருப்பதை நீயும் உணர்வாயப்பா மறந்திடாதே
உனது அகத்துள் நான் என்றிருப்பது தான் அழிவற்ற உனது ஆத்மா என்பதை நீயும் மறந்திடாதே மறந்திடாதே 139

ஏ மனமே உலக மக்களின் உயிருக்குயிராய் இருந்து வரும் மாரியம்மனை உறுதியாய் நம்பிடுவாய்
அறம் பொருளுடன் அழிவற்ற வீட்டை ஆத்தாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி கொடுத்திடுவாள் நம்பிடுவாய்
சேலம் உடையாப்பட்டி கருமாரி கவச பலன் பிறவிப் பெருங்கடலைக் கடத்தி வைக்கும் மறந்திடாதே
ஈரேழுலகமெங்கும் நிறைந்திருந்து வரும் கருமாரியின் திருவருள் உனக்குள் இருந்து வரும் உலகப் பற்றுகளின் வேரை அறுத்து விடும் மறந்திடாதே 140

சேலம் உடையாப்பட்டி கருமாரி கவசம் உனது கவலையைத் துடைத்து உனது ஆன்மசக்தியை மகமாயி என்று உணர்த்தி வைக்கும் மறந்திடாதே
சேலம் உடையாப்பட்டி கருமாரி கவச பலன் துர்தேவதையை விரட்டி விடும் துஷ்டனின் உயிரைக் குடித்து விடும் மறந்திடாதே
மனமே உனக்குள் இருக்கும் யமபயத்தைத் துடைத்து உன்னைப் பரம்பொருள் ஆக்கி விடும் கருமாரி கவசத்தை மறந்திடாதே
பொருளுணர்ந்து ஸ்ரீ கருமாரி கவசத்தை ஏத்துவையெல் மகாமாயையான மகமாயியை மெய்ப்பொருள் என்றுணர்வாயப்பா மறந்திடாதே 141

சாக்கோட்டையை உய்விக்க வந்த ஆத்தாள் மகமாயி இந்த ஜன்மத்தைக் கடைத்தேற்றிடம்மா
கள்ளத்தூர் பெரியநாயகித் தாயே என்னை நான் யாரெனக் கேட்டுணர எனக்கு வரமருள்வாய்
சாத்தூர் மகமாயி இவன் உடலைப் பரிசுத்தமாக்கிடம்மா மறந்திடாதே
விருதுநகர் மகமாயி இவனுக்கு உறுதியான புத்தியையும் மனவலிமையையும் தந்திடம்மா 142

பாஞ்சாலங்குறிச்சி ஆத்தாள் பராசக்தி இவனிடமுள்ள துர்குணத்தைத் துடைத்திடம்மா
புதுக்கோட்டை அரியநாச்சித் தாயே பொறுமையைத் தந்திடம்மா
புதுகை பொற்பனைக்கோட்டை பத்ரகாளியம்மா அனைத்துயிரும் நீதான் என்று உணர்த்திடம்மா
அளவிடற்கரிய சக்தியுள்ள அறந்தாங்கி மகமாயி இவன் எவருக்கும் இம்சை புரியாதிருந்திடச் செய்திடம்மா 143

தன்னை அறிதலே மாதவமாகுமென்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி
தங்கப் பிழம்பாகத் விளங்குகின்ற சேலம் உடையாப்பட்டி தங்கக் கருமாரி நடுநிலை தவறாது இரு என்றாள்
உலக மக்களுடன் உன்னையும் என்னையும் ஈன்ற தாய் சேலம் உடையாப்பட்டி கருமாரி அப்பா மறந்திடாதே
புவனம் பதினான்கிற்கும் தாயானவள் சேலம் உடையாப்பட்டி கருமாரி அப்பா மறந்திடாதே 144

மனிதனைப் புனிதனாக்கும் நல்ல எண்ணங்களை இவனகத்துள் நினைக்கச் செய்வாய் கருவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகைத் தாயே
இவன் உலக மக்களுடன் ஒன்று பட்டு வாழ்ந்து வர வரமருள்வாய் அமாத்தூர் வட்டப்பாறையம்மா
சமயச் சார்புகளை மறக்கடித்து உலக மக்களிடம் சகோதர மனப்பான்மையை உறுதியாய் உண்டாக்கி வைப்பாய் நாகை நகர் நீலாயதாக்ஷி
திருமயிலை கற்பகாம்பா இவன் அகத்திலுள்ள பகைமையை இக்கணமே ஒழித்திடம்மா 145

ஆபத்தும் விபத்தும் இவனை விட்டு விலகியோட துலசை அறம் வளர்த்த தாயே அனுக்ரஹிப்பாய்
இவனுக்கு ஆன்மீகப் பாதை காட்ட ஸத்குருவாய் வந்திடம்மா சேந்தமங்கலம் வன துர்க்கைத் தாயே
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் என்றாள் கோவை நகர் கோணியம்மன்
நீர்க்குமிழி போன்று நிலையில்லாத இவ்வுடலை நீ நம்பி மோசம் போய்விடாதே என்றாள் சமையபுரம் மகமாயி 146

யான் எனது என்னும் பற்றுக்கள் மறுபிறவிக்கு வித்தாகும் என்றாள் ஆத்தாள் அபிராமி
மற்றவர்க்கு உதவி செய்யும் பெரிய மனத்தை தந்திடம்மா கொல்லூர் மூகாம்பிகைத் தாயே
ஆதிபராசக்தி எனப் போற்றும் சேலம் நகர் மகமாயி நீயும் நானும் ஒன்றென்கிற உண்மையை இவன் உள்ளத்தில் உணர்த்தி வைப்பாய்
கள்ளையும் கவராடலையும் தவிர்த்திடென்றாள் செங்கன்னூர் பகவதியும் மறந்திடாதே 147

முழுமுதற் கடவுளெனப் போற்றும் மும்மூர்த்திகளின் சக்தியே மாரி மகமாயி கருமாரி மறந்திடாதே
மாறா சூரனை வதம் செய்த மாரியாத்தாளே கருமாரி என்பதை மனமே மறந்திடாதே
உலகெங்கும் நிறைந்துள்ள சேலம் உடையாப்பட்டி மகமாயி கருமாரியாய் மாறிவிட்டாள் மறந்திடாதே
கிருஷ்ண மாரி எனப் போற்றும் கருமாரி வழிபாடு பாரதத்தின் பராசக்தி வழிபாடகுமப்பா மறந்திடாதே 148

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் இருப்பவள் உனது ஆன்ம சக்தியான கருமாரி தானப்பா மறந்திடாதே
தன்னை நம்பியுள்ள மக்களின் மனத்துயரத்தை துடைத்துக் காப்பவள் சேலம் உடையாப்பட்டி கருமாரி அப்பா மறந்திடாதே
போகத்தையும் யோகத்தையும் அருள்பவள் சேலம் உடையாப்பட்டி கருமாரி அப்பா மறந்திடாதே
பிறரும் நன்கு வாழ வேண்டும் என்கிற பெரிய மனத்தை இவனுக்குத் தந்திடம்மா தில்லை சிவகாமித் தாயே மறந்திடாதே 149

கருமாரித் தாயே நீ உலகில் ஜாதி மதம் பாராத ஸர்வசக்தி நீதானம்மா
குன்னூர் தந்தி மாரியம்மா இவனை இக்கணமே தன்யன் ஆக்கிடம்மா
சென்னை பட்டினம் என்று உனது பெயர் வைத்த முத்தியாலுப்பேட்டை சென்னம்மா நீதான் சிவாஜி பூஜித்த காளிகாம்பாள் ஆனாய்
பாரதத்தில் பம்பாய் என்று உனது பெயர் வைத்துள்ள பம்மா தேவியும் பராசக்தி மகமாயி தானப்பா 150

சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயே இவனை உண்மையை கடைபிடிக்க வைப்பாயம்மா
கண்கண்ட தெய்வமான சேலம் உடையாப்பட்டி கருமாரி முதலில் உன்னைத் திருத்திக் கொள் என்றாள்
சிவசக்தியின் திருவுருவமான சேலம் உடையாப்பட்டி கருமாரி உனது நாவை அடக்கு என்றாள்
பொய்சாட்சி சொல்லி பிறர் பொருளை விரும்பாதே என்றாள் உனக்குள் இருக்கும் ஆத்மசக்தியான மகமாயி 151

தன்னை நான் யாரெனக் கேட்டுணர்வதே மெய்ஞானமாகுமென்றாள் புதுக்கோட்டை புவனேஸ்வரி
அறநெறியில் நடப்பவனே மாமனிதனாவான் என்றாள் ஆதிபராசக்தி
அறச்செயலும் ஆதிபகவனும் ஒரு நாணயத்தின் இருபுறம் என்றாள் ஆத்தாள் மகமாயி
அகந்தையும் அகத்துள் பகையும் அற்றவனே மாமனிதன் என்றாள் சேலம் கோட்டை மகமாயி 152

நீரில் தாமரை போல் நிற்பவனே மாமனிதனாவான் என்றாள் சமையபுரம் மகமாயி
தனக்காக உலகில் வாழாதவனே மாமனிதன் என்றாள் தஞ்சை முத்துமாரி
ஆராயாமல் பிறரை வெறுப்பவன் அதமனாவான் என்றாள் தொட்டியத்து மஹாகாளி
சந்திரனைப் போல நன்மையைச் செய்பவனே பாரில் நல்ல மனிதன் என்றாள் சேலம் நகர் மகமாயி 153

பேராவூரணியைக் காக்கும் முத்துமாரி உனதுள் இருக்கும் பெரிய மனத்தை இவனுக்குத் தந்திடம்மா
திரிகோணமலை கோனேஸ்வரித் தாயே உனதருளை எனக்குள் இருத்தி வைத்திடம்மா
மன்னார் திருக்கேதீஸ்வரித் தாயே அழிவற்ற பரம்பொருளை நான் என்று உணர்த்திடம்மா
சென்னப்பட்டினத்தை காத்தருளும் முப்பாத்தா இவன் இருவினைகளுடன் மும்மலத்தையும் துடைத்திடம்மா மறந்திடாதே 154

ஆதிபராசக்தியான அம்பிகையே சேலம் உடையாப்பட்டி கருமாரி இவனிடமுள்ள மிகக் கொடிய தீவினைகளைத் துடைத்திடுவாய்
ஜகஜ்ஜோதிர் மயமான சேலம் ஸ்கந்தாஸ்ரமம் மஹாலக்ஷ்மி துர்க்கையம்மா நினது பெயர் சொன்னால் மிகக் கொடிய பாவம் பொசுங்கி விடும்
உனது ஊழ்வினையைத் துடைத்துக் காப்பவளே சேலம் உடையாப்பட்டி கருமாரி மறந்திடாதே
சேலம் உடையாப்பட்டி கருமாரி உன்னைப் பற்றிவிட்டேன் உன்னில் என்னை காட்டிடம்மா 155

நான் யாரெனத் தன்னைக் கேட்டு உணராதவனே அஞ்ஞானி ஆவானென்றாள் ஆத்தாள் மகமாயி
உலகில் மிக உயர்ந்த கேள்விகளில் நான் யார் எனக் கேட்பதுவே உன்னை ஜீவன் முக்தனாக்கும் என்றாள் ஞானேஸ்வரித் தாய்
துன்பத்தை துணித்து பொறுப்பதுவே விதியை வெல்லும் வழியென்றாள் பட்டினத்து மகமாயி
செய்த கருமங்களின் பலனுக்குத் தக்கவாறு மறுபிறப்புக் கிட்டும் என்றாள் ஜகன்மாதா மகமாயி 156

ஈதல் வாய்மை நன்றி அறிதலுடன் இருப்பவனே மன நிறைவுள்ளவன் என்றாள் எங்கள் மகமாயி
முற்றிலும் ஆசையற்றவனே முழுமனிதனாவானென்றாள் பட்டினத்துப் பாதாள பைரவித் தாய்
ஆசை அணுவிருப்பின் அவனுள்ளமே நரகம் என்றாள் ஆத்தாள் கருமாரி
மோட்சம் வேண்டுமென்றால் நீ உயிரோடிருக்கும் போதே உன்னை நீயே நான் யாரெனக் கேட்டுணர் என்றாள் சிதம்பரம் தில்லை காளி 157

உயிருள்ள போதே நீ நல்லவனாய் இரு என்றாள் புதுவை முத்துமாரி
சந்தேகம் இருக்குமானால் அதுவே நரகமென்றாள் புதுகை மகமாயி
அச்சம் இருக்கும் வரை உனக்கு முக்தியில்லை என்றாள் பன்னாரி மகமாயி
விருப்பு வெறுப்பு அற்றிருப்பதுவே நல்ல தவம் ஆகும் என்றாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி 158

உலக மக்களின் உள்ளன்பாய் இருந்து வரும் ஸ்ரீ பத்ரகாளி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
உலகத்தின் உணமையான தாயான சேலம் ஸ்கந்தாஸ்ரமம் மஹாலக்ஷ்மி துர்க்கைக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
தமிழகத்தில் குடியிருக்கும் ஆத்தாள் மகமாயி முன்பு பொங்கல் வைத்து பூஜித்து குண்டத்தில் விளையாடும் தெய்வத் தமிழக மக்களுக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
பக்தனை ரக்ஷிக்க பறந்தோடி வரும் மகாமாரியான உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம் 159

சரணமடைந்தவனை அரைநொடிக்குள் ரக்ஷிக்கும் சேலம் உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
சேலம் மாநகரைத் தனக்கு கோவிலாகக் கொண்ட கோட்டைப் பெரிய மகமாயி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
தேவியின் வழிபாட்டை கடமையாக்கிக் கொண்டுள்ள தெய்வத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
அம்மா என்றவுடன் அபய கரம் காட்டும் ஆத்தாள் கருமாரிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம் 160

உனது உடலையும் மனத்தையும் உயிரையும் காத்து ரட்சிக்கும் உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
புண்ய பாரத தேசத்தை இரவு பகல் காத்து ரக்ஷிக்கும் எங்கள் உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
உலக மக்களின் உயிர்க்கும் உயிரான தமிழகத்தின் உடையாப்பட்டி கருமாரித் தாய்க்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயே உலகைக் காத்து ரக்ஷிப்பவள் என்றறிந்து கொண்ட உத்தமர்களுக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம் 161

உலகிலுள்ள உயிர்களெல்லாம் உனது உயிராகுமென்ற உண்மையை உனக்குள் உணர்த்தி வைக்கும் சேலம் உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
உலக மக்களின் உள்ளத்தில் தூய மனசாட்சியாய் அன்பாய் அறிவாய் ஆத்மாவாய் இருந்து வரும் ஆத்தாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
உருவமாய் அருவமாய் ப்ரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாய் இருந்து வரும் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியான ஆத்தாள் சேலம் உடையாப்பட்டி கருமாரி தேவிக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம்
சித்த மலம் அறுவித்து இவனை அழிவற்ற சிவமென்று உணர்த்தி வைக்கும் சேலம் உடையாப்பட்டி கருமாரித் தாயாருக்கு ஜயமங்களம் நித்ய ஸுபமங்களம் 162

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் தத் ஸத்