ஸ்ரீ ப்ரதோஷ சிவ கவசம்

ஸ்ரீ ப்ரதோஷ சிவ கவசம்

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் ஸ்ரீ கணேசாய நம:
ஓம் நம சிவாய

முழுமுதற் கடவுளெனப் போற்றும் வல்லபை கணபதியே
கலியுகத் தெய்வமெனப் போற்றும் சேலம் ஸ்கந்தாஸ்ரம ஸ்கந்தகுரோ
ஹரிப்ரம்மாதிகள் போற்றும் அழிவற்ற சிவ பரம்பொருளின்
ப்ரதோஷ சிவ கவச ஸ்தோத்திரத்தை இவனுக்கருளிடுவாய்

பிறவிப்பிணி அகற்றும் ஸத்குரோ ப்ரதோஷ சிவ கவசம் தந்திடுவாய்
இருப்பதெல்லாம் அழிவற்ற சிவமென்றுணர ஸத்குரோ சிவ கவசம் தந்திடுவாய்
இவ்வுலகத்தை சிவலிங்கமென்றுணர ஸத்குரோ சிவ கவசம் தந்திடுவாய்
இவன் ஜீவனை அழிவற்ற சிவமென்றுணர ஸத்குரோ சிவ கவசம் தந்திடுவாய்

அழிவற்ற மறைகள் போற்றும் அண்ணாமலை சிவமே இவன் சிரசுடன் சிகையையும் காத்திடுவாய்
முப்பத்துமுக்கோடி தெய்வங்களுக்குள் உயிர்க்குயிராய் இருந்து வரும் அழிவற்ற சிவமே இவன் அறிவையும் அன்பையும் காத்திடுவாய்
முப்பாலுக்கப்பாலாயிருந்துவரும் அழிவற்ற சிவபெருமானே இவன் ஆத்மாவாய் இருந்து காப்பாய்
நாமரூபமற்ற சிவசம்போ சங்கரா இவன் மூளையைக் காத்திடுவாய்

இருவினைகளை எரித்துச் சாம்பலாக்கும் எல்லாம்வல்ல ஈஸ்வரனே இவன் கண்களுடன் மூக்கையும் காதையும் காத்திடுவாய்
சிவசிவ என்றவுடன் மும்மலத்தை பொசுக்கும் சிவசிதம்பர நடராஜா இவன் பல்லினையும் நாவினையும் காத்திடுவாய்
அகவிருளை அகற்றி அருட்பெருஞ்ஜோதியை அகத்துள் நானென்றுணர்த்தும் ஆதிசிவபரம்பொருளே இவன் அகக்கண்ணாய் இருந்து காப்பாய்
சிவசிவ என்றவுடன் சித்த சுத்தியை உண்டாக்கும் சென்னை கபாலீஸ்வரனே இவன் முகத்தினையும் கழுத்தினையும் காத்திடுவாய்

காமனை எரித்திட்ட காளஹத்தீஸ்வரனே இவன் தோளினை காத்திடுவாய்
கேதாரேஸ்வரனான சிவபெருமானே இவன் மார்பினையும் முதுகினையும் காத்திடுவாய்
கைலாயத்திலிருக்கும் காசிவிஸ்வநாதா இவன் உயிர்க்குயிராய் இருந்து காப்பாய்
காஞ்சி ஏகாம்பர சிவமே எங்கும் எல்லமாயிருந்து காப்பாய்

ராமேஸ்வரமிருக்கும் ராமநாத பரசிவமே இவன் வயிற்றினையும் இடுப்பினையும் காத்திடுவாய்
நினைத்தவுடன் முக்திதரும் அருணாசல சிவரமணா இவனுள் நான் என்றிருந்து காப்பாய்
நால்வேத ஸாரமான நமச்சிவாய குருநாதா இவன் குதத்தினையும் குறியையும் காத்திடுவாய்
ஆதிஅந்தமற்ற அழிவற்ற அண்ணாமலை சிவமே இவன் கைகால்தொடைகளை காத்திடுவாய்

நஞ்சுண்டேஸ்வரனான மதுரை மீனாட்சி சுந்தரனே இவன் விரல்களுடன் நகங்களையும் காத்திடுவாய்
மூவரோடு முப்பத்து முக்கோடி தெய்வத்தின் நெஞ்சத்துள் நீங்காதிருந்து வரும் பட்டினத்தில் உரை திருவொற்றியூர் சிவமே
இவன் எலும்புடன் தோல் மஜ்ஜை மாம்ஸத்தையும் காத்திடுவாய்
அறுவத்துமூவர் போற்றும் அழிவற்ற தஞ்சை ப்ருஹதீஸ்வரனே இவன் நெஞ்சத்துள் நீங்காதிருந்து காப்பாய்

இரேழுலகமாய் இருந்துவரும் அழிவற்ற வேதாரண்ய சிவமே இவன் உள்ளும் புறமும் நின்று காப்பாய்
எந்நாட்டவர்க்கும் இறைவனான தென்னாடுடைய தாயுமானவ சிவமே இவன் பேராசை பொறாமை பொசுக்கிடுவாய்
அழிவற்ற சிவலோகநாதனான சிவபுரத்து அரசே இவனகத்துள் இருக்கும் காம க்ரோத லோபத்தை பொசுக்கிடுவாய்
அணுவுக்கணுவாய் இருந்து வரும் ஆதிஅந்தமற்ற ஸ்ரீசைல சிவகுருநாதா மோஹத்தை எரித்திடுவாய்

இவன் உள்ளத்தில் நான்நானென்று இருந்து வரும் ஆதிசங்கர குரோ இவன் நிஜ ஸ்வரூபம் நான் என்றுணர்த்திடுவாய்
சேந்தமங்கலம் மஹாபுருஷனான அவதூத ஸ்வயம்ப்ரகாச ஸத்குரோ சிவதாரக மந்திரத்தை தந்திடுவாய்
மகனே ஓம் சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ சிவ சிவாய சிவாய நம ஓம் என சிந்தித்திருப்பதுவே உபதேசமாகுமப்பா
ஓம் சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ சிவ சிவாய சிவாய நம ஓம் என அகத்துள் ஜபிப்பதுவே சிவனடியார் வேலைப்பா

ஓம் சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ சிவ சிவாய சிவாய நம ஓம் என த்யானித்திருப்பதுவே சிவபக்தி யோகமாகுமப்பா
ஓம் சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ சிவ சிவாய சிவாய நம ஓம் என அசைவற்றிருப்பதுவே சிவஞானமாகுமப்பா
சிவசிவ என்றேத்தி உனது ஜீவனை சிவமயமாக்கிடப்பா சிவசிவ என்றேத்தி உன்னை சிவலோகமாக்கிடப்பா
சிவசிவ என்றேத்தி உன்னை அழிவற்ற சிவமயமாக்கிடப்பா சிவசிவ என்றிடைவிடாதேத்திவிட்டால் நீயும் ஜீவன் முக்தனாகிடுவாய்

ஆசையிருக்கும்வரை உனக்குள் கவலை இருக்குமப்பா
ஆசையிருக்கும்வரை உனக்குள் உலகம் இருக்குமப்பா
ஆசையிருக்கும்வரை உனக்குள் த்வைதம் இருக்குமப்பா
ஆசையை முற்றிலும் துறப்பது தான் நிர்வாண சுகமாகுமப்பா மறந்திடாதே

ஆசையிருக்கும்வரை உனக்குள் அஞ்ஞானம் இருக்குமப்பா
ஆசையிருக்கும்வரை உனக்குள் தன்னை சிவமென்றுணர முடியாதப்பா
ஆசையிருக்கும்வரை உனக்குள் அழியும் ப்ரபஞ்சம் இருக்குமப்பா
ஆசையற்றவுடன் உனதறிவை ஆன்மாவை அழிவற்ற சிவமென்றுணர்வாயப்பா

முற்றிலும் ஆசையற்ற மனமே அழிவற்ற சிவமாகுமப்பா
முற்றிலும் ஆசையற்ற மனமே அழிவற்ற அன்பாகுமப்பா
முற்றிலும் ஆசையற்ற மனமே அழிவற்ற அறிவாகுமப்பா
முற்றிலும் ஆசையற்ற மனமே அழிவற்ற ஆன்மாவாகுமப்பா மறவாதே மறவாதே

அழிவற்ற சிவமே உலகின் உள்ளும் புறமும் நான் நான் என்றூடுருவி நிற்கின்றான்
யாதொரு விகாரமும் இல்லாத சிவமே உனக்குள் உண்மையறிவாய் ஆன்மாவாய் இருக்கின்றான்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிர்க்குயிராய் இருக்கின்ற சிவமே உனதுயிராய் இருக்கின்றான்
உனது சித்தத்தை சிவமயமாக்கும் மந்திரம் சிவசிவ என்பதாகும் மறவாதே

மும்மலம் பிணியகல உனக்குள் சத்தியமாய் சிவத்தை நம்பிடப்பா
மனத்தை பண்படுத்த உனக்குள் சிவசிவ என்று இடைவிடாதேத்திடப்பா
மனம் சிற்றின்பத்தை நாடி சீரழியாதிருந்து வர நீ உனக்குள் சிவசிவ என்று ஜபித்திடப்பா
மனம் அன்பும் அறிவும் அழிவற்ற ஆன்மா என்றுணர உனக்கு சித்த சுத்தி வேண்டுமப்பா

அல்லலோடு அறுவினையை அறுத்தெறியும் மந்திரம் சிவசிவ என்பதாகும்
தாரித்ரியத்தை துடைத்தெறியும் மஹாமந்திரம் சிவசிவ என்பதாகும்
துக்கத்தை பயத்தை வேருடன் அறுக்கும் மந்திரம் சிவசிவ என்பதாகும்
ஊழ்வினையைப் போக்குவித்து உன்னை சிவமயமாக்கும் மந்திரம் சிவசிவ என்பதாகும்

அழிவற்ற சிவன் அகத்துள் நான் என்றிருப்பதை நீயுணர அசைவற்றிருந்துகொண்டு சிவசிவ என்றேத்திடப்பா
அழிவற்ற நானே அழிவற்ற சிவமென்றுணர சிவசிவ என்றேத்திடப்பா
எனதுஉனதெனும் செறுக்கறுக்கும் சிவபெருமானை நீயும் சிவசிவ என்றேத்திடப்பா
விருப்புவெறுப்பெனும் பந்தபாசத்தின் வேரறுக்கும் சிவபெருமானை நீயும் சிவசிவ என்றேத்திடப்பா

பேரின்ப பெருவாழ்வை இம்மையுள் நீ பெற்றுய்ய அழிவற்ற சிவத்தை நம்பிடப்பா
அத்வைத நிலையிலிருந்தது வழுவாதிருந்து வர சிவனருள் வேண்டுமப்பா
நானே சிவமென்றுணர சிவகுருநாதனின் திருவருள் உண்மையாய் வேண்டுமப்பா
மனத்தை சிவமயமாக்கிவிட ஸ்வயம்ப்ரகாச ஸத்குருவின் உபதேசத்தை சிக்கெனப் பற்றிடப்பா

ஊழ் எனும் விதியைப் பொசுக்க உனக்குள் சிவசிவ என்றேத்திடப்பா
உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் தாய்தந்தை சிவபெருமானாகும் மறவாதே
உலகிலுள்ள உயிர்களெல்லாம் அழிவற்ற சிவமாகும் மறவாதே
உலகில் பிறந்துள்ள அனைத்துமே அழிவற்ற சிவமாகும் மறவாதே

எல்லாம் வல்ல சிவபெருமானின் ஆற்றல் சிவதாரக மந்திரமாய் இருக்குதப்பா
அழிவற்ற இறைவனின் ஆற்றலை உனக்குள் நீ நானென்றுணர்ந்துகொள்ள சிவசிவ என்றுனக்குள் ஜபித்திடப்பா
உன்னை அறியாமலே தன்னை சிவமாக்கும் மந்திரம் சிவதாரக மந்திரமாகுமபா
எல்லாம் வல்ல இறைவனருள் தனக்குள் நான் நான் என்றிருப்பதை உணர நீயும் சிவத்யானம் செய்திடப்பா

அழிவற்ற சிவத்தை தனக்குள் நான் என்றுணர்வதுதான் உனதறிவின் வேலையாகும் மறந்திடாதே
விதியின் வேரறுக்கும் சிவபெருமானை நீயும் சிக்கெனப் பற்றிடப்பா
சிவபெருமானை தனக்குள் நான் என்று நீயும் உணர்வதற்கு சிவசிவ என்றேத்திடுவாய்
மனமே உறுதியான நம்பிக்கை உன்னையும் சிவமயமாக்கும் மறந்திடாதே

நீயும் திருத்தம் பெற்றுய்வதற்கு சிவத்தை சத்யமாய் நம்பிடப்பா
நீயும் விதியை வெல்வதற்கு சிவபரம்பொருளை சத்யமாய் நம்பிடப்பா
கருணை வடிவாகிய கடவுளெனப் போற்றும் சிவத்தை உனதுயிராய் நம்பிடப்பா
கருணைக் கடலான சிவத்தை சத்யமாய் நம்பிவிட்டால் நீயும் அழிவற்ற சிவபரம்பொருளாகிடுவாய்

வினைப் பயனாகிய விதியை வேரோடு பிடுங்கிட சிவசிவ என்று ஜபித்திடப்பா
திருவருள் மயமாகியிருந்துவரும் அழிவற்ற சிவதாரக மந்திரத்தை நாத்தழும்பேற ஜபித்திடப்பா
ஊழை வெல்வதற்கு சிவதாரக மந்திரமொன்றே உனக்கு போதுமப்பா
இருப்பதெல்லாம் சிவமென்றுணர்ந்தவனை ஊழ்வினை அணுகாதப்பா

தொய்வின்றி சதா காலம் சிவசிவ என்றேத்திவிட்டால் நீயும் தூய சிவமாகிடுவாய்
பாவத்தை சாம்பலாக்கும் பரசிவத்தை தனக்குள் நானென்றுணர்ந்தவனே ஜீவன்முக்தனப்பா
பலனை விரும்பிச் செய்த பாவத்தை துடைத்தெறியும் பரசிவத்தை நீயும் நம்பிடப்பா
மனமே இடைவிடாது அழிவற்ற சிவத்தை தனக்குள் நான் என்றுணர்வதுதான் சிவஞானமாகுமப்பா

நாள் தோறும் இடைவிடாமல் சிவசிவ என்றேத்துவதே மாதவமாகுமப்பா
நாள் தோறும் இடைவிடாமல் சிவசிவ என்றேத்திவிட்டால் உனது ஜீவன் சிவமயமாகுமப்பா
நாள் தோறும் இடைவிடாமல் சிவசிவ என்றேத்திவிட்டால் உனது சித்தம் சிவமயமாகிவிடும்
நாள் தோறும் இடைவிடாமல் சிவசிவ என்றேத்திவிட்டால் சிவமேநான் நானேசிவம் என்றுணர்வாயப்பா

உலகிலுள்ள உயிரினோடு இரண்டற கலந்துள்ள சிவமே போற்றி போற்றி
உலகிலுள்ள உயிர்களிடம் உண்மை அறிவாய் இருந்துவரும் சிவமே போற்றி போற்றி
உலகிலுள்ள உயிர்களிடம் உண்மை அன்பாய் இருந்துவரும் சிவமே போற்றி போற்றி
உலகிலுள்ள உயிர்களிடம் அழிவற்ற ஆன்மாவாய் இருந்துவரும் சிவமே போற்றி போற்றி

ஆதிஅநாதியாயுள்ள ஸச்சிதானந்த பொருளான சிவமே போற்றி போற்றி
அனைத்துயிர்களிடம் அத்வைதமாய் இருந்துவரும் சிவமே போற்றி போற்றி
அழிவற்ற இறைவனெனப் போற்றும் சிவபெருமானே போற்றி போற்றி
ஆணவ மலத்தை நீக்கி அகத்துள் பேரொளிப் பொருளாய் இருந்துவரும் சிவமே போற்றி போற்றி

உலகினுள்ளும் புறமும் ஊடுருவியிருந்துவரும் சிவமே போற்றி போற்றி
மும்மலத்துடன் இருவினையையும் நீக்கி இவனை சிவமாக்கும் சிவபெருமானே போற்றி போற்றி
முத்தொழிலை செய்துவரும் முக்கண்ணனான சிவபெருமானே போற்றி போற்றி
அறியாமையை பொசுக்கி ஆன்மாவை அழிவற்ற சிவமென்றுணர்த்தும் சிவபெருமானே போற்றி போற்றி

ஆணவமலத்தினால் அறியாமை உடையவனின் இருள் மலமறுக்கும் சிவபெருமானே போற்றி போற்றி
வினையெனும் மாயாமலமெரித்து மனிதனை மாமனிதனாக்கும் சிவபெருமானே போற்றி போற்றி
மாந்தர் மலப்பிணிப்பை நீக்கி மனத்தை சிவமயமாக்கும் சிவபெருமானே போற்றி போற்றி
பேரின்ப மயமெனப் போற்றும் பரஞ்ஜோதிர் மயமான சிவபெருமானே போற்றி போற்றி

துன்பமனைத்தையும் துடைத்தெறியும் சிவபெருமானே போற்றி போற்றி
சிந்திப்பதற்கெளிதாயிருந்துவரும் சிவபெருமானே போற்றி போற்றி
உலகவிஷயத்திலுழன்று துன்புறுபவன் துயரத்தை போக்கும் சிவபெருமானே போற்றி போற்றி
முக்குணமற்ற முழுமுதற் கடவுளான சிவபெருமானே போற்றி போற்றி

தன்னைத்தொழுது சரணமடைந்தவனின் வினைவனத்தைச் சுட்டு நீராக்கும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
இவன் சிந்தையில் குடியிருக்கும் ஆதிஅந்தமுமில்லா சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
நினைப்பவர் நெஞ்சுள் நீங்காது நிறைந்திருக்கும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
இவனுள் நான் நான் என்றிருந்துகொண்டு அருள்செய்துவரும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்

சுடலைப்பொடிபூசி என்உள்ளங்கவர் கள்வனான சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
உலகின் உயிர்களுக்குள் உயிர்க்குயிராய் இருந்துவரும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
ஜோதியாய் ஸுடாராய் ஸ்வயம்ப்ரகாசமான சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
உலகிலுள்ள ஒலிஒளியெல்லாம் ஓர்சிவத்தின் அருளின்றி வேறில்லா சிவபெருமானுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்

பாரில்பல வேடம்பூண்டு பற்பல தெய்வமாய் இருந்துவரும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
சதுர்வேத ஒலிமயமாய் இருந்துவரும் ஸதாசிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
அயன்மாலின் உயிருக்குயிராயிருந்துவரும் அழிவற்ற சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
சிவனாகித் திசைமுகனாய் திருமாலாய் இருந்துவரும் அழிவற்ற சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்

மண்ணும் விண்ணுமிலா விஸ்வாதீனமாயிருந்துவரும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
காமம் வெகுளி மயக்கமுடன் இருவினைகளை வேரறுக்கும் அழிவற்ற சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
வினைப்பயன் அனைத்தையும் வேரோடு களையும் அழிவற்ற சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
குறிக்கோள் இலாதகொடுங்கயவர்களையும் கடைத்தேற்றும் அழிவற்ற சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்

நல்வினை தீவினையறுத்து பிறவிப்பெருங்கடலை கடத்தி வைக்கும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
குற்றம் நீக்கி பேரின்ப பெருங்கடலில் ஆழ்த்திவிடும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
விருப்பையும் வெறுப்பையும் விதியையும் வறுத்துவிடும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
நிலையான பேரின்பத்தை தந்து தடுத்தாட்கொள்ளும் சிவத்திற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்

தென்னாடுடைய சிவபெருமானே சரணம் சரணமப்பா
வடநாட்டில் கையிலை மலையாயிருக்கும் சிவபெருமானே சரணம் சரணமப்பா
அகத்துள் அருவுருவமாய் இருந்துவரும் சிவபெருமானே சரணம் சரணமப்பா
அகத்துள் அன்புருவமாய் இருந்துவரும் சிவபெருமானே சரணம் சரணமப்பா

ஈரேழுலகமாய் இருந்துவரும் எல்லாம் வல்ல சிவபெருமானே சரணம் சரணமப்பா
அசையும் பொருளாய் இருந்துவரும் அழிவற்ற சிவபெருமானே சரணம் சரணமப்பா
அசையாப் பொருளாய் இருந்துவரும் அழிவற்ற சிவபெருமானே சரணம் சரணமப்பா
நல்லனவும் தீயனவுமாயிருந்துவரும் அழிவற்ற சிவபெருமானே சரணம் சரணமப்பா

உருவமாய் அருவமாய் இருந்துவரும் அழிவற்ற சிவபரம்பொருளே சரணம் சரணமப்பா
உலகமக்களின் உள்ளத்தே நான் நான் என்றிருந்துவரும் அழிவற்ற சிவபரம்பொருளே சரணம் சரணமப்பா
அனைவரின் சித்தத்துள் அழிவற்ற சிதகாயமாய் இருந்துவரும் சிவபரம்பொருளே சரணம் சரணமப்பா
ஓசைஒளிகளுக்கும் அப்பாலிருந்துவரும் சிவபரம்பொருளே சரணம் சரணமப்பா

உண்மை அணுவுமிலா உலகபோக வாழ்வில் உழலாதிருந்திடச் செய்திடுவாய் சிவகுருநாதா
இவன் இடர்களை நீக்கிப் பேரின்பத்தைப் பருகிடச் செய்திடுவாய் சிவகுருநாதா
இவனுள் பந்தபாசம் அகற்றி பாரெல்லாம் சிவனென்றுணர்த்திடுவாய் சிவகுருநாதா
இவனுள்ளிருக்கும் பேராசை பொறாமையைப் பொடிசெய்து பெருநெறியில் இருத்திடுவாய் சிவகுருநாதா

உனது நெற்றிமேற்கண் காட்டி இவன் நினைப்புகளை பொசுக்கிடுவாய் சிவகுருநாதா
உனதருட்பார்வையால் மெய்ப்பொருளை நான் என்றுணர்த்திடுவாய் சிவகுருநாதா
காணாக் கண் திறந்த சிவபெருமானே பாபபுண்யத்தை பொசுக்கி இவன் சித்தத்தை பரிசுத்தமாக்கிடுவாய் சிவகுருநாதா
அழிவற்ற சிவமே அகத்துள் உன்னை நான் நான் என்றுணர்த்திடுவாய் சிவகுருநாதா

அழிவற்ற சிவக்ஷேத்திரம் உனதுடம்பாகுமப்பா மூவர் தேவருள்ளிருக்கும் முழுமுதற் கடவுளான சிவமே நான் நான் என்று இருக்குதப்பா
மாமுனிவர் மாமனிதர் மனிதகுலத்திலிருக்கும் உனதகத்துள் ஆன்மாவாய் இருக்குதப்பா
அங்கிங்கெனாதபடியெங்கும் எல்லாமாயிருந்துவரும் சிவம் உனதறிவாயிருக்குதப்பா
முழுமனத்துடன் பற்றிக் கொண்டுள்ள மெய்ஞானசித்தர்கள் போற்றும் சிவபெருமான் உனக்குள் நான் என்றிருக்குதப்பா

உனது மனத்துள் நீ சென்று சிவசிவ என்றேத்தியுன்னை சிவமயமாக்குவதே மாதவமாகுமப்பா
உனதான்மாவை அழிவற்ற சிவமென்றுணர்வதுவே ப்ரம்மானுபவமாகுமப்பா
மனமே உனதகத்துள் சிவபெருமான் நான் நான் என்றிருப்பதை நீயும் சத்தியமாய் நம்பிடப்பா மறந்திடாதே
பாரின்மிசை ஹிமகிரியின் சிகரத்திலிருந்துவரும் சிவபெருமானே உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா

சலனமிலா அகண்ட பரசிவபெருமானே உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
உனது சற்குருவே அகண்ட பரசிவமாய் சத்தியமாய் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
உனது சத்குருவின் சாஸ்வத நிஜ ஸ்வரூபம் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
விகாரமிலா நிர்மலமான சிவம்  உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா

ஜீவபரபேதமிலா சிவம் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
சித்தமுதல் எவையுமிலாத சிவம் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
அழிவற்ற சத்யமான சிவம் உனக்குள் நான் நான் என்று உனதான்மாவாயிருக்குதப்பா மறவாதே

சங்கல்பம் சற்றுமிலா சிவம் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
சிதானந்த மயமான சிவம் உனக்குள் நான் நான் என்று சாந்தமாயிருக்குதப்பா
அழிவற்ற சனாதனமான சிவம் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா
அழிவற்ற ஸ்வயம்ப்ரகாசமான சிவம் உனக்குள் நான் நான் என்றிருக்குதப்பா

சத்யஞானானந்த மயமாய் இருப்பதுவும் அழிவற்ற நீயும் சிவம் தானப்பா
ஸச்சிதானந்த மயமாய் இருப்பதுவும் அழிவற்ற சிவமும் நீ தானப்பா
நித்யமாய் நிர்குணமாய் இருப்பதுவும் அழிவற்ற சிவமும் நீ தானப்பா
நிராகார நிரஞ்ஜனமாய் இருப்பதுவும் அழிவற்ற சிவமும் நீ தானப்பா

அகில சராசரங்கள் எல்லாம் அழிவற்ற சிவம் தானப்பா
ஹரி அயனுடன் அனைத்துமே அழிவற்ற சிவம் தானப்பா
உலகில் பரவுமஹாமுனிவருடன் மனிதரெலாம் சிவம் தானப்பா
உலகில் அசையும் அசையாப் பொருளெல்லாம் சிவம் தானப்பா

இருப்பதெனத் தோன்றுவதும் அழிவற்ற சிவம் தானப்பா
இல்லையெனத் தோன்றுவதும் அழிவற்ற சிவம் தானப்பா
த்ருக் த்ருஷ்ய மயத்தோற்றமெலாம் சிவம் தானப்பா
நீ நானாய் தோன்றுவதும் சிவம் தானப்பா

ஹரி ப்ரம்மாதி தேவர்களும் மனிதர்களும் சத்யம் எனப்போற்றும் சிவம் தானப்பா
அறுதியிட்டுச் சொல்லிவிட்டான் சிவ ஸத்குருநாதன் சத்யமாய் நம்பிடப்பா
சத்யமாய் சொன்னதை நீ சத்யமாய் நம்பிடப்பா
ஸத்குரு சொன்னபடி செய்துவிட்டால் சத்யஞானானந்த சிவமாய் தான் தானாய் நீயும் இருப்பாயப்பா

உனதறிவுக்கும் அறிவாய் இருந்துவரும் அழிவற்ற சிவத்தை நம்பிடப்பா
அனைத்திற்கும் அப்பாலுக்க்கப்பாலாய் இருந்துவரும் அழிவற்ற சிவத்தை நம்பிடப்பா
நிறைவுக்கு நிறைவாய் இருந்துவரும் அழிவற்ற சிவத்தை நான் நான் என்று நம்பிடப்பா
தனக்குள் தான் தானாய் இருந்துவரும் அழிவற்ற சிவத்தை சத்யமாய் நம்பிடப்பா

உனதுள் நிர்குண நிர்மல நிரஞ்சனமாய் இருந்துவரும் சிவத்தை சத்யமாய் நம்பிடப்பா
ஸத்தாக சித்தாக ஸச்சிதானந்த மயமாக இருந்துவரும் சிவத்தை நம்பிடப்பா தனக்குள் ஊடுருவிச் சென்று நான் யாரென்று நீயும் கேட்பாயானால்
நானே அழிவற்ற சிவபரம்பொருள் என்று சத்தியமாய் உணர்வாயப்பா

நானே சிவம் சிவமே நான் என்று நினைப்பதுதான் சிவபூஜை ஆகுமப்ப்பா

நானே சிவம் சிவமே நான் என்று நினைப்பதுதான் சிவதாரக மந்திரஜபமாகுமப்பா
நானே சிவம் சிவமே நான் என்றிடைவிடாது நினைப்பதுதான் சிவயோகம் ஆகுமப்ப்பா
நானே சிவம் சிவமே நான் என்று அசைவற்று இருப்பதுதான் சிவஞானம் ஆகுமப்ப்பா மறந்திடாதே

அழிவற்ற ஆன்மா எனப்போற்றும் சிவத்தைத் தவிர தோன்றியுள்ள ப்ரபஞ்சம் அனைத்தும் சுத்தப்பொய்தானப்பா
நித்யானந்தமயமாய் இருந்துவரும் அழிவற்ற சிவத்தைத் தவிர அனைத்தும் சுத்தப்பொய்தானப்பா
அத்வைதமயமான அழிவற்ற ஆன்மா எனப்போற்றும் சிவத்தைத் தவிர த்வைதமெல்லாம் சுத்தப்பொய்தானப்பா
காண்பதெல்லாம் காணல்நீராகும் காண்பவனே அழிவற்ற சிவமாகும் மறந்திடாதே

கனவினிடைக் கண்ட பொருள் போல் இவ்வுலகம் சுத்த பொய்யாயிருக்குதப்பா மறந்திடாதே
ப்ரபஞ்சமெல்லாம் முயற்கொம்பைப் போல் இருக்குதப்பா மறந்திடாதே
சிந்தையுற விசாரிக்கின் சத்யமாய் ஜகத்தென்று ஒன்று இல்லையப்பா மறந்திடாதே
நான் நான் என்று உனக்குள் சின்மயமாய் இருந்து வரும் சிவ பரம்பொருளே முற்றிலும் சத்தியமாப்பா

நான் யாரென உனக்குள் நீ ஊடுருவிச் சென்று உறுதியாய் கேட்பாயாயின்
நித்ய சுத்த பரப்ரம்ம சிவம் நான் தான் என்றுணர்வாயப்பா
ஆதலினால் இவ்வுலகில் அணுவேனும் த்வைதமில்லை மறந்திடாதே
சிவஞானமே சத்யஞானானந்தம் என்று ஸத்குருநாதன் அறுதியிட்டு கூறிவிட்டான் மறந்திடாதே

உனது கற்பனைகள் அனைத்தும் மித்யையாகும் மறந்திடாதே
ஏகபரிபூரணமான சிவத்தைத்தவிர மற்றனைத்தும் மித்யையாகும் மறந்திடாதே
நீநான் என்று எண்ணுகிற எண்ணமெல்லாம் சுத்தப் பொய்தானப்பா மறந்திடாதே
உலகில் ஒருபொருளும் அழிவற்ற சிவத்திற்கு அயலாயில்லையப்பா மறந்திடாதே

சிவசிவ என்றேத்திவிட்டால் கோடான கோடிப் பிறவியில் செய்துள்ள மிகக்கொடிய பஞ்சமஹா பாவமெல்லாம் பஞ்சில் பட்ட தீப்போலாகிவிடும்
சிவசிவ என்றேத்திவிட்டால் உனது ஜீவன் சிவமயமாகிவிடும்
சிவா கவச ஸ்தோத்திர பாராயணம் அக்பதானியின் மனத்தையும் அழிவற்ற சிவமயமாக்கும் மறந்திடாதே
சிவ கவச பாராயணம் தன்னை அழிவற்ற சிவபரம்பொருள் என்றுணர்த்திவிடும் மறவாதே

மகனே இந்த சிவகவசம் உனக்குள் ஸர்வமும் சிவமென்று சத்யமாய் உணர்த்தி வைக்கும் மறவாதே
மகனே இந்த சிவகவசம் உன்னை சத்ய ஞானானந்த மயமாக்குவிக்கும் சத்யமாய் நம்பிடப்பா மறவாதே
மகனே இந்த சிவகவசம் உன்னை ஸச்சிதானந்த மயமாக்குவிக்கும் சத்யமாய் நம்பிடப்பா மறவாதே
மகனே இந்த சிவகவசம் உன்னை அழிவற்ற சிவமயமாக்கிவிடும் சத்யமாய் நம்பிடப்பா மறந்திடாதே

சிவஸத்குருநாதன் உபதேசித்த சிவகவச ஸ்தோத்திரத்திற்கு ஜயமங்களம் நித்யஸுபமங்களம்
சிவகவச ஸ்தோத்திர பாராயணம் செய்பவர்க்கு ஜயமங்களம் நித்யஸுபமங்களம்
சிவகவச ஸ்தோத்திர பாராயணத்தால் சிவானுபூதி உண்டானவற்கு ஜயமங்களம் நித்யஸுபமங்களம்
சிவகவச ஸ்தோத்திர பாராயணத்தின் பலனாய் ஜீவன்முக்தனானவர்களுக்கு ஜயமங்களம் நித்யஸுபமங்களம்

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் தத் ஸத்