ஸ்ரீ மஹா சுதர்ஷன மஹாமந்த்ரோபதேச சக்ர ராஜ கவசம்

ஸ்ரீ மஹா சுதர்ஷன மஹாமந்த்ரோபதேச சக்ர ராஜ கவசம்

ஓம் ஸ்ரீ கணேசாய நம:
ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:

கணபதியே சரணம் சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன கவசம் வேண்டுகிறேன்
ஏக பர சுகம் தரும் கவசம் வேண்டுகிறேன்
பரம புருஷா, பரந்தாமா,
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மகனே! சக்ரராஜனை சரணமடைந்திட்டால்
துக்கமும் பயமும் விலகியோடும்
கஷ்ட மனைத்தையும் துடைத்திடுவான்
எதிரிகள் அனைவரும் மறைந்திடுவர்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

துஷ்ட நிக்ரஹம் செய்திடுவான்
விரோதிகளை பொடிப் பொடியாக்கிடுவான்
அறியாமையை விரட்டி எரித்திடுவான்
அருட்பெரும் ஜோதியாய் காட்சி தருவான்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மஹா சுதர்ஷணன் ஜபத்யானம்
ஸ்ரீமன் நாராயணனை உணர்த்திவிடும்
மஹாசுதர்ஷன உபாசனையும்
மனிதனை தெய்வமாக்கிவிடும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சக்ரராஜனின் மஹா மந்த்ர ஜபத்யானம்
அபம்ருத்யுதோஷமதை துடைத்துவிடும்
பூத ப்ரேத பிசாசுகளுடன்
அபஸ்மார நிவர்த்தியுண்டாக்கும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஸர்வ ரோகத்தையும் துடைத்துவிடும்
ம்ருத்யுபயத்தையும் போக்கிவிடும்
ஞான வைராக்கியத்தையும் உண்டாக்கும்
கலி காலத்தையும் ஜெயிக்க வைக்கும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

குலமும் செல்வமும் கிட்டிவிடும்
அருளோடு பெருநிலமுமளிக்கும்
நலம் தரும் சக்ரராஜனின் கவசம்
உன்னை நாராயண மயமாக்கிவிடும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மனத்துயரத்தை மாற்றி விடும் சக்ரம்
மன ஒருமைப்பாட்டை உண்டாக்கும் சக்ரம்
தீய சக்திகளை விரட்டிவிடும் சக்ரம்
தீய எண்ணங்களை பொசுக்கிவிடும் சக்ரம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

உள்ளத்தூய்மையை உண்டாக்கும் சக்ரம்
இறைவனாம் நாராயணனை காட்டிவிடும் சக்ரம்
உன்னை கடவுளின் அம்சமென்று உணர்த்திவிடும் சக்ரம்
கடவுளின் சக்ரமே, சுதர்ஷன சக்ரம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஸர்வ வ்யாபியான சுதர்ஷன சக்ரம்
சாந்தியும் சொல்லில் அடங்கா
பரம் பொருளின் கையில் இருக்கும் சக்ரம்
ஸர்வமும் விஷ்ணுமயமான சக்ரம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

எல்லோரையும் ரக்ஷிக்கும் சுதர்ஷன சக்ரம்
எல்லாவற்றையும் ரக்ஷிக்கும் சக்ரம்
எல்லா ஜீவராசிகளையும் ரக்ஷிக்கும் சக்ரம்
ஸர்வ தேவமயமான சுதர்ஷன சக்ரம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

அனைவருடைய அந்தர்யாமியாய் இருக்கும் சக்ரம்
ஸர்வ ஸப்தஸ்வரமுமான சுதர்ஷன சக்ரம்
அனைத்தின் ஆதாரமாய் இருக்கும் சக்ரம்
எல்லாவற்றையும் வ்யாபித்துள்ள சக்ரமே சுதர்ஷன சக்ரம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஸுபத்தை உண்டாக்கும் சுதர்ஷன சக்ரம்
ப்ரம்மாதிஜோதிமயமான சுதர்ஷன சக்ரம்
இருப்பதுவும் இல்லாததுவும் சுதர்ஷன சக்ரம்
பரம் பொருளின் கையில் இருக்கும் சுதர்ஷன சக்ரம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

கேசவனின் சுதர்ஷனமே சிரசினைக் காத்திடுவாய்
நாராயணனின் சக்ரமே கண்களையும் மூக்கினையும் காத்திடுவாய்
மாதவனின் சக்ரமே காதுகளையும் வாயையும் காத்திடுவாய்
கோவிந்தனின் சுதர்ஷனமே நாவினையும் பற்களையும் காத்திடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷனமே கழுத்தினையும் மார்பினையும் காத்திடுவாய்
மதுஸூதனன் சக்ரமே மனத்தினைக் காத்திடுவாய்
திருவிக்ரமனின் சுதர்ஷனமே ஹ்ருதயத்தைக் காத்திடுவாய்
வாமனின் சக்ரமே மனத்துள் இருந்து காத்திடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஸ்ரீதரனின் கையில் உள்ள சுதர்ஷனமே வயிற்றினையும் முதுகினையும் காத்திடுவாய்
ஹ்ருஷிகேஸனின் சுதர்ஷனமே இவன் இடுப்பினையும், குதம் குறியினையும் காத்திடுவாய்
பத்மநாபனின் சுதர்ஷன சக்ரமே, இவன் துடை முழங்கால் பாதம் விரல்களை காத்திடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சக்ர ராஜமெனப் போற்றும் ஸ்ரீ சுதர்ஷன சக்ரமே
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் இருப்பவனே
ஜனார்தனனின் கையிலுள்ள சுதர்ஷனமே
பாரினைக் காத்திட தமிழகத்தின் தலைநகருள் இருக்கின்றாய்
வீட்டிலுள்ள மனப்போரினையும், நாட்டிலுள்ள மனப்போரினையும் துடைத்திடுவாய்
ஜோதிச் சுடரான சுதர்ஷன சக்ரமே இவ்வுலகில்
மடப்போர் வராதிருக்கச் செய்திடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சக்ரராஜனே தமிழகத்தில் நல்ல தர்மத்தை
நிலைத்திருக்கச் செய்திடுவாய்
சாதுக்களை ரக்ஷிக்க சுதர்ஷன சக்ரராஜனே
இமைக்குமுன் வந்திடுவாய்
முக்திக்கு வித்தான நாராயணின் கையில் இருப்பவனே
சுதர்ஷன சக்ரமே சும்மாயிருத்தி வைப்பாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சமஸ்ததுக்க பயத்தை போக்கி ரக்ஷிக்கும் சக்ரம்
பரந்தாமனின் கையில் உள்ள சக்ரம்
காமக்ரோத லோபத்தை துடைத்திடுவாய்
உலகளந்த உத்தமன் கையிலுள்ள சக்ரம்
அஞ்ஞானமதை எரித்திடுவாய்
கடல் வண்ணன் கைத்தலத்திலுள்ள சக்ரமே
என்னை ‘நீ’ என்று உணர்த்திடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

புனிதமிகு சுதர்ஷன சக்ரமே, பொய், பொறாமையை சுட்டெரிப்பாய்
ஆனந்த சுதந்திரம் அடைவதற்கு சக்ரமே ஸர்வமும் நீதான் என்று உணர்த்திடுவாய்
ஈரேழுலகில், மிக சக்தி வாய்ந்த சுதர்ஷனமே ஸர்வமும் ‘நான் தான்’ என்றுணர்த்திடுவாய்
நாராயணனின் பெருமை மிக்க, சக்ரமே ஸர்வ மங்களத்தையும் உண்டாக்கிடுவாய்
மூன்று கண்ணுடைய சக்ரபாணியே ஸர்வ ரோகத்தையும் போக்கிடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

நற்பலனைத் தரும் ஸ்ரீ சுதர்ஷனமே
அம்பரீஷனைக் காத்திட்ட ஸ்ரீ சுதர்ஷனமே
உன்னை ‘சுதர்ஷனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி தன்னோ சக்ர ப்ரச்சோதயாத்’
என்று நான் ஏத்திடுவேன்
இவனகம் புறமுள்ள சத்ருவை நாசம் செய்திடுவாய்
‘ஓம் நமோ பகவதே சுதர்ஷனாய நம:’ என்று
கோடி ஜபம் ஏத்திவிட்டால்
இருவினையுடன் மும்மலமும் பொசுங்கி விடும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சக்ர ராஜனின் மஹாமந்திரம் சித்த சுத்தியை உண்டாக்கும்
ஜன்ம சாபல்ய முண்டாக்கி ஸர்வமும் நாராயணன் என்று உணர்த்தும்
ஓங்கார ரூபனான சுதர்ஷன சக்ரம்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள்
தேஜோரூபமாய் ஜகத் ஜோதிர்மயமாய் இருக்கின்றான்
தரிசிப்பவர்களுக்கு ஸத்சந்தான ப்ராப்தியும்
தனதான்ய ஸம்ருத்தியும் தருவான்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஜ்வாலா கேசமும் த்ரிநேத்ரமுடைய
ஸ்ரீ சுதர்ஷன சக்ரத்தின் த்யானம்
ஸர்வ சித்திகளையும் உண்டாக்கி
ஸர்வஞன் ஆக்கிவிடும்
சத்ரு ஸம்ஹாரம் செய்பவனான ஸ்ரீ சுதர்ஷன சக்ரம்
ஸ்ரீ விஷ்ணு என்று நம்பிடப்பா
ஸ்ரீமதே ஸ்ரீ விஷ்ணவே – நித்ய நமோ நம:
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மஹாசக்ர மஹா ரூபா நித்யானந்தம் தரும் சக்ரமே
பூர்ண ரூபா, பூர்ண பூதா, பூர்ணா ஸ்ரீ சக்ரராஜனே
பூர்ண சாராய, பூர்ண சக்தையே, ஸ்ரீ சக்ரராஜனே
ஸர்வோபத்ரவ சோக நாஸாய ஸ்ரீ சக்ரராஜனே
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

துன்பம் துடைத்து இன்பமளிப்பவன் ஸ்ரீ சக்ர ராஜனே
ஸம்ஸார ஸாகரத்தை கடத்தி வைப்பவனே
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹத்துடன் இருப்பவனே
மஹா பலா பரப்ரம்மனே அகோரமூர்த்தியே
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

இவன் மனத்தை வறுத்த விதை போல் ஆக்கிடுவாய்
ஸ்ரீ சக்ர ராஜனே சரணம்
துர்குணங்களை எரித்து இவனை தூயவன் ஆக்கிடுவாய்
ஸ்ரீ சக்ர ராஜனே சரணம்
ஆசை குணங்களை எரித்து இவனை ஞானச்சுடராக்கிடுவாய்
ஸ்ரீ சக்ர ராஜனே சரணம்
தூரமதை நித்யமென்று நம்பிடாமல் ஸ்ரீ சக்ர ராஜனே
இவன் மனதை மாற்றிடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

பெயரிட முடியாத பரம புருஷனின்
கையில் இருக்கும் சக்ராயுதமே
சித்தத்தின் இருப்பே துக்கமென்றும் சித்தத்தின் நாசமே
சுகமென்பதை உணர்த்திடுவாய்
நல்லதும் கெட்டதும் நான் அல்ல என்றுணர்த்தி தான்
தானாய் இவனை இருத்தி வைப்பாய்
கைலாயமும் ஸ்வர்கமும் சென்னை
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் இருக்குதப்பா
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மஹாசுதர்ஷன சக்ர ராஜாய நம: என்று ஏத்திவிட்டால்
ஏவல் பில்லி ஸூன்யமெல்லாம் அக்கணமே சாம்பலாகும்
மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று
நாத்தழும்பேற ஏத்துவையேல்
மனமாயை பேய் அகன்று உன்னை பரிசுத்த மயமாக்கி விடும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்
மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று
கோடி ஜபம் செய்து விட்டால்
உனது மனம் கடலில் அடித்தளம் போலாகிவிடும்

மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று
முழுமனத்துடன் ஏத்துவையேல்
மும்மலமும் இருவினையும் அகன்று சங்கல்ப நாசமுண்டாகும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்
மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று ஏத்துவையேல்
உனது மனத்தை அழிவற்ற நாராயணன் என்று உணர்த்திவிடும்
மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று மூச்சுக்களை வாங்கிவிட்டால்
மனமௌனம் கிட்டி மஹாத்மாவாய் உன்னை உணர்த்தும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று இடைவிடாது ஏத்துவையேல்
இவ்வுலகை மாயப்ரபஞ்சம் என்று உணர்வாய் மறவாதே!
மஹா சுதர்ஷன சக்ரராஜாய நம: என்று சக்ரராஜனை த்யானித்தால்
உன்னையே ‘நீ’ ‘நானே சக்ரராஜா’ என்று உணர்வாயப்பா
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஸ்ரீ மஹா சுதர்ஷன சக்ரராஜ ஜபத்யானம்
கலிகல்மஷத்தை பொசுக்கிவிடும்
ஸ்ரீ மஹாசுதர்ஷனசக்ரராஜ ஜபத்யானம்
அழிவற்ற ஐஷ்வர்யத்தையும் தரும்
ஸ்ரீ மஹா சுதர்ஷன சக்ர ராஜனை நம்பி விட்டால்
உன்னைத் தன்மயமாக்கிவிடும்
விஸ்வரூபமெடுத்துள்ள ஸ்ரீ மஹா சுதர்ஷன சக்ரராஜனை
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் நேரில் கண்டிடுவாய்
பலகோடி ஜன்மம் செய்த பபுண்ய பலனிருப்பின்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் நேரில் கண்டிடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

மாயப்ரபஞ்சமென்று பட்டணத்துள்
தாம்பரமருகில் மஹாலக்ஷ்மி நகருள்
அழிவற்ற அருட்பெரும் ஜோதியை கண்டிடலாம்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் ஸர்வமும்
ஜகஜ் ஜோதிமயமப்பா
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம வாசம் ஜன்ம
சாபல்யத்தை உண்டாக்கும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

அன்பர்களுக்கு அன்பனே சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
அமுதப்ரதாபனே சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
அதிபராக்ரமனே சுதர்ஷன சக்ரமே சக்ர ராஜனே சரணம் சரணம்
அதிமேதாவியே சுதர்ஷன சக்ரமே சக்ர ராஜனே சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

அரக்கர்களின் வைரியே சக்ரராஜனே சரணம் சரணம்
அருள் வள்ளலான ஹரிப்ரியனே சக்ரராஜனே சரணம் சரணம்
அஞ்ஞான நாசகா அரிஷ்ட நாசகா சக்ரராஜனே சரணம் சரணம்
அபீஷ்ட தாயகா அறத்தின் உருவமே சக்ரராஜனே சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

ஆஷ்ரித ரக்ஷகா ஆனந்த மூர்த்தியே சக்ரராஜனே சரணம் சரணம்
ஆச்ரய ஸ்வரூபா ஆபத்பாந்தவா சக்ரராஜனே சரணம் சரணம்
பரம்பொருளான பரஞ்ஜோதிக் கடவுளின் சக்ரராஜனே சரணம் சரணம்
உத்தமர்கள் பூஜிக்கும் தேவாதிதேவனே ஊழ்வினை நாசக சக்ரராஜனே சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

பக்தரக்ஷகா பரந்தாமனோடு இருப்பவனே சக்ரராஜனே சரணம் சரணம்
ஏழைப்பங்களா எங்கும் நிறைந்தவனே சக்ரராஜனே சரணம் சரணம்
ஒலியே ஒளியே கருணைக் கடலே சக்ரராஜனே சரணம் சரணம்
எனதாத்ம ப்ரகாச சீலனே சச்சிதானந்தனே சங்கடஹரனே சக்ரராஜனே சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

பக்தர்களுக்கு அனுகூல பரம தயாகரா சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
பதீத பாவனா ஸஜ்ஜன ரக்ஷகா சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
உன்னையன்றி துணையில்லை சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
ஏழைகளின் குறை தீர்க்கவே சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் விஸ்வரூபமாய் இருப்பவனே சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சென்னையில் வழிந்திடும் மக்கள் என்னதவம் செய்தனரோ சுதர்ஷன சக்ரமே சரணம் சரணம்
தமிழகத்தின் மக்கள் செய்த தவப்பலனால் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் சுதர்ஷன சக்ரமே விஸ்வரூபமெடுத்துள்ளாய்
பாரிலுள்ள மக்களைத் காத்திட சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் வீரசரபேஸ்வரனாயும் அதர்வண பத்ரகாளியையும் கண்டிடுவாய்
ஸ்ரீ ஸ்வாமிநாத ஸத்குருவினுடைய சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் புதுக்கோட்டை ஸ்ரீமாதா புவனேஸ்வரியையும் தரிசித்திடுவாய்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சிவனும் விஷ்ணுவும் பல உருவமாய் இருந்து வரும்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தைக் காணக் கண் கோடி வேண்டுமே
தரிசிப்பவனை புண்ய புருஷனாக்கும் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தைக் காண வாரும் ஜகத்தீரே
சென்னை தாம்பரமருகில் உள்ள மஹாலக்ஷ்மி நகருள் இருக்கும்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தைக் கண்டு உய்மின் ஜகத்தீரே
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம தரிசனம் ப்ரம்ம சக்தியை தரும் ஸர்வ வல்லமை தரும்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் இருக்கும் முருகா
மாதவன் மருகா ஸ்வாமிநாத ஸத்குரோ போற்றி போற்றி
முருகா மால் மருகா ஸ்வாமி நாத ஸத்குரோ போற்றி போற்றி
முக்தி தரும் முருகனை ஸ்வாமிநாத ஸத்குருவை சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் கண்டிடுவாய்
முழுமுதற்கடவுள் இருக்குமிடம் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள்
ஸ்ரீ சக்ர மஹா மேரு ஆகும் நம்பிடுவாய்
ஸ்வாமிநாத ஸத்குரோ சரணம் சரணம் சரணம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம தரிசனம் புகழையும் தந்து போகமோக்ஷத்தையும் கொடுக்கும்
நல்லதனைத்தும் தந்து மனிதனை தெய்வமாக்கும் இடம் சென்னை ஓம் ஸ்ரீ
ஸ்கந்தாஸ்ரம்
மனிதனின் ஊழ்வினையை விரட்டி உத்தமன் ஆக்குமிடம் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம்
தன்னையே தெய்வமென்று உணர்த்தும் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திற்கு ஜயமங்களம்
ஸ்ரீ சுதர்ஷன சக்ர ராஜனே சரணம் சரணம் சரணம்

பார்க்கும் இடம் எங்கும் தெய்வத்தை உணர்த்தும் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திற்கு ஸுபமங்களம்
தமிழகத்தின் தலைநகரில் இருக்கும் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திற்கு ஜயமங்களம்
இவ்வுலக மக்கள் அனைவருக்கும் ஸுபமங்களம்

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் தத் ஸத்