ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மஹாகணபதி கவசம்

ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மஹாகணபதி கவசம்

Panchamukha Heramba Ganapathy
Panchamukha Heramba Ganapathy

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் ஸ்ரீ கணேசாய நம:

வக்ரதுண்ட கணபதியே வல்வினையை துடைத்தருள்பவனே
கோடி சூர்யப்ரகாசமுள்ள முழுமுதற் கடவுளானவனே
பஞ்சமுக கணபதியே உனது நிஜ ஸ்வரூபம் உணர்ந்து நான் வழிபட வரம் அருள்வாய்
அறியாமையைப் போக்கிவிட கவசமதை தந்தருள்வீர் கணபதியே 1

ஆதிமூல கணபதியே ஐந்துமுகத்தோனே
அடிமையைக் காத்திட அடியேனுக்கு வரமருள்வாய்
ஆணவத்தை ஒழிக்கும் மூலாதார கணபதியே
அறியாமை ஒழிந்திட அடிமைக்கு வரமருள்வாய் 2

பதினைந்து கண்ணுடைய பஞ்சமுக கணபதியே
இவன் பஞ்ச மாபாதகத்தை துடைத்திடுவாய்
பிறவிப் பிணி அகற்றும் ப்ரம்மமயமானவனே
பஞ்சமுக கணபதியாய் வந்திட்டு வரமருள்வாய் 3

பரஞ்சோதிர் மயமான பஞ்சமுக கணபதியே பாரெலாம் நிறைந்தவனே
அழிவற்ற உன்னை நான் ஆத்மாவாய் உணர ஐந்துமுக கணபதியே வரமருள்வாய்
துரியமெய்ஞான ஸ்வயம்ப்ரகாச கணபதியே இவன் மனமாயயை ஒழித்திடுவாய்
இவன் அறிவாய் உயிராய் உன்னை அன்பு மயமாய் உணர்த்திடுவாய் 4

இவன் முன்னை வினயெலாம் முற்றிலும் சுட்டெரித்துச் சாம்பலாக்கிவிட
மூஷிக வாகனமேறி வல்லபை கணபதியே வரமருள முன்வருவாய்
என்னைநீயென்று எனக்குள் நானுணர்வதற்கு எனக்கு வரமருள்வீர் கணநாதா கஜானனா
நல்லவரமருள பஞ்முக கணபதியாய் என்முன் வந்திடுவீர் வந்திடுவீர் 5

நித்யானந்த நிஷ்கள ஸ்வரூபமான நித்யானந்த கணபதியை சரணடைந்தேன்
பஞ்சமுகத்தினால் ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்த ஹேரம்ப கணபதியே உன்னை சரணடைந்தேன்
அன்பு மயமானவனை எனதறிவில் உறைபவனை சரணடைந்தேன்
ஐந்துமுக கணபதியை எனதாத்ம ஸ்வரூபமானவனை சரணடைந்தேன் 6

நாமரூபமற்ற பரம்பொருளே அகத்துள் நான் என்றிருக்கும் கணபதியே
உருவமாய் அருவமாய் எனதுயிர்க்கு உயிரான கணபதியே
தத்துவத்தின் ஸாரமான ப்ரணவத்தின் உட்பொருளே
ப்ரபஞ்சமயமானவனே பஞ்சமுக கணபதியே உன்னைநான் சரணடைந்தேன் 7

சக்தியும் சிவமுமான ஆதிமூலாதார கணபதியை அடிமை சரணடைந்தேன்
அறிவின் உருவமான ஐந்துமுக கணபதியை அடியேன் சரணடைந்தேன்
ஐம்புலனை அடக்கிஒடுக்கிவிடும் ஹேரம்ப கணபதியை சரணடைந்தேன்
காமக்ரோதத்துடன் பேராசையை கருக்கிச் சாம்பலாக்கிடும் கணபதியை சரணடைந்தேன் 8

எனதுடம்பிற்குள் எனதுயிராய் இருந்துவரும் உமாஸுதனான மஹாகணபதியை சரணடைந்தேன்
எனதுள்ளத்தின் சாட்சியான ஓங்கார கணபதியை சரணடைந்தேன்
ப்ரணவத்தை உபதேசித்து இவனை ப்ரம்மமயமாக்கிவிடும் ப்ரம்மானந்த கணபதியைச் சரணடைந்தேன்
அனைத்துயிரின் உயிரானவனை எனதகத்துள் ஆத்மாவாய் இருப்பவனைச் சரணடைந்தேன் 9

ஆண்பெண் அனைவருள்ளே ஆத்மஜோதிர்மயமாய் இருப்பவனே கணபதியே
ஈசனும் போற்றுகின்ற முக்கண்பரஞ்சுடரே முழுமுதற் கடவுளானவனே
விநாயக மூர்த்தியே இவனை இக்கணமே மெய்வீட்டில் இருத்திடுவாய்
ஓங்காரத் தத்துவனே உனதுமெய்ப்பொருளை எனதகத்துள் உணர்த்திடுவாய் 10

மும்மலமகற்றி இவனகத்துள் பரம்பொருளாய் இருப்பவனே பஞ்சமுக கணபதியே
மிகக்கொடிய வல்வினையைப் பொசுக்கும் பஞ்சமுக கணபதியே கேட்டிடுவாய்
தும்பிக்கை முகத்தோனே இவன் துக்கமகற்றி உன்னை வழிபடச் செய்திடுவாய்
ஐந்துமுக கணபதியே அடியேனை அகத்துள்காட்டி அனுக்ரஹம் செய்திடுவாய் 11

அழிவற்ற மெய்ப்பொருளை இவனகத்துள் நான் என்று உணர்த்திடுவாய் கணபதியே
பரம்பொருளானவனே ப்ரபஞ்சத்தின் வித்தானவனே பஞ்சமுக கணபதியே
பந்தபாசம் பொறாமைப் பகைவர்களை
அழித்திட ஹேரம்ப கணபதியாய் வந்திட்டு இவன் பிறப்பையும் இறப்பையும் பெயர்த்தெறிய
இவனுள் அறிவாய் வந்திடுவாய் வல்லபை கணபதியாய் 12

ஐந்துமுக கணபதியே இவன் அறியாமை மலமகற்றி இவனைத் தடுத்தாட் கொண்டிடுவாய்
அகண்ட பரப்ரம்மமயமான உன்னை எனக்குள் நானென்று உணர்த்திட வந்திடுவாய்
பஞ்சமாபாதகத்தை பஸ்ம மயமாக்கிவிட வந்து வரமருள்வாய்
சிந்தை மயக்கறுத்து அழிவற்ற சிவனே நான் என்று உணர்த்திவிட வந்தெனக்கு வரமருள்வாய் 13

இவன் ஐம்புலன்களை வேரறுத்து இவன் அகக்கண்ணை திறந்து வைப்பாய்
பஞ்சமுக கணபதியே இவன் ஆணவ மலமகற்ற ஐந்துமுகத்துடன் வந்திட்டு வரமருள்வாய்
எண்ணங்களை அறுத்து இவனை உனதுமயமாக்கிடுவாய் ஏகமுக கணபதியே
அழிவற்ற சிவத்தை அகத்துள் நான் என்றுணர பஞ்சமுக கணபதியே வரமருள்வாய் 14

ஏகாக்ஷர கணபதியே உன்னை அறியும் அறிவையும் இவனுக்குத் தந்திடுவாய்
முக்குணம் அகற்றிட ஸத்குருவாய் கணபதியே வந்திடுவாய் வந்திடுவாய்
ஏழுகோடி மந்திர மயமான யோக கணபதியே போற்றி போற்றி
அனைத்தும் நீ என்றுணர்த்திடுவாய் அர்க்க கணபதியே போற்றி போற்றி 15

குருவடிவான குப்ஷி கணபதியே போற்றி போற்றி
இவன் குறைகளைத் தீர்த்தருளும் ருணஹர கணபதியே போற்றி போற்றி
பாவத்தை பொசுக்கும் பாலகணபதியே போற்றி போற்றி
மோக்ஷத்தைத் தந்தருளும் மோதக கணபதியே போற்றி போற்றி 16

இவனை மாமேதையாக்குவிக்கும் மேதா கணபதியே போற்றி போற்றி
அடிமைக்கு அஷ்டமாஸித்திதரும் ஹரித்ரா கணபதியே போற்றி போற்றி
ஸங்கல்பத்தை ஒழிக்கும் சங்கடஹர கணபதியே போற்றி போற்றி
உள்ளொளியாய் இருந்து வரும் பஞ்சாக்ஷர கணபதியே போற்றி போற்றி 17

மனத்துள் இருந்து இவன் மனஅழுக்ககற்றும் மங்கள கணபதியே போற்றி போற்றி
மனிதனை தெய்வமாக்கும் ஸ்ரீ வித்யா மஹாகணபதியே போற்றி போற்றி
இவனை உத்தமனாக்கி வைக்கும் உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி
இவன் துக்கத்தைப் போக்கடிக்கும் துர்க்கா கணபதியே போற்றி போற்றி 18

எமபயத்தைப் போக்குவிக்கும் ஹேரம்ப கணபதியே போற்றி போற்றி
அமைதியைத் தந்தருளும் அர்க்க கணபதியே போற்றி போற்றி
சௌபாக்யமாக்கும் சக்தி கணபதியே போற்றி போற்றி
முக்திநிலையருளும் புத்தி கணபதியே போற்றி போற்றி 19

சித்தசுத்தியைத் தந்தருளும் சித்ஸ்வரூப கணபதியே சரணம் சரணம்
மனமாயயை பொசுக்கும் மஹாகணபதியே சரணம் சரணம்
இவனைச் சிவமயமாக்கும் சிந்தாமணி கணபதியே சரணம் சரணம்
துரியத்தில் இருத்தி வைக்கும் தூர்பா கணபதியே சரணம் சரணம் 20

ருணத்தை போக்கடிக்கும் ருணமோசன கணபதியே சரணம் சரணம்
சங்கடங்களைப் போக்கடிக்கும் சங்கடஹர கணபதியே சரணம் சரணம்
ஞானசித்தியைத் தந்தருளும் சித்த கணபதியே சரணம் சரணம்
விடுதலை தந்தருளும் வீர கணபதியே சரணம் சரணம் 21

மோக்ஷத்தைத் தந்தருளும் மோஹன கணபதியே சரணம் சரணம்
நினைத்த வரமருளும் ஷிப்ர கணபதியே சரணம் சரணம்
ஸங்கல்பத்தை ஒழிக்கும் விக்னராஜ கணபதியே சரணம் சரணம்
இடைபிங்கலையாய் இருந்துவரும் எங்கும்நிறைந்த பிங்கல கணபதியே சரணம் சரணம் 22

புவனத்தை ஸ்ருஷ்டித்த புவன கணபதியே சரணம் சரணம்
தக்க தருணத்தில் காத்தருளும் தருண கணபதியே சரணம் சரணம்
நினைத்தவுடன் முன்வந்திடும் ப்ரஸன்ன கணபதியே சரணம் சரணம்
அகக்கண்ணைத் திறந்துவைக்கும் ஊர்த்தவ கணபதியே சரணம் சரணம் 23

பஞ்சாக்ஷரம் தந்து பக்தனை ரக்ஷிக்கும் பஞ்சாஸ்ய கணபதியே சரணம் சரணம்
இவனை வீரபுருஷனாக்குவிக்கும் மகாவீர கணபதியே சரணம் சரணம்
ஓசைஒலியெலாமான ஓங்கார கணபதியே சரணம் சரணம்
மோக்ஷத்தைத் தந்தருளும் அபீஷ்டவரத மஹாகணபதியே சரணம் சரணம் 24

எனதுடம்பிற்குள் உயிராக இருந்து வரும் புவனேச கணபதியே நமஸ்காரம்
அங்குமிங்கும் எங்கும்நிறைந்த ஆதிமூல கணபதியே நமஸ்காரம்
சிவவிஷ்ணு மயமான விஜய கணபதியே நமஸ்காரம்
பக்தர்களை ரக்ஷிக்கும் பக்த கணபதியே நமஸ்காரம்
பஞ்சப்ரம்மமயமான பஞ்சமுக கணபதியே நமஸ்காரம் 25

மஹத்தான வரமருளும் சௌபாக்ய கணபதியே நமஸ்காரம்
ஐந்துநிறமுடைய ஐந்துமுக கணபதியே நமஸ்காரம்
ஆசைகளைப் பூர்த்தி செய்யும் ஹரித்ரா கணபதியே நமஸ்காரம்
பலகோடி உருவமுள்ள வல்லபை கணபதியே நமஸ்காரம் 26

அகந்தையுள்ள அசுரர்களை அழித்திட்ட ஆனைமுக கணபதியே நமஸ்காரம்
அழிவற்ற பரப்ரம்மமய ஆனந்த கணபதியே நமஸ்காரம்
பிறவிப்பிணிக்கு மருந்தான மஹாசக்தி கணபதியே நமஸ்காரம்
வேதவேதாந்த ஸாரமான விக்னேஸ்வரா நமஸ்காரம் 27

ஞானத்தின் வித்தான மூலாதார கணபதியே நமஸ்காரம்
ப்ரம்மசக்திமயமான மஹாலக்ஷ்மி கணபதியே நமஸ்காரம்
அனைத்தின் உயிரான அதிஅத்புத மஹாகணபதியே நமஸ்காரம்
ஆதிநெடுமால் ஹரன் அயன் போற்றும் த்ரைலோக்ய கணபதியே நமஸ்காரம் 28

ஜோதிச்செழுஞ்சுடரான நிருத்த கணபதியே நமஸ்காரம்
பதினான்குலகை பஞ்சமுகத்தால் ஸ்ருஷ்டித்த கணபதியே நமஸ்காரம்
ஈரேழு உலகெங்கும் நிறைந்துள்ள ஏகமுக கணபதியே நமஸ்காரம்
ப்ரபஞ்சத்தின் உயிராய் அழிவற்ற ப்ரம்மமாய் ஆத்மாவாய் இருப்பவனே நமஸ்காரம் 29

ஸர்வவேத ஸார மயமான சங்கடஹர கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா
அமிழ்தினும் இனிய அழிவற்ற கணேசா வணக்கம் கோடி வணக்கமப்பா
ஆதிஅந்தமற்ற அழிவற்ற
கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா அன்பே சிவம் அதுவே நீயாகுமென்றுபதேசித்த ஆதிகுரோ வணக்கம் கோடி வணக்கமப்பா 30

பக்தர்களின் குறைகளைப் போக்கும் ஏகதந்த கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா
முற்றுந்துறந்த முனிவர்கள் போற்றும் கணேசா வணக்கம் கோடி வணக்கமப்பா
அறத்தை உணர்ந்தோர் போற்றும்
ஆதிகணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பாபேரின்பமயமான ப்ரம்ம சக்தி
கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா 31

நிலம் நீர் நெருப்புடன் காற்றோடு விண்மயமாயிருந்துவரும் கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா
நாள்கோள்களினால் வரும் கொடிய துன்பத்தைத் துடைத்தெரியும் ஹேரம்ப கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா
அறிவுடன் அன்பும் அருள் வடிவமாயிருந்து வரும் அற்புத கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா
முத்தொழிலைச் செய்துவரும் பஞ்சமுக கணபதியே வணக்கம் கோடி வணக்கமப்பா 32

மஹாசக்திமயமாயுள்ள பஞ்சமுக கணபதியே இவன் சிரசினைக் காத்திடுவாய்
அருள்மயமான ஐந்துமுக கணபதியே இவன் காதுமூக்குடன் வாய் பல் நாக்கையும் காத்திடுவாய்
லம்போதரா பார்வதி புத்ரா இவன் அகம்புறம் இருக்கும் கண்களைக் காத்திடுவாய்
ஏகமுக கணபதியே இவன் கழுத்தினைக் காத்திடுவாய் 33

இருமுக கணபதியே இவன் இதயத்தைக் காத்திடுவாய்
மூன்றுமுக கணபதியே மார்புடனே வயிற்றையும் காத்திடுவாய்
நான்குமுக கணபதியே இவன் தோளுடன் கைகளையும் காத்திடுவாய்
பஞ்சமுக கணபதியே இவன் ஆத்மாவாய் இருந்திடுவாய் 34

ஹேரம்ப கணபதியே இவன் இடுப்புடன் தொடை கால்களைக் காத்திடுவாய்
இவன் கைகால் விரல்களை மஹாகணபதியே காத்திடுவாய்
இவன் உள்ளும் புறமும் ஊர்த்வ கணபதியாயிருந்து காத்திடுவாய்
ஓங்கார கணபதியே இவன் உள்ளொளியாய் இருந்து காத்திடுவாய் 35

கந்தர்ப்ப கணபதியே இவன் கவலையெலாம் ஒழித்திடுவாய்
மூஷிகவாகனனை முழுமனத்துடன்நான் நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன்
மோதகஹஸ்தனான கவித்தபலப்ரியனை காலமெலாம் நம்பிடுவேன்
சேலம் ஸ்ரீ ஓம் ஸ்கந்தாஸ்ரமத்தைக் காக்கும் பஞ்சமுக கணபதியை நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன் 36

அனைத்துமயமான கஜானனனை அகத்துள் நானென்றுணர
கஜமுகனான புராண புருஷனை புண்ய மூர்த்தியை நான் என்றுணர
அக்ரகண்யனை ஆதிமூலாதார கணபதியை அகத்துள் நானென்றுணர
மஹோதரனை மஹோத்கட கணபதியை நான் என்று அகத்துள் இவன் உணர 37

விஷ்வேஸனை விஷ்வவ்யாபகனான கணபதியை நான் என்று எனது அகத்துள் இவன் உணர
பார்வதி புத்ரனை பஞ்சமுக கணபதியை அகத்துள் நான் என்றுணர
விக்னகர்த்தனை விஸ்வநேத்ரனை
எனக்குள் நான் என்றுணர பரம்பொருளான மஹா கணபதியை
இவனுள் நானென்றுணர வரமருள்வாய் 38

பார்வதி ப்ரியநந்தனா பஞ்சமுக ஹேரம்பா உன்னை நானென்றுணர்த்திடுவாய்
மஹாப்ரபோ ஷுபகரா எனக்குள் உன்னை நானென்றுணர்த்திடுவாய்
தேஜோநிதே பரப்ரம்மமய கணபதியே எனக்குள் உன்னை நானென்றுணர்த்திடுவாய்
பஞ்சமுக கணபதே குஹப்ரியா இவன் அகத்துள் உன்னை நானென்றுணர்த்திடுவாய் 39

ஐந்துமுக கணபதியே ஹரிஹரப்ரம்மன் போற்றும் ஸர்வஞா அகத்துள் உன்னை என்தாத்மாவாய் உணர்த்திடுவாய் ஸர்வ வேதாந்த ஸாரமானவனே சத்தியத்தை
எனதகத்துள் நானென்றுணர்த்திடுவாய் நான்குவேத ஸாரமான கணபதியே மெய்ஞானத்தை
அகத்துள் நானென்றுணர்த்திடுவாய் ஆதிஜகத்குருவானவனே ஜகத்பதே இவனகத்துள் அழிவற்ற ஆனந்தமயமாய் இருந்திடுவாய் 40

அவ்யாஜ கருணா மூர்த்தே இவனறிவாக நீயிருந்து அகத்துள் ஞானக்கண்ணைத் திறந்திடுவாய்
கான்பதனைத்தும் கணபதியென்று இவனுக்குக் காட்டிடுவாய் கணநாதா விநாயகனே
இவன் ஆத்மாவாய் இருந்து வரும் பஞ்சமுக கணபதியே இவன் அகத்துள் நான் என்று நீயிருந்திடுவாய்
ஸர்வசௌபாக்ய கணபதியே ஸர்வஜனரக்ஷகா இவனை நீயென்று உணர்த்தி வைப்பாய் 41

ஸர்வமங்கள கணபதியே ஸர்வமும் நீதானென்று எனக்குள் நீ உணர்த்தி வைப்பாய்
ஸர்வானந்த விநாயகா இவனகத்துள் ஆத்மானுபவத்தை அனுக்ரஹிப்பாய்
ஏகாக்ஷரகணபதே மஹாரூபா
நாமரூபமற்ற பரசிவமே விஸ்வரூபா விராட்புருஷா
திவ்யமங்கள ஹேரம்ப கணபதியே 42

ப்ரசன்னவதனா வரதா தயாஸ்வரூப பஞ்சமுக ஹேரம்ப கணபதியே
ஶோக நாஸகா ம்ருத்யு நாஸகா ஹேரம்ப கணபதியே
ஶத்ரு நாஸம் செய்பவனே அனுக்ரஹப்ரியா ஹரிஹர ஸ்வரூபா அம்ருதமய கணபதியே
கருணாகரா பூர்ணபுருஷா விஸ்வஜன ரக்ஷகா காத்து ரக்ஷிப்பாய் இவனையும் நீ 43

பயநாஶகனான பஞ்சமுக கணபதே இவன் மஹா பயத்தை போக்கிடுவாய்
சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம ரக்ஷகனே பஞ்சமுக ஹேரம்ப கணபதே ப்ரம்மஸ்வரூபமானவனே
புராண புருஷா புண்ய ஸ்வரூபா சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் உரைபவனே
ஸர்வ ஸ்வரூபா ஸர்வேஸ்வரா
ஜோதிர்மயமான ஹேரம்ப கணபதியே கேள் 44

சப்த ரிஷிகள் போற்றும் சங்கடஹர கணபதியே காத்திடுவாய்
இவனையும் நீ பூர்ணபோதா மஹாகணபதே தான்தானாகவே நான்இருக்க வரமருள்வாய்
லோகநாதா பூர்ணபுருஷா த்வைத த்ருஷ்டியைப் போக்கிடுவாய்
நானாரூப கணபதியே கஜமுகனே என்னையும் நீ நானென்றுணர்த்திடுவாய் 45

வேதஸ்வரூபமான ஸ்ரீவித்யா கணபதியே ப்ரம்மவித்தையை தந்தருள்வாய் சாஷ்டாங்க நமஸ்காரம்
ஸநாதனா சத்யஸ்வரூபா ஸகலசௌபாக்யம் அருளிடுவாய் சாஷ்டாங்க நமஸ்காரம்
நிரஞ்சனான நிர்குண கணபதே இவனை நீ நல்லவனாக்கிடுவாய் சாஷ்டாங்க நமஸ்காரம்
அநாதி ப்ரம்மசாரினே ஆதிஅந்தமற்ற கணபதே சாஷ்டாங்க நமஸ்காரம் 46

ஆத்மஸ்வரூபா ஆத்மரக்ஷகா தர்மஸ்வரூப கணபதியே சாஷ்டாங்க நமஸ்காரம்
ஸ்ரீமதே சிவவிஷ்ணு ஸ்வரூப கணபதியே இவனை அழிவற்ற சிவமென்றுணர்த்திடுவாய்
ஸர்வஞா ஸர்வலோகார்ச்சிதா சதுர்வேதமயமான கணபதே சாஷ்டாங்க நமஸ்காரம்
ஸர்வஸ்வரூபா சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம ரக்ஷகனான ஹேரம்ப கணபதியே சாஷ்டாங்க நமஸ்காரம் 47

மனோமயா புத்திரூபா சித்தசாக்ஷினே சாஷ்டாங்க நமஸ்காரம்
ஸர்வதேவதா ஸ்வரூபா தயாநிதே உமாஸுத கணபதே சாஷ்டாங்க நமஸ்காரம்
அந்தராத்மனே ஆதிமூலமே பரஞ்ஜோதி
ஸ்வரூபா சாஷ்டாங்க நமஸ்காரம் மூவர்கள் போற்றிடும் முழுமுதற் கடவுளான
மூஷிக வாகனனே சாஷ்டாங்க நமஸ்காரம் 48

விஷ்வவ்யாபினே ஸர்வரக்ஷகா இவனைக்கடைத் தேற்றிடுவாய்
மஹாகணபதியே நிராகார கணபதியே ஞானஸாகரனே இவனை சத்யஞானானந்த மயமாக்கிடுவாய்
ஶரணாகத போஷகனே இவனுள் சாட்சியாக நீயிருந்திடுவாய்
ஸத்குருநாதா ஸர்வதுக்க நிவாரண கணபதியே உன்னைச் சரணடைந்தேன் இவனை நீ ஸாதுவாக்கிடுவாய் 49

வித்வத்ஜன மனோஹரா பஞ்சமுக கணபதே இவனை ஞானபண்டிதனாகிடுவாய்
தாரித்ர்ய நாஶகா ஸதானந்த கணபதியே ஞானப்பஞ்சமதைப் போக்கிடுவாய்
நிர்குண நிராமய நித்யமங்கள கணபதே உனதுநிஜ ஸ்வரூபத்தை இவனுள் காட்டிடுவாய்
ஸர்வபாப நாஸகனான ஞானஸத்குரோ கணபதே ஸங்கல்பத்தை ஒழித்திடுவாய் 50

ஸர்வமஹாரோக நாஸகனான பஞ்சமுக கணபதே இவனையும் நீ ப்ரம்மமென்று உணர்த்திடுவாய்
பக்தரக்ஷகா பரமானத்த கணபதியே நீயே நான் நானே நீ என்று உணர்த்திடுவாய்
ஹேரம்ப கணபதியே இருப்பதொன்றென்றாய் அதுவே நீ
அதுவேநான் என்று எனக்குள் உணர்த்திடுவாய்
அருள்மயமான கணபதியே இவனை உனதறிவாக அன்பாக ஆன்மாவாக உணர்த்திடுவாய் 51

ஆயுள் தனம் கல்வியுடன் கணேசா உனது அழிவற்ற திருவருளைத் தந்திடுவாய்
நலமனைத்தும் எளிதில் தரும் பஞ்சமுக கணபதியே இவனை மேன்மகனாக்கிடுவாய்
முழுமுதற் கடவுளான பஞ்சமுக கணபதியே பரசிவனே சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் இருப்பவனே
பரஞ்ஜோதிர்மயமான பஞ்சமுக கணபதியே புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் உரைபவனே 52

சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் திருக்கோயிலிருக்கும் ஐந்துமுக ஹேரம்ப கணபதியை இம்மையில் மனமே கண்டுய்வாய்
நல்லன அனைத்தையும் இம்மையில் அருளும் மஹாசக்தி கணபதியை நம்பிடுவாய் மனமே கேள்
அஞ்ஞான இருளகற்றும் பஞ்சமுக கணபதியை அகத்துள் நீ இருத்தி விட்டால்
அறியாமை இருளகன்று நீயும் அழிவற்ற ஸ்வயம்ப்ரகாச மயமாவாய் மறவாதே எ மனமே கேள் 53

கோடானகோடி ஜீவர்களுடன் உலகேழையும் ஸ்ருஷ்டித்தவனை
பஞ்சமுக கணபதியை நான் பற்றற்றிருப்பதற்குப் பற்றிவிட்டேன்
வேண்டுவோர் வேண்டுவதை தந்திடும் கற்பக கணபதியைப் பற்றிவிட்டேன்
அகமும்புறமும் நிறைந்தவனை மெய்ஞான ஹேரம்ப கணபதியைப் பற்றிவிட்டேன் 54

ஞானத்திருவுருவே எனதுயிர்க்குயிராய் இருப்பவனே விக்னேஸ்வரா கேட்டிடுவாய்
எனது ப்ரம்மரந்திரத்தினுள்ளே உன்னை ஸ்வயம்ப்ரகாசமாய் நானுணர
ஞானச்சுடரொளியான ஜோதிர்மய விநாயகனை அகத்துள் நான் என்று இவன் உணர
இவன் இதயத்துள் ஸ்வயம்ப்ரகாசமான அறிவாய் ஆத்மாவாய் அன்புமயமாய் நான் உணர 55

முப்பழம் உண்டு மூஷிகம் ஏறிவரும் முழுமுதற் கடவுளானவனை நான் என்றுணர
ஓம் கம் கணபதயே நம: என்று நான் மூச்சில் வாங்கி விட்டிடுவேன்
தந்தைக்கு முன் பிறந்த பஞ்சமுக கணபதியை நான் என்றுணர்ந்து கொண்டு
எங்கும் எல்லாமாய் இருக்கும் ஹேரம்ப கணபதியை இதய கமலத்துள் த்யானிப்பேன் 56

வல்வினையால் வந்திட்ட பிறவித் துன்பமதைத் துடைத்திடவே
அம்மையப்பனாய் பஞ்சமுக கணபதியாய் வந்து வரமருளிடுவாய்
உனது ஏகாக்ஷரத்தையும் எனக்குபதேசித்த ஞானஸத்குருவே கணபதியே
உனது ப்ரணவத்தின் நிஜஸ்வரூபமதை இவனகத்துள் ஆன்மாவாய் உணர்த்திடுவாய் 57

ஆகாயம் போன்ற பரப்ரம்மமயமான பஞ்சமுக கணபதியே
ஸ்தூல ஸூக்ஷ்ம காரண சரீரம் கடந்த ஜோதிர்மயமானவனே
பந்தபாசம் அகற்றி வைக்கும் ஹேரம்ப மஹாகணபதியே
இவன் அஞ்ஞானமதை அகற்றி அகத்துள் நான் ப்ரம்மமென்றுணர்த்திடுவாய் 58

சிதாகாஸமயமான சித்ஸ்வரூப கணபதியே சப்த கோடி மந்திர ஸாரம்
ஓம் கம் ஓம் என்று உனது மஹாமந்திரத்தை உபதேசித்தாய்
ஸகல வேதவேதாந்த ஸாரம் நான் நானென்று உனக்குள் இருக்குதென்றாய்
பஞ்சமுக கணபதியே எனக்குள் மனமாயையை அகற்றி ஞானமதைத் தந்திடுவாய் 59

ஆறாதாரத்தினுள்ளே மூலாதாரத்திலிருக்கும் பஞ்சமுக கணபதியே
ஸஹஸ்ரார கமலத்தில் ஸதா காலமிருப்பவனே ஐந்துமுக கணபதியே
ஸ்தாவரஜங்கமத்தின் உயிர்க்குயிராய் இருப்பவனே உமாஸுதனான
ஹேரம்ப கணபதியே
அகத்துள் ஆத்மாவாய் அறிவாய் அன்புமயமாய் இருக்கும் ஆதிகுருநாத கணபதியே 60

பேராசை காமக்ரோதத்துடன் பொறாமை பொய் சூதுகளை எனக்குள்ளிருந்து விரட்டிடுவாய்
பொறுமையுடன் இருக்க வைத்து இவனை புண்ய புருஷனாக்கிடுவாய் கணநாதா
அறியாமையை அகற்றி அகத்துள் உனது நிஜஸ்வரூபம் காட்டிடுவாய்
ஏகதந்த கணபதியே எனக்குள் தத்துவஸார முணர்த்தி இவனை தடுத்தாட் கொண்டிடுவாய் 61

சதுர்வேத ஸாரமான பஞ்சமுக கணபத்திக்கு ஜெயமங்களம்
ஹரிஹரனின் உருவமான ஐந்துமுக கணபதிக்கு நித்யஸுபமங்களம்
அகஸ்திய ரிஷிகளுக்கு அருள்பாலித்த வல்லபை கணபதிக்கு ஜெயமங்களம்
அனைத்தின் உருவமான ஆபத்ஸஹாயனுக்கு நித்யஸுபமங்களம் 62

நினைத்தவுடன் பொருளுடன் உனது திருவருளையும் தந்து ரக்ஷிக்கும் ஸத்குரு கணபதிக்கு ஜெயமங்களம்
வல்வினைகளை வேரறுத்து வாழ்வளிக்கும் பஞ்சமுக கணபதிக்கு நித்யஸுபமங்களம்
ஸப்தப்ரம்மமயமான மங்கள கணபதிக்கு ஜெயமங்களம்
சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தை ரக்ஷிக்கும் பஞ்சமுக கணபதிக்கு நித்யஸுபமங்களம் 63

ஓம் கம் ஓம் என்று கணபதியை உள்ளத்தில் ஜபிப்போற்கு ஜெயமங்களம் ப்ரபஞ்சமயமான பஞ்சமுக கணபதிக்கு நித்யஸுபமங்களம்
பஞ்சக்ருத்யம் செய்துவரும் ஐந்துமுக கணபதிக்கு ஜெயமங்களம்
ஹேரம்ப கணபதியின் கவச பாராயணம் செய்பவர்க்கு நித்யஸுபமங்களம் 64

கணபதியே ஸத்யம் கணபதியே நித்யம் கணபதியே ப்ரம்மமென்றுணர்ந்தோர்க்கு ஜெயமங்களம்
கணபதியே அறிவு கணபதியே அன்பு கணபதியே ஆத்மாவென்றுணர்ந்தோர்க்கு நித்யஸுபமங்களம்
மூவர் தேவர் முனிவர் போற்றும் சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம பஞ்சமுக கணபதிக்கு ஜெயமங்களம்
ஸர்வலோக ரக்ஷகனான ஸத்குரு ஸ்வயம்ப்ரகாச கணபதிக்கு நித்யஸுபமங்களம் 65

நிஷ்கள நிர்குண நிராமய நிரஞ்சனனான பஞ்சமுக கணபதிக்கு ஜெயமங்களம்
பஞ்சபாப நாஸக பக்தரக்ஷக பரமாத்ம ஸ்வரூபமான ஐந்துமுக கணபதிக்கு நித்யஸுபமங்களம்
ப்ரபஞ்சரக்ஷகனான பஞ்சமுக ஹேரம்ப கணபதியை சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் கண்டுய்பவர்களுக்கு ஜெயமங்களம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரப்ரம்மமய பஞ்சமுக கணபதிக்கு நித்யஸுபமங்களம் 66

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் தத் ஸத்