ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவி கவசம்

ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவி கவசம்

shrI ashtAdasabhuja mahAlakshmi durgA paramEshwari
shrI ashtAdasabhuja mahAlakshmi durgA paramEshwari

ஸ்ரீமத் ஸத்குரு ஶாந்தானந்த ப்ரஹ்மேந்த்ர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள் ஆசி உரை

ஓம் ஸ்ரீ கணேசாய நம:
ஓம் ஸ்ரீ சத்குரு பரமாத்மனே நம:
ஓம் துர்க்காம் தேவீம் ஶரணம் அஹம் ப்ரபத்யே (ऊँ दुर्गां देवीं शरणमहं प्रपद्ये)

மனித குலத்தின் துக்கமனைத்தயும் துடைத்து காத்து இரட்சிப்பவள் ஸ்ரீ துர்க்கா தேவி ஆவள். இந்த ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவி கவசத்தை பாரத புண்ய புமியில் உலகமே கோயில் என போற்றப்படும் தமிழகத்தில் உள்ள சேலம் மாநகரத்தில் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ அஷ்டா தச புஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவியின் திருவருளால் பாடப்பெற்றதாகும்.

ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவியின் மஹிமை சொல்லுக்கடங்காததாகும். கவச பலன்

  • பாவக்குவியல்களை பொசுக்கும்
  • மனக்கோணலை நிமிர்த்தும்
  • ஏழ்மையினின்றும் விடுபடுவர்
  • வேதாந்தம் கூறும் உண்மைகளை அனுபவத்திற்கு கொண்டுவர வழி காட்டும்

பிரம்ம ஶக்தியான ஸ்ரீ மகாலக்ஷ்மி துர்க்கா தேவியும் பிரம்மமும் ஒன்றே தான்
ஸ்ரீ தேவி மஹாத்ம்யம் என்று போற்றப்படும் ஸ்ரீ துர்க்கா ஸப்த ஶதீயில் 700 மந்த்ரங்களினால் போற்றப்படுபவள் ஸ்ரீ அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவி ஆவள். புத்தி ரூபமாயும், சக்தி ரூபமாயும், மாத்ரு ரூபமாயும் இருந்து வரும் ஸ்ரீ துர்க்கா தேவியின் கவசத்தின் பலனை எழுத்தாலோ சொல்லாலோ வர்ணிக்க முடியாததாகும. இந்த கவசத்தை பாடிக்கொடுத்த S ஜானகிக்கும், கவசத்தை கேட்பவர்களுக்கும் மன அமைதி உண்டாகி எல்லோரும் க்ஷேமத்துடன் இருந்து வர நாமும் பிரார்த்திக்கிறோம்.

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

கவசம்

விநாயகர் காப்பு

ஒப்பிலா வள்ளலான ஓங்கார கணபதியை
ஒன்றியே துதிப்போற்க்கு ஓங்கு வரமருள்வோனை
கலிதோஷம் அகற்றிடும் துர்க்கையின் கவசம் வேண்டி
வளமிகு பக்தியோடு வந்தித்து யான் ஏத்துகின்றேன் 1

தேவி கவசம்

ஆதி மஹா இலக்குமியே அம்புயம் மேலமர்ந்து
ஓதும் கை பத்தெட்டும் ஆயுதம் எற்றேதிலாய்
துன் மகிடன் பார் விழச்செய்தாய்
செவ்வண்ணத்தாய் என்றுமுன் தாள் சரணமே 2

தும்பிக்கையோன் தாயே துக்கத்தை போக்கிடம்மா
மஹாலக்ஷ்மி துர்க்காதேவி மனத்தகத்துள் இருந்திடம்மா
அருட்பெருஞ்ஜோதியான ஆத்ம சக்தியான துர்க்கே
அறியாமை இருளகற்றி அறத்தையுணர்த்திடுவாய் 3

அம்மா லக்ஷ்மி துர்க்கே நீ அசையும் பொருள் என்றறிந்தேன்
அம்மா துர்க்கா தேவி நீயே அசையாப்பொருளாக உள்ளாய்
எங்கும் நிறைந்த துர்க்கே எனதுயிரான தாயே
அனைத்துலகின் தாயே ஆதி மஹாலக்ஷ்மி நீயே 4

தண்டபாணி தெய்வத்திற்கு தண்டாயுதம் தந்த துர்க்கே
ஷண்முகக் கடவுளுக்கு ஶக்தி வேல் தந்த தாயே
ஆதிபராசக்தியான அன்னை புவனேஸ்வரி நீயே
முப்பத்து முக்கோடி தெய்வ சக்தி நீயே அன்றோ 5

மாதா புவனேஸ்வரி நீயே மஹாலக்ஷ்மி துர்க்கையானோய்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த துர்க்கே
மூவரையும் படைத்த மூலப்ப்ரக்ருதி நீயன்றோ
முழுமனத்தோடேத்துகிறேன் மஹா மாயை களைந்திடம்மா 6

என் இதயத்தில் இடைவிடாது இருந்தது வரும் துர்க்கையம்மா
எனதுயிருக்கும் உயிரான மஹாலக்ஷ்மி துர்க்கை நீயே
எனதொளி ஒலியான மெய்ப்பொருள் நீயன்றோ
எனதஞ்ஞானமகற்றி உனையே நான் என்றுணர்ந்திடச்செய் 7

பிரம்ம விஷ்ணு ருத்ரன் முதல் பிரபஞ்சத்தை படைத்த அம்மே
எனதகப்பொருளான பரம்பொருள் நீயன்றோ
ஓங்காரத்துள் இருக்கும் உள்ளொளி ஆன ஶிவே
சாகாவரம் தந்து தேவர்களை ரக்ஷித்தோய் 8

ஆதார சக்தி நீயே அனைத்துயிரான துர்க்கே
அனைத்திலும் உனைக்காண அகக்கண்ணை திறந்திடுவாய்
அமைதி மயமான அன்னை மஹாலக்ஷ்மி துர்க்கே
அகமும் புறமும் தாயே ஆதி துர்க்காம்பிகே நீயே 9

பத்ரகாளி பகமாலினி பகவதியே ரக்ஷிப்பாய்
மஹாபலா மஹேஸ்வரி மாயா சக்தி ரக்ஷிப்பாய்
போகேஸ்வரி போததாத்ரி யோகபூஜ்யா ரக்ஷிப்பாய்
ஸ்ரீ ஜெய துர்க்கா ஶாந்தி துர்க்கா சபரி துர்க்கா ரக்ஷிப்பாய் 10

துர்க்கமாயை துர்க்காயை துக்க வினாசினி போற்றி போற்றி
மூல துர்க்கா தீப துர்க்கா லவன துர்க்கா போற்றி போற்றி
ஸுபகா ஸுமங்கலி ஸுக்லமானஸா போற்றி போற்றி
ஸர்வ லக்ஷன ஸம்பன்னா ஸர்வாங்க சுந்தரி போற்றி போற்றி 11

யஜ்ஞப்ரியா யஜ்ஞபோக்த்ரி யஜ்ஞரூபா நமஸ்காரம்
நான்மறை மெய்ப்பொருளே நாராயணீ நமஸ்காரம்
கலிபூஜிதா கலிப்ப்ரியா கலிப்ப்ரத்யக்ஷரூபிணி நமஸ்காரம்
நித்யமங்களா நித்யக்க்ருபா நிர்மலாதேவி நமஸ்காரம் 12

மஹாமந்த்ர ஸொரூபிணியே மஹிஷாஸுர மர்த்தனியே
உன்னைச் சரணடைந்தேன் எனதுயிர்க்குயிரான துர்க்கே
நிலம் நீர் நெருப்புடன் காற்றோடு ஆகாயமாயிருக்கும்
மூவருடன் முப்பத்துமுக்கோடி தெய்வமயமான துர்க்கே 13

அநாதி மந்திரம் உனது நவாக்ஷரி என்றறிந்தேன்
பூர்வ ஜன்ம புண்ணியத்தால் மஹாலக்ஷ்மி வேண்டுகிறேன்
வேண்டுகிறேன் இடைவிடாமல் வேண்டுகிறேன் திருவருளை
ப்ராம்ஹி மாஹேஶ்வரீ வைஷ்ணவி நீயென்றறிந்தென் 14

ஐந்திரி வாராஹி கௌமாரி சாமுண்டி
அனைத்து மயமான அன்னை மஹாலக்ஷ்மி துர்க்கே
தண்டபாணிக்கருள் செய்ய சேலம் ஸ்கந்தகிரி வந்த தாயே
மஹாலக்ஷ்மி துர்க்கையம்மா வரமருள்வாய் போற்றுகின்றேன் 15

ஸ்கந்தாஸ்ரமத்தில் கொலுவீற்றிருக்கும் ஸ்ரீஸ்கந்தமாதா துர்க்காதேவி
இரவுபகல் எந்நேரமும் உன்நாமம் ஏத்துகின்றேன்
அம்மையுன் திருவடியை அகத்துள் யான் பற்றிவிட்டேன்
இருக்கையிலும் கிடக்கையிலும் நடக்கையிலும் உனை மறவேன் 16

மஹாலக்ஷ்மி துர்க்காம்பா என்மனத்தகத்துள் நீயிருந்து
உனதழிவற்ற ஸொரூபமதை உளத்தினிலுணர்த்திடம்மா
துக்கத்தை பயத்தை சூலினி நீ விரட்டிடம்மா
ஜெயதுர்க்கா தேவி தாயே ஜீவனைச் சிவமாக்கிடம்மா 17

ஸகுண நிர்குணையான ஸர்வ சக்தியான காளி
மஹாகாளியான தாயே மஹாலக்ஷ்மி துர்க்கா கேள்
உயிர்களின் இதயத்தில் உயிர்க்குயிரான அம்மே
தத்துவமனைத்துமான தனிப்பெரும் சக்தி நீயே 18

பதினெட்டு கரத்தோடு பக்தனைக்காத்திடவே
சிம்ம வாஹனமேறி ஜகன்மாதா வந்திடம்மா
ஜகத் ரக்ஷகி துர்க்கே ஜெயதுர்க்கையாய் வந்திடுவாய்
வனதுர்க்கையாய் வந்து இவன் வாழ்வெல்லாம் காத்திடம்மா 19

சும்ப நிசும்பனையும் சண்ட முண்டனையும்
மஹாகாளி உருவத்தில் வதம் செய்த சாமுண்டி
போற்றுகிறேன் சதாகாலம் மஹாலக்ஷ்மி துர்க்கை உன்னை
சதாக்ஷி போற்றி சாகம்பரி போற்றி போற்றி 20

மஹாகாளி மாதங்கி பாலா த்ரிபுரே போற்றி
காமாக்ஷி பகளா சின்னமஸ்தா போற்றி போற்றி
குஹ்யகாளி கௌமாரி குருமண்டலினி போற்றி போற்றி
பத்ரகாளி பைரவி பகமாலினி போற்றி போற்றி 21

ஜகன்மோகினி துர்க்கே ஜெய புவனேஸ்வரி மாதா
மக்களை கடைத்தேற்றும் மஹாலக்ஷ்மி துர்க்கையே கேள்
மஹாமாயையான தாயே என் மனமாயை களைந்திடம்மா
பகவதி பராசக்தி பராபரையே நமஸ்காரம் 22

மும்மூர்த்திகளை படைத்த முக்கண்ணி நமஸ்காரம்
விக்னமகற்றிடுவாய் விநாயகனை ஸ்ருஷ்டித்தோய்
அழிவற்ற ஆன்ம சக்தி அன்னை துர்க்கே நமஸ்காரம்
ப்ரம்ம விஷ்ணு ஶிவ சக்தி பிரியமாய் கேட்டிடம்மா 23

ஸர்வ சம்பத் ஸ்வரூபமான மஹாலக்ஷ்மி துர்க்காம்பா
அஷ்ட லக்ஷ்மியாக வந்து அடியேனுடனிருந்திடம்மா
காட்டுத்தீயான துர்க்கே காமனை பொசுக்கிடுவாய்
அறம் பொருள் இன்பமெல்லாம் அனுக்ரஹித்திடுவாயே 24

மஹா வாக்ய சாரமான பிரணவ சக்தி ஸ்வரூபினியே
ஓங்கார ப்ரம்மமான ப்ரம்ம சக்தி சாமுண்டே
ப்ரம்ம நிர்வாணமெய்த பிரணவத்துடன் வருவாய்
உபனிஷதம் போற்றும் மெய்ப்பொருளான சிவே 25

ஆதி மஹா சரஸ்வதி நீ ஐம் பீஜாக்ஷரம் ஆனோய்
அப்பழுக்கற்ற சித்ஸ்வரூப வாக்தேவி
மோக்ஷதாயினி தாயே என் வாக்கினிலினிதமர்ந்தே
நல்லவனாக்கிடுவாய் நான் உன்னைச் சரணடைந்தேன் 26

ஸத் ஸ்வரூப மயமான ஹ்ரீங்கார சக்தி தாயே
அறம் பொருள் இன்பமய ஆதி மஹாலக்ஷ்மி துர்க்கே
அறிவிற்க்கறிவான தாயே அமைதி மயமான அம்மே
அனைத்திலுமுனைக்காண வரமெனக்கருள்வாயே 27

காம பீஜமெனப் போற்றும் க்லீம் மயமான காளி
ஆனந்த வடிவமான அன்னை மஹா காளி நீயே
ப்ரம்மானந்த மயமான ப்ரம்ம சக்தி கேட்டிடுவாய்
ப்ரம்ம ஞானம் வேண்டியுனை சரணடைகின்றேன் அம்மா 28

மோக்ஷத்தின் வித்தான சாமுண்டா தேவி உன்னை
சாமுண்டாயை விச்சேயுடன் நான் சதா காலம் ஏத்துதற்கு
மஹாலக்ஷ்மி முன்வந்து மகிழ்ந்து வரமருளி
நவாக்ஷரியும் தந்தென்னை தடுத்தாட்கொண்டிடம்மா 29

சைலம் நிறைந்த சேலம் மாநகரடுத்த
ஸ்கந்தகிரி மேலிருக்கும் ஸ்கந்தகுரு போற்றும் துர்க்கே
இவனைச் சிவமாக்கும் நவாக்ஷரி தந்திடுவாய்
உபதேசம் வேண்டி தாயுன்னை சரணடைந்தேன் 30

சரணடைந்த மகனே கேள் நவாக்ஷரி பற்றிடுவாய்
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே என்ற
எனது மஹா மந்த்ரமும் நானும் ஒன்றே தான்
எனது மந்த்ர ஸித்தியினால் சிவ மயமாவாய் நீ 31

நவாக்ஷரி மந்த்ர ஸித்தி ஞான பண்டிதனாக்கி வைக்கும்
அழிவற்ற மெய்ப்பொருளை ஆத்மாவென்றுணர்த்தி வைக்கும்
நினைத்த வரமருளி ப்ரம்ம மயமாக்கும்
சத்தியம் சொல்லிவிட்டேன் ஸம்ஶயம் வேண்டாம் உனக்கு 32

மஹாலக்ஷ்மி துர்க்கை தாயே மஹா மந்த்ர வரம் தந்த குரோ
உனது மஹா மந்த்ரத்தை எனதகத்துள் இருத்தி வைத்தோய்
ரகசிய மந்திரத்தை ரக்ஷையாய் தந்தாயே
இடைவிடாதேத்தியுன்னை ஆத்ம சக்தியாய் உணர்வேன் 33

ஆதிபராசக்தி உன்னை அன்புமயமாய் உணர
மஹா சக்தி தந்த மந்த்ரம் நவாக்ஷரி அதைக்கொண்டு
நாத்தழும்பேரவேத்தி நமனையும் வென்றிடுவேன்
மஹாலக்ஷ்மி துர்க்கையுன்னை ப்ரம்மமென்றுணர்த்திடுவாய் 34

ஆத்ம விசாரத்தால் உன்னை ஆத்மசக்தியாய் உணர
ப்ரம்ம விசாரத்தால் உன்னை நான் ப்ரம்மம் என்றுணர
நவாக்ஷரி தந்த தாயே நானுன்னை பற்றிவிட்டேன்
பற்று அற்று இருப்பதற்கு பற்றி விட்டேன் துர்க்கையை யான் 35

பந்த பாசமகற்றியென்னை பரிசுத்தன் ஆக்கிடம்மா
ஜீவாத்மாக்களை யான் சித்ரூபமென்றுணர
பாபாத்மாக்களை யான் பரப்ரம்மம்மென்றுணர
ப்ரம்மசக்தி அனைத்தையும் யான் பிரம்மமயமென்றுணர 36

மஹாலக்ஷ்மி துர்க்கா தேவி மகிழ்ந்தெனக்கு வரமருள்வாய்
உடல் பொருள் ஆவியெலாம் உனதென்றெ அர்ப்பணித்தேன்
இருப்பதெலாம் நீயேயென்று இக்கணமே நானுணர
வரம் தருவாய் வரமருள்வாய் மஹாலக்ஷ்மி துர்க்கை தாயே 37

நீயெனக்குள் நானென்றும் நானுனக்குள் நீயென்றும்
எனக்குள்நீ ஒன்றிடுவாய் எனதாத்ம சக்தி துர்க்கே
உன்னையான் பூஜிப்பேன் உள்ளத்தில் த்யானிப்பேன்
இக்கணமே தீபதுர்க்கையாய் இவனகத்துள் எழுந்தருள்வாய் 38

வேதாகமமான தாயே வேதாந்த ஸாரம் நீயே
புவனத்தின் ஸாரமான புவனேஸ்வரியும் நீயே
என்றுபதேசித்த ஸத்குருவின் திருவாக்கை
நானும் உணதருளாலே நம்பிவிட்டேன் நான்மறவேன் 39

சங்கற்ப விகற்பம் போக்கி ஸதாசிவம் ஆக்கிடம்மா
பேதாபேதம் நீக்கி ப்ரம்ம மயமாக்கிடம்மா
ஸதாசிவ மயமான மஹாலக்ஷ்மி துர்க்காதேவி
ஸம்ஶயத்தை பொசுக்கியென்னை சாதுவாய் ஆக்கிடம்மா 40

நிராசையுடன் இருத்தி நிஷ்காம்ய கர்மம் செய்ய
எனக்கு வரமருள்வாய் ஸ்கந்தமாதா போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் உன்னைச் சரணடைந்தேன்
இவனகமும் புறமுமாய் இருந்தருளும் அன்னயுனை போற்றுகின்றேன் 41

கந்தனுக்கு வரமருள கந்தாஸ்ரமம் வந்த துர்க்கே
மூவரும் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் தெய்வம் நீ
மஹாலக்ஷ்மி துர்க்கையாக வந்தெனக்கு வரமருள்வாய்
எல்லாமே உன்மயமென்று எனக்குள்ளே உணர்த்திடுவாய் 42

கன்னிமாரோடை மேலே கந்தாஸ்ரமத்தினிலே
பதினெட்டுக்கையுடய மஹாலக்ஷ்மி துர்க்கா கேள்
நல்ல வரம் தந்திடுவாய் நானுன்னைச் சரணடைந்தேன்
உன்மெய்யுருவைக் காட்டியென்னை மேன்மகனாய் ஆக்கிடம்மா 43

நானென்னைத் தந்திட்டேன் நீயுன்னைத் தந்திடம்மா
சர்வமும் சக்திமயம் என்பதை நீ உணர்த்திடம்மா
பேரின்ப மயமான மஹாலக்ஷ்மி துர்க்கா நீ
நீ பெற்ற குழந்தை நான் என்பதை உணர்த்திடம்மா 44

அகிலாண்டேஸ்வரியே எனதங்கமெல்லாம் காத்திடுவாய்
இதயத்துள் இருந்து இன்னல்களை அகற்றிடுவாய்
கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாய் காத்திடுவாய்
திக்குகள் அனைத்திருந்தும் துர்க்கே நீ காத்திடுவாய் 45

நாரசிம்ஹியாயிருந்து இவன் சிரசினை காத்திடுவாய்
கௌமாரி கௌசிகி தேவி கண்களை நீ காத்திடுவாய்
கௌரி காத்யாயனியாய் இவன் செவிகளை காத்திடம்மா
த்ரயம்பகே சிவதூதி இவன் நாசியை காத்திடுவாய் 46

ஸதாக்ஷி ஸதிதேவி இவன் நாவினை காத்திடம்மா
ப்ராம்ஹி ப்ரஹ்மானி இவன் பற்களை நீ காத்திடம்மா
பீமா ப்ராஹ்மரி துர்க்கே இவன் கண்டத்தை காத்திடம்மா
மஹாகாளி மார்பையும் கைகளை காத்யாயனியும் காத்திடம்மா 47

இவன் இதயத்துள்நீ புவனேஸ்வரியாய் நின்று காப்பாய்
பைரவி பகமாலினித் தாயே இவன் வயிற்றைநீ காத்திடம்மா
இவன் முதுகினை வாரஹித்தாயே முழுமனத்துடன் காப்பாய்
இடுப்பை ஸதாக்ஷியும் குறிகளை கூர்ம சக்தியுமாய் காப்பாய் 48

இவன் தொடைகளை காளி காப்பாய் கல்யாணி கால்களை காப்பாய்
இவன் பாதமிரண்டயுமே பகளா துர்க்கே காத்திடுவாய்
இவன் நகத்தையெல்லாம் நாராயணியாய் இருந்து காப்பாய்
ஈஸ்வரி துர்க்காம்பிகயே இவன் எலும்புகளை காத்திடுவாய் 49

மாம்சம் அனைத்தினையும் மஹா சக்தி காத்திடம்மா
இவன் தோலினை அம்மா த்ரிபுர சக்தி காத்திடுவாய்
ரக்த தந்திகா துர்க்கே இவன் ரத்தமாய் இருந்து காப்பாய்
இவன் உயிரைக்காத்திடவே உமாதேவியாய் வருவாய் 50

நவதுர்க்கையாய் வந்து பகவதியே ரக்ஷிப்பாய்
அடைக்கலம் புகுந்திட்டேன் ஆபத்தை விலக்கிடம்மா
துர்க்கா உனைச் சரணடைந்தேன் தீமைகளைப் பெயர்த்தெரிவாய்
துன்பமிலாதிவன் துயரை துடைத்தே நீ காத்திடுவாய் 51

மஹாபயம் அகற்ற மஹாவாராஹியாய் வந்திடுவாய்
பத்து திக்கினிலும் பத்ரகாளி காத்திடுவாய்
இவனுடலை பார்வதியாய் இருந்து நீ காப்பாயம்மா
பேராயிரம் உடைய தேவி இவன் ப்ராணனை காத்திடுவாய் 52

அந்தக்கரணமெல்லாம் ஆதி சக்தி காத்திடுவாய்
ஐஸ்வர்யம் அனைத்தையுமே யோகேஸ்வரி காத்திடுவாய்
ஸமஸ்த பாவங்களையும் சண்டிகே பொசுக்கிடுவாய்
பூத ப்ரேத பைசாச பேய்களை நீ எரித்திடுவாய் 53

அன்னை லலிதா காத்திடுவாய் அடியேன் உனைச் சரணடைந்தேன்
மதுகைடபர்களை அழித்த மஹாகாளி கேட்டிடம்மா
அழிவற்ற பராசக்தி அன்னை மஹாலக்ஷ்மி துர்க்கே
அஞ்ஞானம் அகற்றி இவன் ஆன்மாவை உணர்த்திடம்மா 54

அம்மா த்ரிபுர சுந்தரியே சாஷ்டாங்க நமஸ்காரம்
மங்கள வடிவானவளே மஹாலக்ஷ்மி நமஸ்காரம்
பதினாறு கலைகளோடு பதினெட்டு கரத்தவளே
காளி அங்காளி மஹாகாளியான சிவே 55

ப்ரம்மவித்யே மஹாவித்யே ஸ்ரீவித்யையான தாயே
பதினான்கு புவனங்களை படைத்த ஸ்ரீ புவனேஸ்வரியே
தெய்வத்திற்கும் மனிதருக்கும் தலைவியான துர்க்காம்பா
ஸர்வமந்த்ரமயமான துர்க்கே சரணடைந்தேன் ரக்ஷிப்பாய் 56

வஶிஷ்ட வாமதேவ மஹாமுனி கணங்கள் போற்றும்
மஹாசக்திமயமான மஹாலக்ஷ்மி துர்க்கா கேள்
சகல ரோக பாவங்களும் பில்லி சூன்ய ஷூத்ரங்களும்
நின்நாமம் சொன்னவுடன் இவனை அணுகாது காத்திடுவாய் 57

அன்னையே உன்னருள் வேண்டி ஒழுக்கமுடனிருந்துகொண்டு
நல்லதொன்றையே நினைத்து நல்லதொன்றையே பேசி
நல்லதொன்றையே நானென்றும் உறுதியாய்ச் செய்துவர
ஆதி மஹாலக்ஷ்மி துர்க்கே அடியேனுக்கு வரமருளி 58

இருப்பதெல்லாம் நீயேயென்று எனக்குள் நீ உணர்த்திடம்மா
உன்னையே நான் என்றுணர வரமருள்வாய் மஹாசக்தி
பதினெட்டு கையுடைய ஞானாம்பிகை தாயே கேள்
உருவமாய் அருவமாய் உனதுருவை காட்டிடுவாய் 59

மூவர் தேவர் முனிவர்களை ஸ்ருஷ்டித்த புவனேஸ்வரியே
மஹாகாளி மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வதி ஆன தாயே
அடைக்கலம் புகுந்த்திட்டேன் இவன் அறியாமையை எரித்து
அருட்பெருஞ்ஜோதியாக இவன் அகத்துள் நீயிருந்திடம்மா 60

நாமரூபமற்ற உன்னை ஞானமயமாய் உணர
ஸ்வயம்ப்ரகாச ஸத்குருவாய் ப்ரணவமஹாவாக்யம் தந்தசிவே
ஸ்ரீ தத்த குருநாதர் போற்றும் லலிதா மஹா த்ரிபுர சுந்தரியே
ஸ்ரீ தத்தகிரி முருகன் காட்டும் வனதுர்க்கா சரணமம்மா 61

மஹாலக்ஷ்மி துர்க்காம்பா மறுபிறவி இனிவேண்டா
பிறவிப்பிணி அகற்றி என்னை ப்ரம்மமென்று உணர்த்திடம்மா
இவனைக்கடலில் கலந்திட்ட கங்கையைப்போல் ஆக்கிடுவாய்
ஞானக்கடலான தாயே இவனை ஞானமயமாக்கிடுவாய் 62

ஏ மனமே கேட்டிடுவாய் மெய்ப்பொருளே துர்க்கையவள்
பற்றற்று இருப்பதற்கு பற்றிக்கொள் துர்க்கையை நீ
அண்ட சராசரமனைத்தும் அன்னை துர்க்கா தேவி மயம்
வேதாகம புராணமெல்லாம் மாதாவின் சரிதம் அன்றோ 63

உனதகத்துள் நான் என்றிருப்பதுவே சக்தியும் சத்தியமுமாகும்
அன்னை சக்தி துர்க்கையை நீ ஆத்மாவாய் உணர்வதற்கு
இமைப்பொழுதும் மறவாமல் நவாக்ஷரி ஏத்திடுவாய்
ஞானப்பால் தந்துன்னை ஞானசித்தனாக்கிடுவாள் 64

பல ஶ்ருதி

துர்க்கா கவச பலன் துக்கம் பயம் ஒழியும்
கஷ்டங்களைப் போக்கி பாவத்தை பஸ்மமாக்கும்
பாவங்கள் விலகும் சத்ருக்கள் மறைந்தொழிவர்
பில்லி சூன்யம் பேய் பிசாசு பெயர்ந்தோடும் 65

மஹாலக்ஷ்மி கவச பாராயணம் உன்னை மஹாத்மாவாக்கிவிடும்
அளவிடற்கரிய ஆத்ம சக்தி மயமாக்கும்
பிறப்பையும் இறப்பையும் அறுத்து ப்ரம்ம மயமாக்கிவிடும்
துர்க்கா தேவி கவசம் வாக்தேவி அருளாகும் மறவாதே 66

கவச பாராயணம் கலிதோஷமகற்றி காரியங்கள் கைகூடும்
ஆபத்தை விரட்டி பயத்தை போக்குவிக்கும்
ஆற்றல் பெருக்கெடுக்கும் அந்தரங்கம் சுத்தியாகும்
மன இருளைப்போக்கி உன்னை பரஞ்ஜோதி மயமாக்கிவிடும் 67

மஹாலக்ஷ்மி துர்க்கை தந்த மஹத்தான கவசமிதை
முழுமனத்தோடேத்துவையேல் மும்மலமும் அகன்றுவிடும்
நானேநீ நீயேநான் என்றுனக்குள் உணர்த்திடுவாள்
நம்பிடுவாய் ஏ மனமே மாதாவின் கவசமிதை 68

பொருளுணர்ந்து கவசமேத்தின் புண்ணிய புருஷனாவாய்
சத்ய ஞான மயமாவாய் சத்தியத்தை சொல்லிவிட்டேன்
நம்பினவர்க்கமைதி கிட்டும் நம்பிவிடு சக்தியை நீ
சத்தியமாய் நம்பிவிடு சர்வஞன் ஆவாய் நீ 69

ஸர்வவேத ஸ்வரூபமான மஹாலக்ஷ்மி துர்க்கே சரணம்
ஸர்வதேவதா ஸ்வரூபமான மஹாலக்ஷ்மி துர்க்கே சரணம்
ஸர்வாத்ம ஸ்வரூபமான மஹாலக்ஷ்மி துர்க்கே சரணம்
ஸர்வமங்கள ஸ்வரூபமான மஹாலக்ஷ்மி துர்க்கே சரணம் 70

ஓம் ஸ்ரீ சத்குரு பரமாத்மனே நம:
ஓம் துர்க்காம் தேவீம் ஶரணம் அஹம் ப்ரபத்யே (ऊँ दुर्गां देवीं शरणमहं प्रपद्ये)
ஓம் தத் ஸத்