Swamigal Life History – Courtesy of Rare and Divine Published by Om Shri Skandasramam Salem – (சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ள ‘ரேர் அண்ட் டிவைன்’ என்ற புத்தகத்திலிருந்து, நன்றியுடன்)
ஸ்ரீமத் ஸ்வாமிகள்
ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ப்ரம்மேந்திர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள், இந்த பாரத தேசத்திற்கு இருபதாம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற முக்கிய ஆன்மீக சிகரங்களில் ஒருவராவார்.
அவதூத திலகமான அத்வைத யோகி ஸ்ரீமத் ஸ்வாமிகள், தூக்கிக்கட்டிய ஜடாமகுடமும், விசாலமான நெற்றியில் விபூதியும், அன்னை புவனேஸ்வரியின் அருள் ப்ரசாதமான குங்குமமும் அணி செய்ய, சாந்த முகமும் கபடமற்ற குழந்தை சிரிப்பும், யாருடைய மனதையும் புண்படுத்தாத உரையாடலும், கனிவுள்ள நோக்கும், மேடைகளில் தெய்வநெறி காட்டும் வற்றாத அனுபவமிக்க ஆன்மீக கருத்துக்கள் கொண்ட பேச்சும், அவர் தம் குருவைப் பற்றி பேசும் போது பொங்கி எழும் உற்சாகமும், நம்மை காந்தம் கண்ட இரும்பு போல அவர்பால் கவர்ந்து இழுக்கும்.
ஸ்ரீமத் ஸ்வாமிகள் 27.05.2002 திங்கட் கிழமை வைகாசி மாதம் ப்ரதமை திதி அன்று சேலம் உடையாப்பட்டி ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீஅஷ்டாதசபுஜ மஹா லக்ஷ்மி துர்கை சந்நிதியில் விதேஹ முக்தி அடைந்தார். இன்றும் அவர் நம்மிடையே சூட்சுமமாக இருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். மேற்பட்ட ஸத்குரு மஹானின் திவ்ய சரிதத்தை திகட்டாத கரும்பாக தித்திக்கும் தேனாக அபயமளிக்கும் அமிர்தமாக அனைத்து மக்களும் படித்து நற்கதியடைய வேண்டுகிறோம்.
தோற்றம்
ஸுப்ரமண்யம்! ஸுப்ரமண்யம்! இது மஹான் மாயாண்டி யோகியின் ஞானக் குரல்.
kattikkulam sootukkol mayAndi swAmigal
அங்கயற்கண்ணியின் திருவருள் பெற்ற மகான் மாயாண்டி யோகி ஒரு நாள் அந்த அந்தண குடும்பத்தின் தலைவரான இராமஸ்வாமியின் இல்லத்திற்கு வருகிறார். மஹானல்லவா, அந்த இல்லறத் தம்பதியினர் அன்புடன் ஆர்வம் மிக மஹான் மாயாண்டியை வரவேற்று உபசரிக்கிறார்கள். “ஒன்பது ரத்னங்களை பெற்றெடுத்த ஒப்பற்ற தம்பதியரே பத்தாவதாக இக்கலியில் அவதாரம் எடுக்க ஸ்ரீமன் நாராயணன் போல பாலகன் ஒருவன் உங்கட்குப் பிறக்கப் போகிறான். ஞான பானுவாகவும் ஜடாதாரியாய் அவதூதனாய் அகிலம் போற்றும் ஆன்மீக ஜோதியாகத் திகழப் போகிறான்”, என அருள்வாக்கு அருளினார் அந்த ஞானச் செல்வர் மாயாண்டி.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
என்ற வள்ளுவர் திருவாக்கிற்கிணங்க ஸுப்ரமண்யம் என்ற ஞான தீபம் ஒரு நன்னாளில் ஒளிரத் தொடங்கியது.
“ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய” என கச்சியப்பர் அருளிய வண்ணம் உலகம் உய்ய, சாக்தம் தழைக்க, மறைநெறி ஓங்க, அதே முருகன் திருநாமம் பூண்டு ஸுப்ரமண்யம், பத்தாவது பாலகனாக அந்த ஆதர்ச தம்பதியருக்கு நற்றவப் புதல்வராக அவதரித்தார். மாயாண்டி யோகியின் வாக்குப் பலித்தது கண்டு இராமஸ்வாமி தம்பதியினர் அகமகிழ்ந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த அப்பாலகனை அன்புக்கரம் நீட்டி ஆசையுடன் அமுதூட்டி வளர்த்தனர்.
கல்வி
பள்ளிக்குச் செல்லும் பருவம் வந்தபோது தம் பாலகனைப் பாடசாலையில் சேர்த்தனர். ஞான வடிவமாக வந்த பாலகன் ஸுப்ரமண்யத்தை “ப்ரபேதிரே ப்ராக்தன ஜன்ம வித்யா” என காளிதாஸ மஹாகவி பாடிய வண்ணம் எல்லாக் கல்வியறிவும் தாமே வந்தடைந்தன.
ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் அன்னை மீனாக்ஷியின் அருளாலயமே அவரது த்யான வேள்விக்குக் களனாயிற்று .
ஞானக்குழந்தை உதிக்கப் போவதை முன்னரே உணர்த்திய ஞானி மாயாண்டி யோகி ஸுப்ரமண்யத்தை காண வந்தார். தம் அருட்பார்வையால் அப்பாலகனை நோக்கி, “இக்கல்வி பயிலவா நீ பிறந்தாய், கேற்றபடி நிற்க நீ கற்க வேண்டியது மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருவள்ளுவர் வாக்கை மெய்ப்பிக்க ஞானக் கல்வி கற்கப் போ” எனக் கூறி மறைந்தார். மஹானின் அருள் வாக்கைக் கேட்ட பெற்றோர் பெருமகனாம் ஸுப்ரமண்யத்தை காரைக்குடி நாகநாதபுரம் வேதபாடசாலையில் சேர்த்தனர். வேதத்தைக் கசடறக் கற்றார் கருணை மாமுகிலான ஸுப்ரமண்யம்.
இளமைப் பருவம்
பாரத புண்ய பூமி வேற்றவரான ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த காலம் அது. நாடெங்கிலும் புரட்சித் தீ பரவி வந்த நேரமது. அஹிம்சை நெறியில் அடக்குமுறைக்கஞ்சாமல் அந்த விடுதலை வேள்வியால் ஈர்க்கப் பட்டு நாடு வளம் பெற, நலம் பெற, முதலில் அடிமைத் தளை அகற்றப்பட்டு நாடு விடுதலை பெறல் அவசியம் என்றுணர்ந்தார் ஸுப்ரமண்யம். இறையுணர்வோடு தேசப் பற்றும் மிகக் கொண்ட ஸுப்ரமண்யம் அண்ணல் காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு அதற்குப் பரிசாக சிறை வாசம் பெற்றார். அலிபூர் சிறையில் அன்றைய பழைய தேசத்தலைவர்களுடன் இந்தியத் தாய் சிறையினின்று வெளிப்பட தாம் சிறைப்பட்டார். நாடு விடுதலை என்ற உணர்வு வெளிப்படையாகத் தெரிந்தாலும் நீறு பூத்த நெருப்பு போல ஆன்மீக உணர்வே உள்ளத்தில் ஆழ்ந்து இருந்தது. வீர சத்ரபதி சிவாஜியின் வரலாறும், ஸ்வாமி விவேகானந்தரின் வரலாறும், அன்னைத் திருநாடே அற்புதத் தெய்வம் என்ற உணர்வை அவருக்கு வாரி வழங்கின.
அவரால் சிறைச்சாலை தவச்சாலையாக மாறியது. அடிக்கடி நீண்ட நேரம் த்யானத்தில் அமர்வதும் அதன் காரணமாக ஒளி படைத்த கண்களும், ஒப்பற்ற தேஜோமயமான தோற்றமும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் அவரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டின. ஸுப்ரமண்யம் ஒரு விடுதலை வேட்கை கொண்ட வீரர் மட்டுமல்ல, பிறப்பெனும் கூட்டிலிருந்து விடுதலை பெற விழையும் ஆன்ம விடுதலை வீரர் என அனைவரும் விரைவில் உணர்ந்தனர். இதனால் சிறையில் உள்ள விடுதலை வீரர்கள் ஸுப்ரமண்யத்தை மரியாதையுடன் நோக்கினர், நடந்து கொண்டனர்.
தேச பக்தர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.ஸுப்ரமண்யனும் விடுதலையாகி வெளியே வந்தார். அனால் எங்கே செல்வது? எதிர் காலத் திட்டம் என்ன? ஒன்றுமே புரியவில்லை.
அப்பொழுது ஸுப்ரமண்யம் மதுரை அன்னை மீனாக்ஷி அம்மன் கோவில் நோக்கிப் பறந்தார். அன்னையின் திருமுன் அமர்ந்து த்யானம் செய்து தமக்கு வழிகாட்ட வேண்டினார். அங்கு மாயாண்டி யோகியும் அமர்ந்து த்யானம் செய்து கொண்டு இருந்தார். அவர் ப்ரம்மச்சாரியும் அமர்ந்து அவர் கண் விழிப்பதை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.
விழித்துக் கொண்ட யோகி ஸுப்ரமண்யத்தைக் கண்டு அளவில்லாத ஆனந்தமடைந்தார். ஸ்ரீமாதா புவனேஸ்வரியின் மூலமந்த்ரமான ஓரெழுத்தினை உபதேசித்து, “இடைவிடாமல் இதனை ஐபிப்பாயாக, மௌன விரதம் கொண்டு, கரதல பிக்ஷை ஏற்று ஓரிடத்தில் தங்காமல் திரிவாயாக” என்று அருளி மறைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலமலை, திருப்பதி, பழநி, கொல்லிமலை, முதலான வனாந்தரங்களில் சஞ்சரித்து, மெளனமாக, ஏகாக்ஷரத்தை, ஜபித்துக் கொண்டு, கரதல பிக்ஷை ஏற்று தவ நிலையில் இருந்தார் ஸுப்ரமண்யம். செல்லும் வழியில் ஸுப்ரமண்யத்திற்கு பல சோதனைகள், பிள்ளை பிடிப்பவன், பைத்தியம் என இகழ்ந்து அடித்தும் புடைத்தும் அல்லற்படுத்தினர் அறியாத மக்கள். இந்நிலையில் வடநாடு நோக்கி புறப்பட்டார் ஸுப்ரமண்யம். கன்யாகுமரியிலிருந்து புறப்பட்டு பத்ரி, கேதார்நாத், நேபாளம், ரிஷிகேசம் முதலான இடங்கட்குச் சென்று அருந்தவம் புரிந்தார். ரிஷிகேசத்தில் ஸ்வாமி சிவானந்த ஆஸ்ரமத்தில் தங்கி அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பேறு பெற்றார்.
குருநாதர்
ஒரு சமயம் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆறுமுகன் ஸந்நிதியில் ஸித்தாஸனம் போட்டு தலையை தரையில் முட்டிய வண்ணம் த்யானம் மேற்கொண்டபோது ஒரு அவதூதர் தோன்றி ‘என் இடம் தேடி வா’ என்ற குரல் கேட்டு எழுந்த்து வந்தார். குரல் கேட்டதே தவிர உருவம் தெரியவில்லை. அந்தக்குரல் தான் என் குரு என்று தேடியலைந்தது அவர் உள்ளம்.
அவதூத பரம்பரையில் மூலவரான ஸ்ரீதாத்தாத்ரேயரின் ஸ்ரீதத்தபாதுகா பீடம் குஜராத் அருகில் கிரிநார் என்ற மலையில் உள்ளது. அங்கு சென்று தரிசனம் செய்ய முயன்றார் ஸுப்ரமண்யம். வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காடு; பல ஆயிரம் படிகள் ஏறி மலை முகத்தை முகட்டை அடைய வேண்டும்.உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. பசி தாகம் முதலானவற்றால் உண்டாகும் துயரங்களை பொறுத்துக்கொண்டு பிற உயிர்க்கு இன்னா செய்யாமையே தவமல்லவா!
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்தின் குரு
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப பசிதாகங்களைப் பொருட்படுத்தாமல் வாழ்ந்த காரணத்தால் ஸுப்ரமண்யம் உடல் நலிந்தது. படிகள் ஏற முடியாமல் தயங்கினார் ஸுப்ரமண்யம். அப்போது ஒரு மஹான் அவர்முன்னே தோன்றி “ஏ, மதராஸி ஸாது! நீ ஏன் இங்கு வந்தாய்? மேலே உள்ள தத்தகுரு உன்னுடனேயே இருக்கிறாரே! எதற்காக கஷ்டப் படுகிறாய்?” என்று அன்புடன் கூறி ஒரு மாத்திரையை கொடுத்தார். அந்தக் குளிகையை வாயில் அடக்கிக் கொண்டு மிக விரைவாக படியேறினார். ஸ்ரீதத்த பாதுகாபீடதரிசனமும் எளிதில் கிடைத்ததது.
“உன்னை ஆட்கொள்ள குருநாதன் சேந்தமங்கலத்தில் காத்திருக்கிறார், விரைவாகப் போ” என்று கட்டளை கிடைத்தது. இது அவதூத ஆதிமூலத்தின் கருணையே என் உணர்ந்து பெருகு வெள்ளம் வேலை வாய் முடுகுமாறு போல சேந்தமங்கலம் நோக்கி தாய்ப்பசுவை நோக்கி கன்று ஓடுவது போல ஓடோடிச் சென்றார் ஸுப்ரமண்ய யோகி.
சேலம் மாவட்டம் நாமக்கல் அருகே சேந்தமங்கலம் ஸந்யாசிக்கரடு என்று குன்றில் ஸ்ரீஸ்வயம் ப்ரகாச ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள் ஸ்ரீதத்தாத்த்ரேயரை ப்ரதிஷ்டை செய்து தென்னாட்டில் ஸ்ரீதத்தாத்ரேய பரம்பரைக்கு வித்திட்டு அறப்பணிகள் செய்து கொண்டிருந்தார்கள். தமது குருவைத் தேடியலைந்த ஸுப்ரமண்யம் நெல்லையப்பர் கோவிலிலும், கிரிநார் ஸ்ரீதத்த பாதுகாபீடத்திலும் ஒலித்த குரலுக்குரிய தம் ஸத்குருநாதர் இவரேயென்று அறிந்து சேந்தமங்கலம் ஸ்வயம்ப்ரகாசர் திருவடி வணங்கிப் பணிந்து நின்றார்.சேந்தமங்கலம் தத்தகிரியில் அன்று கதிரவன் பொற்கிரணங்கள் ஒளிவிடும் வேளையில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி போங்க புத்தொளி வீசியது. ஆம் அன்றுதான் அவதூத பரம்பரையில் மற்றுமொரு தீபம் ஒளிரத் தொடங்கவுள்ளது. அன்று கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா.
அவதூத ஸாம்ராட் ஸ்ரீஸ்வயம்ப்ரகாச ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள் முன்பு ஸுப்ரமண்யம் அமர்ந்திருக்கிறார். தத்த ஸம்ப்ரதாயத்தின்படி சடங்குகள் நடக்கின்றன. உபதேச கட்டம் முடிந்தது. சாந்தானந்தா என்று தீக்ஷா நாமம் வழங்கி ஆசீர்வதிக்கின்றார் ஸ்ரீஸ்வயம்ப்ரகாசர். அவதூதர்களுக்கு அடையாளம் ஜடாமுடி, நிர்வாணம். இந்த காலத்தில் அறியாத மக்கள் அவதூதர்களை ஹிம்ஸிப்பதால் வஸ்த்ரம் தரித்துக் கொள்ளுமாறு குருவின் கட்டளை பிறக்கிறது. தன் குருநாதன் திருவடிக்கமலங்களில் வீழ்ந்து வணங்கிய சீடரைத் தம் தவப்புதல்வர்போல் உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கிறார் ஸ்ரீஸ்வயம்ப்ரகாச மாமுனி.
ஸ்ரீஸ்வயம்ப்ரகாசர் உபதேசம்
“குழந்தாய்! வேதப்பயிற்சி பெற்றாய், த்யான ஸமாதி நிலையும் பெற்றாய், நாடெல்லாம் சுற்றி நல்லனுபவம் பெற்றாய். நற்காரியம் ஒன்றினுக்கு உன்னைப் ஈடுபடுத்த என் தவ உள்ளம் விரும்புகிறது. உலகத்திலே எனக்கு இருக்கும் ஒரே கடமை குரு கைங்கர்யம் தான். என் குருநாதனுக்குச் சமமானவர் எவருமே இல்லை. அந்த உத்தமருடைய அதிஷ்டானம் புதுக்கோட்டையில் இருக்கிறது. அதனைப் பொலிவுறச் செய்து குரு கைங்கர்ய சிகாமணியாய் வாழ்வாயாக” என்று ஆசீர்வதித்தார்.
ஒரு வருடம் கடினமாக மௌனவிரதம் மேற்கொள். கரதல பிக்ஷ: தருதல வாஸ: என்ற ஸந்யாஸ தர்மத்தை மேற்கொள். எவரிடமும் எதையும் கேட்காதே. குருநாதன் ஸன்னதியில் இது நடைபெற வேண்டுமெனச் சங்கல்பம் செய்து கொள். உனது சங்கல்பம் நிறைவு பெறும். உன்னால் தத்த பாரம்பர்யம் உயர்வும், மகத்துவமும் அடையும் என்று ஆசி கூறி புதுக்கோட்டை அதிஷ்டானத்தின் பொறுப்பைக் கொடுத்து அனுப்பினார் ஸ்ரீஸ்வயம்ப்ரகாசர்.
நவசாலபுரி விஜயம்
இன்று புதுக்கோட்டையில் அதிஷ்டானம் இருக்குமிடம் அன்று நல்ல வேப்பந்தோப்பு, ஊருக்கு ஒதுக்குப்புறம். அதிஷ்டானத்தின் மீது ஸ்ரீஸ்வயம்ப்ரகாசர் எழுப்பிய கோபுரம். எதிரே ஒரு ஓலைக்கொட்டகை. இதுவே அன்று இருந்த அமைப்பாகும்.
சாந்தானந்தர் புதுக்கோட்டை அதிஷ்டானத்திற்கு வந்து சேர்ந்தார். தமது பரம குருவின் அதிஷ்டானத்தில் தமது வாழ்க்கை பிணைந்திருப்பதை அறிந்து நமஸ்கரித்தார். மௌன வ்ரதம் ஒருவருடம் எவரிடமும் பேசக்கூடாது. இரவுபகல் அதிஷ்டானத்திலேயே தாங்கினார். வேப்பிலை கொழுந்தே உணவாயிற்று. மழைக்கும் வெயிலுக்கும் மரத்தடியே இல்லமாயிற்று. “தருநிழலே இல்லமென தாம் வாழ்பவரேயாகி தன் கரமே உணவுக்குப் பாத்திரமாய் ஏந்தி, விருப்பற்று திருவினையும் அகந்தை எனக் கருதும் வெறுங் கோவணத்து யதிதியரே பாக்யவான் ஆவார்” என ஆதி சங்கரர் யதி பஞ்சகத்தில் புகன்ற வாசகத்திற்கொப்ப வாழ்ந்தார் யதி சாந்தானந்த பரம யோகி.
அதிஷ்டானத்தில் ஆன்ம சோதனை
அதிஷ்டானத்திற்கு வரும் பக்தர்களிடம், தான் மேற்கொண்டிருக்கும் ஸங்கல்பத்தை விளக்கினார். குருவின் கட்டளைப்படி அதிஷ்டான இடத்தின் உரிமை படைத்திருந்த நீதிபதி பத்மநாப ஸாஸ்திரிகள் குடும்பத்தார் சாசனம் எழுதி சாந்தானந்தரிடம் சமர்ப்பித்தார்கள். ஒரே அக்ஷர ரூபமாகவும் உயர்ந்த மந்த்ர சித்தி தர வல்லதுமாக விளங்கும் புவனேஸ்வரியின் “ஹ்ரீம்” பீஜ மந்த்ரத்தை பற்றி ஆதி சங்கரர் சௌந்தர்யலஹரி 33வது பாடலில் சிறப்பித்துக் கூறி, இதனை ஜபிப்பவர்களுக்கு நினைப்பது தானே நடக்கும் என்று உறுதி கூறுகிறார். அக்ஷர ஜபமாக இருக்கும் அன்னைக்கு வண்ணப்படம் என்று வரையச் செய்து அதன் சந்நிதியில் தன்னுடைய ஜபத்தை சாந்தானந்தர் செய்து வரலானார். தன குருநாதரின் திருவடிகளை ஸ்மரனை செய்து எந்த காரியத்தையும் தொடங்குவார். குருவே பரப்ரம்மம் என்று உடைய தூய குரு கைங்கர்ய சிகாமணி சாந்தானந்தாவின் ஸங்கல்பம் நிறைவு பெற அன்பர்கள் ஆதரவு தானே வந்தது. அதிஷ்டானம் புதுமைப் பொலிவும் பெற்றது.
திருப்பணி படலம்
அதிஷ்டானத்தில் மௌன யோகத்தில் இருந்த சாந்த மூர்த்தியைப் பார்த்து அங்கு வந்து பணிந்த அன்பர்கள் அதிஷ்டானத்திற்கு இன்று வருவது போலப் பெருந்திரளாக வருவது வழக்கம் இல்லை. வருகின்ற ஒருவர் இருவர் மாலைக் காலத்தே திவ்ய நாம ஸங்கீர்த்தனம் செய்து அதிஷ்டானத்துக் கிணற்றில் அனுஷ்டானம் செய்து போவர். அத்தகைய மக்கள் இம்முனிவரால் திருப்பணி நிகழும் என்று உணர்ந்து திருப்பணி வேண்டலால் முனிவர் இறைவன் அருள் என்றார். மௌன விரதம் ஆதலால் கருத்தை எழுத்தில் உரைத்தார்.
சமாதித் தலம் என்ற அளவில் அடங்கியிருந்த நிலத்தில் பரந்த பூமியை அதிஷ்டானத்திற்கு உரியதாகிவிட்டதால் அவர்களுக்குத் தனிமை தராமல் அவர் அடங்கிய இடத்தில் விநாயகனும் தண்டபாணியும், தத்த முனியும் விக்ரக உருவம் பெற்று வரத்தக்க சந்தர்ப்பம் அமைந்தது. லிங்கமூர்த்தி இருக்கும் இடத்திலே அந்த மூர்த்திக்கு மேற்கே தத்த பிரதிஷ்டை செய்து, தெற்கிலும் வடக்கிலும் விநாயக, தண்டபாணிகளை அமர்த்தலாம் என்று நினைத்தார். இங்கு வந்த மூர்த்திகள் எல்லாம் ஏகாந்த மூர்த்திகளே, முருகன் இரு தலைவியரைப் பிரிந்த ஞானக் கோலத்திலே இங்கு இருப்பதே பொருத்தம் என்று மெய்யன்பர் கருதினார்.
இங்கனம் அதிஷ்டானத்திற்கு நிலம் வந்ததும் அதன் அகப்பணிகள் வளர்வதும் உறுதி என்று உணர்ந்த செல்வச்சீமான்கள் பலர், இந்தப் புண்ய கைங்கர்யத்திலே தாம் கலந்து கொள்ள விரும்புவதை அங்கு வந்து அந்த ஏகாந்த மூர்த்தியிடம் தெரிவித்தனர்.
முன் மண்டபம் அழகுற அமைந்தது. ஸதாஸிவ அதிஷ்டானம் சிறிது உருவம் வளரப் பெற்றது. மகாலிங்கத்தின் அருகே தாத்தாத்ரேயர் இடம் பெற்றார். இந்த திருத்தளி அருகே நடுநாயகம் ஆயிற்று. இதற்கு தெற்கே ஒரு சிறிய தளி எழுந்தது. அங்கு விநாயகன் இடம் பெற்றான். கர்பக்ரஹம் , அர்த்தமண்டபம் என்ற இரண்டு அமையவே ப்ரகாரம் தோன்றுவதாயிற்று. விமானம் பெரியதாயிற்று.
ஆதியில் அமைந்த அறை என்றது ஸ்வயம்ப்ரகாச முனிவர் கும்பாபிஷேகம் செய்ய வந்தபோது அதிஷ்டான கைங்கர்ய பொருட்களை வைத்துக் கொள்ளும் பொருட்டு மேற்கில் உள்ளது. இவ்வறையை ஒட்டியே இப்பொழுது இப்பொழுது புதிய யாகசாலை ஒன்று தோன்றியது. இங்கு சாந்தானந்தர் எப்பொழுதும் மௌன யோகத்தில் இருப்பது வழக்கமாயிற்று. நெய்யால் நெருப்பு வளர்ந்தது, நீரால் அலரிகள் வளர்ந்தன. நிறத்துக்கும் தூய்மைக்கும் பொருத்தமான உவமை.
மஹாலிங்கம், தாத்தாத்ரேயர், தண்டபாணி, விநாயகர் என்ற நான்கு மூர்த்தங்கள் உள்ள திருக்கோவிலில் ஞானச் செல்வம் அருளும் புவனேஸ்வரியும் அரசு செய்வது பொருத்தம் என்று எண்ணிய சாந்தானந்தர் தஞ்சாவூர் ஸம்ப்ரதாயப்படி ஓவியம் அமைக்கும் திறம் பெற்ற ஒரு கலைஞனை வருவித்து அவன் வரைந்தளித்த புவனேஸ்வரியின் பேரோவியத்தை ப்ரதிஷ்டித்தார்.
ஸதாஸிவர் தமக்கு பெரிய ஆலயம் வேண்டும் என்றும, உலகம் தம்மைக் கொண்டாட வேண்டும் என்றும் ஒரு நாளும் விரும்பியதில்லை. இத்திருப்பணி செய்த புகழ் தனக்கு வேண்டுமென்று சாந்தானந்தரும் விரும்பியதில்லை. பரம வைராக்ய மூர்த்தியாக இருந்து பலர் கைங்கர்யத்தால் இவ்வதிஷ்டானத்தை ஒரு பெரிய ஆலயம் ஆக்கும் திருப்பணியை நோக்கிக் கொண்டு இருந்தார். புவனேஸ்வரி ஓவியத்தில் அமர்ந்து தெற்கு நோக்கித் திருவருள் மழை பொழிந்தாள்.
ஸ்வர்காதி போகங்களைக் கொடுக்கும் ஸோமயாகாதிகளால் அடையும் வாழ்வு நிலையற்றது என்பதை நன்குணர்ந்து ஞான யக்ஞத்தால் அடையத்தக்க ஆனந்த அனுபவத்துக்குரிய முயற்சியே பழுத்திருந்த ஸதாஸிவர் அதிஷ்டானம் புதுவுருவம் பெற்றது. அருகே புவனேஸ்வரி இருக்கும் இடமே யாகசாலையாக உதவக் கும்பாபிஷேகம் தொடங்கியது.
ஸதாஸிவர் அதிஷ்டானத்தை ஒரு பெரிய தேவாலயம் போல ஆக்கி ஐந்து மூர்த்திகளை ஆராதிக்க வேண்டிய கர்பக்ரஹங்களை அமைத்து அந்த மூர்த்திகளுக்கு உரிய வழிபாடு முறையே நடக்க வேண்டிய தர்மங்களுக்கும் முயற்சி நிகழ்ந்த இந்நாளில் ஒரு நல்ல முஹுர்த்தத்தில் கும்பாபிஷேகம் செய்வது தகும் என்று சாந்தானந்த முனிவர் கருதியதால் மெய்யன்பர் பலர் உதவி கொண்டு நல்ல நாளில் அத்தர்மம் நிகழ்வதாயிற்று.
சில இசைக்கலைஞர்கள் தமது கலைப்பணியின் மூலம் தேடிக் கொடுத்த பெரும் பொருளும், உயந்த நிலைகளில் உள்ள பெருமக்கள் பலர் அன்போடு தந்த பொருளும் கும்பாபிஷேகத் திருவிழாவின் சிறப்பு மிகவும் பெறுக உதவியது. இராமபிரான் தொடங்கிய தர்ம காரியத்திற்கு கரடியும், குரங்கும், கருடனும், அணிற்பிள்ளையும் உதவினாற்போல தமக்கென்று ஒன்றும் தேடக்கருதாத துறவரசர் திருப்பணிக்கு உதவும் செல்வம் வரும் வழிகள் பல ஆயின. இங்கனம் இந்த திருப்பணிக்கு உதவிய எல்லா நன்மக்கள் பெயரையும் எடுத்துரைக்க இப்புராணத்தில் இடம் இராது.
துர்முகி வருடத்தில் மிதுன மாதத்தில் தூய்மை மிக்க ஞாயிற்றுக் கிழமைகளில் மஹிமை பொருந்திய ஏழாம் நாளில் ஏகாதசி திதியில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் பொன்னும் பொருளும் மிக்க செல்வர்கள் புகழ்பெற்ற புதுக்கோட்டை அதிஷ்டானத்தில் அபூர்வம் மிகுந்த கும்பாபிஷேகம் நிகழ்ந்தது.
ஸ்வயம்ப்ரகாச முனிவர் நேரில் வந்திருந்து நிகழ்த்தி முதற் கும்பாபிஷேகத்தின் முன் நிகழ்ந்த திருப்பணிகள் சுருக்கம். இரண்டாம் கும்பாபிஷேகத்தின் முன் நிகழ்ந்த திருப்பணிகள் மிகுதி. அன்றும் பலவூர் பொருட்செல்வர் தந்த பொருள் கொண்டே திருப்பணியும் குடமுழுக்கும் நிகழ்ந்தன. அந்த மஹான் ப்ரம்மானந்த அனுபவத்தில் அடங்கிய பிறகு அவர் குருமூர்த்தியின் அதிஷ்டானத்தில் நிகழ்ந்த இக்கும்பாபிஷேகம் பெரிய திருவிழாப் போல நடந்தது. மக்கள் பலரும் ஈடுபட்டனர்.
காந்தம் இரும்பை இழுப்பது இயற்கை. இரும்பு ஜடப்பொருள், காந்தமும் ஜடமே. அதற்கு அந்த சக்தி இறைவன் தந்தது. சாந்தானந்தர் தன தவச்சிறப்பால் பல மக்களை வசீகரித்து இப்பணியில் ஈடுபடச் செய்தது இறைவன் அருள் குருவருள் என்றே கூறத்தக்கது. அடங்கியிருந்த அதிஷ்டானம் பெருமை பெறலாயிற்று. பலவகைத் தர்மங்களும் பெற நிகழும்படி இவ்வதிஷ்டானம் அமைந்திருப்பதை எத்தகைய மக்களும் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் பாராட்டத் தக்க புண்ய மூர்த்தியான சாந்தானந்தர் தமக்கு எல்லாவகைத் திறமைகளையும் அருளும் புவனேஸ்வரியிடம் தெரிவித்து பல நிறங்கள் விளங்கும் புதுமையொளியால் திருப்பணியை பூர்த்தி செய்தார்.
வேள்விகள் பல புரிந்தது
தாத்தாத்ரேயம் ப்ரதிஷ்டாப்ய தத்புரஸ்தாத் யதீச்வரா:
தாத்தாத்ரேய மஹாமந்த்ரை: சக்ருர் ஹோமம் த்விஜாவ்ருதா
ஸ்வாமிகள் அந்தணர்களுடன் கூடி ஸ்ரீ தாத்தாத்ரேயரைப் ப்ரதிஷ்டை செய்து, அந்த தாத்தாத்ரேயருக்கு எதிரில் தாத்தாத்ரேய மஹாமந்த்ரங்களால் ஹோமமும் செய்தார்.
ஸ்ரீமந் மஹாகணபதே: ப்ரீதிகரம் லக்ஷஹோமமத சக்ரு:
ஸர்வார்த்த சித்திஜனகம் லோக க்ஷேமாய ஷோடச த்ரைவ்யை:
பின்னர் லோக க்ஷேமத்தை முன்னிட்டு பயன்கள் அனைத்தையும் அளிக்கக் கூடியதும், மஹா கணபதிக்குத் த்ருப்தி அளிக்க கூடியதுமான ‘மஹா கணபதி லக்ஷ ஹோமத்தை’ பதினாறு திரவியங்களைக் கொண்டு செய்தனர்.
பாபாபஹம் சர்வ ஸம்ருத்தி ஹேதும்
ஹோமம் மஹா ருத்ரமிதி ப்ரசித்தம்
ஸர்வஸ்ய லோகஸ்ய ஹிதாய சக்ரு:
சஹ த்விஜை: வேத விதாம் வரிஷ்டை
ஸ்ரீ ஸ்வாமிகள், பாபம் போக்கக்கூடியதும் எல்லா வளங்களை அளிக்கக் கூடியதுமான ‘மஹாருத்ரம் ‘ என்ற ப்ரசித்தமான ஹோமத்தை உலக நன்மையைக் கருதி வேத வல்லுனர்களான அந்தணர்களுடன் கூடி செய்தனர்.
க்ரஹ ஜனித தோஷமகிலம் தூரிகர்த்தும் சமுத்யதா ஏதே:
லக்ஷ நவ க்ரஹ ஹோமம் சக்ருர் விதிவத் விசக்ஷணைஸ் ஸஹிதர:
க்ரஹங்களால் உண்டான தோஷங்கள் அனைத்தையும் போக்கடிப்பதற்கு ஊக்கம் கொண்ட ஸ்ரீஸ்வாமிகள், விதவான்களுடன் கூட ‘லக்ஷ நவ க்ரஹ ஹோமத்தை’ முறைப்படி செய்தனர்.
ததனு ச கணபதி ஹோமம் விக்ன ஹரம் சார்த்த சாதகம் ந்ரூபணா
ருத்ரைகாதசினீ மபி சக்ரு: ஸ்ரீஸூக்த ஹோமமபி சுபதம்
பின்னர் விக்னங்களை போக்கி, விரும்பியதைக் கொடுக்கும் கணபதி ஹோமத்தையும், ருத்ரைகாதசினீ ஹோமத்தையும், மங்களத்தை நல்கும் ஸ்ரீஸூக்த ஹோமத்தையும் செய்தனர்.
புவனீச்வரீப்ரதிஷ்டாதின மாரப்யாத நித்ய சண்ட்யாக்யம்:
க்ருத்வா ஹோமமகார்ஷூ: சத சண்ட்யாக்யம் மகம் ஸந்துஷ்டா:
பின்பு புவனேஸ்வரீ ப்ரதிஷ்டை செய்த தினம் முதற்கொண்டு (ஒரு மண்டலம்) நித்ய சண்டீ ஹோமம் செய்து, பின் சத சண்டீ யக்ஞத்தையும் மகிழ்வுடன் நடத்தினர்.
ஏதே புவனர் லோக ஹிதைக ஸக்தா: ஸஹஸ்ர சண்டீ ப்ரமுகாம்ஸ்து யஞ்ஞான்
ருத்விக்பி ப்ரத்யுன்னத சீல வித்யை: வித்தைரியதாரஹிதை ராகார்ஷு:
மீண்டும் உலக நன்மையில் ஈடுபாடு கொண்ட ஸ்ரீஸ்வாமிகள் உயர்ந்த ஒழுக்கம் கல்வி இவைகள் நிறைந்த ரித்விக்குகளுடன் எல்லையற்ற த்ரவ்யங்களைக் கொண்டு ஸஹஸ்ர சண்டீ முதலிய யக்ஞங்களைச் செய்தார்.
த்ருஷ்ட்வா ஸஹஸ்ர சண்டீ யஞ்ய மாஸாத்யம் ச ராஜபிஸ்சாபி:
சாந்தானந்தய தீசை: க்ருதமாவனௌ ச்லாகதேஸ்ம ஸ்ர்வோபி
ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகளால் செய்யப்பட்ட, அரசர்களாலும் கூட நடத்த முடியாத ‘ஸஹஸ்ர சண்டீ யஞ்ஞத்தைக்’ கண்டு அனைவருமே கொண்டாடினர்.
ஸ்ரீஸூக்த மந்த்ர கடிதை: கணபதி மந்த்ரைச்ச லக்ஷ ஹோமம் தம்
க்ருத்வா லக்ஷ்மி கணபம் த்ருப்தம் சக்ருச்ச விக்ன சாந்த்யர்தம்
இடையூறின்றி இருப்பதற்காக, ஸ்ரீஸூக்த மந்த்ர ஸம்புடிதமான கணபதி மந்த்ரங்களால் லக்ஷ ஹோமம் செய்து ஸ்ரீலக்ஷ்மி கணபதியையும் த்ருப்தியடையச் செய்தார்.
ஸ்ரீபுவனேசீ மாது: க்ருபயா ஸஞ்சோதிதாஸ் ததோ தன்வன்
முதிதா ச கோடி மனுபி:புவனேச்வர்யா: சுபம் மஹாயக்ஞம்
பின்பு புவனேஸ்வரி மாதாவின் க்ருபையால் தூண்டப் பெற்றவர்களாய் ‘ஸ்ரீபுவனேஸ்வரீ கோடி மந்த்ர மஹாயக்ஞத்’ தையும் மகிழ்வுடன் விஸ்தாரமாகச் செய்தனர்.
ஸ்ரீமத் பூர்ண மஹா மேரு ஸ்ரீசக்ரம் து ப்ரதிஷ்டிதம்
விதாய சத சண்ட்யாக்யம் அகுர்வன் மஹிதம் மகம்
ஸ்ரீபூர்ண மஹா மேரு ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்து சிறந்த ‘சத சண்டீ யக்ஞத்’ தையும் செய்தனர்.
கோட்யர்ச்சனா பர்யவஸானகாலே மகோத்தமம் ஸ்ரீஜகதம்பிகாயா:
அனன்ய சாத்யம் ஸ்வதஹோபலேன விதாய சைதே முதிதா பபூவு:
ஸ்ரீஸ்வாமிகள் ஸ்ரீ புவனேஸ்வரி கோடி அர்ச்சனை முடியும் தருவாயில் ஸ்ரீஜகன்மாதாவுக்கு மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒரு சிறந்த வேள்வியை ‘புவனேஸ்வரி கோடி அர்ச்சனை ஹோமத்’ தை தன் தபோ பலத்தால் செய்து முடித்தனர்.
பரமந்த்ர யந்த்ர க்ருத்யா ரோகக்னம் சக்ரூபதவிஷ்ணோ:
ப்ரீதிகரம் ச ஸுதர்சன ஹோமம் கர்தும் மதிர் பபூவைஷாம்
பிறரால் ஏவப்பட்ட மந்த்ரம், யந்த்ரம், ஏவல் ரோகம் இவைகளை அழிக்கக் கூடியதும், சக்ர ரூபமான மஹாவிஷ்ணுவுக்குத் த்ருப்தி அளிக்கக் கூடியதுமான சுதர்ஷன ஹோமத்தையும் செய்யும் எண்ணம் இவர்களுக்கு உதித்தது.
புவேஸ்வர்யா: புரதோ பக்தஜனானாம் ஹிதாய யதிவர்யா:
க்ஷாமக்ஷோப பயாபஹ ஹோமம் சக்ரு: ஸுதர்சனாபிக்யம்
புவனேஸ்வரி தேவிக்கு முன்பு பக்தர்களின் நன்மையைக் கருதி இந்த ஸ்வாமிகள் துர்பிக்ஷம், கலகம், பயம் இவைகளைப் போக்கும் ‘சுதர்சன ஹோமத்தை’ நடத்தினர்.
லக்ஷ ஸுதர்சன மந்த்ரை: ஹோமம் விஷ்ணோ: ப்ரியங்கரம் க்ருத்வா
இச்சோதபூதமீஷாம் கர்தும் தத்ரைவ சூலினீ ஹோமம்
விஷ்ணுவிற்கு ப்ரீதியை உண்டாக்கும் ஸுதர்சன லக்ஷ ஹோமத்தை முறைப்படி முடித்தவுடன் இவர்களுக்கு அவ்விடத்திலேயே சூலினீ ஹோமத்தையும் செய்ய அவா உண்டாயிற்று.
த்ரிபுராணாம் து ஸம்ஹாரே யா மஹேசஸ்ய பார்ச்வத:
அதிஷ்டச் சூல மாதாய ஸாஹ்யம் கர்தும் ஸமுத்யதா
யஸ்யா ஸஹாயத: சீக்ரம் விஜித்ய த்ரிபுராஸுரான்
புராரிரிதி லோகேஷு ப்ரதே பரமேச்வர:
தஸ்யாஸ்து சூலினீ தேவ்யா: ஸந்தோஷ ஜனக சுப:
ரக்ஷாகரச்ச ஸர்வேஷாம் ஸர்வதுக்க நிவாரக:
சூலினீ மனுபி: சாந்திதுர்கா மனுபுடீக்ருதை:
விஹித: சூலினீயஞ்ஞ: லக்ஷாஹுதிபிருஜ்வல:
புரதோ புவனேச்வர்யா: மந்த்ரவிஜ்ஜன ஸம்வ்ருதை:
யதாசாஸ்த்ரம் ச யோகீந்த்ரை: ஏதைர் தேவீ ப்ரஸாதத:
த்ரிபுர ஸம்ஹார காலத்தில் எவள் மஹேஸ்வரனுடைய பக்கத்தில் சூலமேந்தி உதவ முயற்சியுடன் நின்றாளோ, எவளுடைய உதவியால் விரைவில் த்ரிபுரர்களை வென்று மஹேசன் உலகில் புராரி என்று புகழ்பெற்றாரா, அந்த சூலினீ தேவிக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக் கூடியதும், சிறந்ததும், எல்லோருக்கும் காப்பு அளிக்கக் கூடியதும், லக்ஷாஹூதிகளாலும் சாந்தி துர்கா மந்த்ரத்தால் சம்புடீகரணம் செய்யப்பட்ட சூலினீ மந்த்ரங்களாலும் ப்ரகாசிக்கின்றதுமான ‘சூலினீ யக்ஞம்’ புவனேஸ்வரி தேவிக்கு முன்பாக மந்த்ரம், அறிந்தவர்களுடன் கூட ஸ்வாமிகளால் சாஸ்த்ர முறைப்படி தேவியின் திருவருளால் நடத்தப் பட்டது.
யஸ்யா: கடாக்ஷபாதாத் அகிஞ்சன: ஸார்வபௌமதாம்யாதி
லபதே கீர்த்திம் மஹிதாம் லோகேட்யத்வம் மதிப்ரகர்ஷம் ச
அபராதினோபி பக்தான் அனுக்ருண்ஹாதி ஸவ்யம் க்ருபா மூர்த்தி
யா ஸ்ரீ: தஸ்யாஸ் த்ருப்த்யை லக்ஷ்மீ ஹோமம் சக்ரீரே விதிவத்
சாஸ்த்ர ப்ரோக்தைர் த்ரவ்யைர்: லக்ஷாஹூதிபி: ப்ரசோபமானம் தம்:
த்ருஷ்ட்வா யஞ்ஞம் ஸர்வே ப்ரசசமஸூர் யோகி வர்யமதிஹ்ருஷ்டா:
எவளுடைய கடாக்ஷத்தால் ஏழை சக்ரவர்த்தியாகின்றானோ, சிறந்த கீர்த்தியையும், உலகின் போற்றுதலையும் மேதாவிலாஸத்தையும் பெருகிறானோ, க்ருபாமூர்த்தியான எவள் தவறிழைத்தவர்களாயினும் அந்த பக்தர்களை அனுக்ரஹிக்கின்றாளோ, அந்த லக்ஷ்மியின் த்ருப்தியை விரும்பி, முறைப்படி ‘லக்ஷ்மீ ஹோமமும்’ செய்தனர். சாஸ்த்ரத்தில் கூறப்பட்ட த்ரவ்யங்களினாலும் லக்ஷம் ஆஹூதிகளாலும் ப்ரகாசிக்கின்ற அந்த யக்ஞத்தைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தவர்களாய் ஸ்ரீசாந்தானந்த ஸ்வாமிகளைப் புகழ்ந்தனர்.
சேலம் ஸ்கந்தாஸ்ரம தோன்றல்
நாம் அனைவரும் சதா சிவனையே த்யானித்து, ஸ்வயம்ப்ரகாசத்தை தரிசித்து சாந்தத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கக் தான் ஸ்கந்தாஸ்ரமம் ஏற்பட்டுள்ளது. மனிதனை மாமனிதனாக்க வந்த மாமனிதர் ஸ்ரீமத்ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள்.
பாரத புண்ய பூமியில் எத்தனையோ மஹான்கள் அவதரித்துள்ளார்கள். நமது இந்த நூற்றாண்டில் நம்மிடம் நடமாடும் தெய்வமாக அருளாற்றுபவர் ஸ்ரீமத்ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அவர்கள். அவர்களுக்கு 1965 ல் ஸ்ரீஞானஸ்கந்த குருநாதர் (முருகக் கடவுள்) கனவில் தோன்றி உனது குருநாதர் ஸ்வயம்ப்ரகாசர் சித்தியடைந்த மாவட்டத்தில் நாலைந்து மலைகளுக்கு நடுவில் ஒரு நீண்ட ஓடை ஓரம் நான் இருக்கிறேன் வா என்று உத்தரவு அருளினார். இந்த சந்தர்ப்பமானது புதுக்கோட்டையில் ஸ்வாமிகள் பரமகுருநாதர் ஸ்ரீஜட்ஜ் ஸ்வாமிகள் ஸந்நிதானத்தில் நடந்தது. மறுநாள் காலையில் சேலம் சர்வே அதிகாரிகள் புதுக்கோட்டைக்கு ஸ்ரீபுவனேஸ்வரி மாதாவை தரிசிக்க வந்திருந்தனர். அப்பொழுது நம் ஸ்வாமிகள் அவர்களிடம் தன் கனவில் ஸ்கந்தகுருநாதன் கூறிய உத்தரவினைத் தெரிவித்தார்கள்.
அதன்படி முயற்சித்து பல இன்னல்களையும் கடந்து 1967ல் சேலத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் சேலம் – ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள உடையாப்பட்டி க்ராமத்திலிருந்து சற்றே விலகிய ஸ்கந்தகிரி என்ற சமவெளியில் ஓம்ஸ்ரீஸ்கந்தாஸ்ரமம் அடைய இடம் கிடைத்தது. அங்கு நம் ஸ்வாமிகள் அமர்ந்து த்யானித்து ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா! என்று துதித்து ஸ்கந்தகுரு கவசம் இயற்றி அருளினார். ஞான ஸ்கந்தகுருநாதனே ஸ்வாமிகளுக்கு ஜோதி வடிவமாய் ஸ்வாமிகளுக்குக் காட்சியளித்தார். அந்த வருடம் முதல் திருக்கார்த்திகை நன்னாளில் ஸ்கந்தஜோதி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
1967 முதல் 1968 க்குள் இங்குள்ள உடையாப்பட்டி க்ராம மக்கள் ஒருமிடத்துச் சாலை அமைத்துக் கொடுத்தார்கள். அச்சமயம் புதுக்கோட்டையில் ஸ்வாமிகள் கனவில் “நான் சொன்ன இடத்தைக் கண்டு கொண்டாய்” அந்த இடத்தில் ஒரு கல் விக்ரகம் செய்து வை என்று பணித்தார். அதன் அடையாளமாக புதுக்கோட்டையில் “மாருதி கபே” என்ற சிற்றுண்டிக்கடை முதலாளி ஒரு பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட விக்கிரகமான ஸ்கந்தகுருநாதனைக் கொண்டு வந்து ஸ்வாமிகளிடம் கொடுத்தார். அதைப் போலவே நம் ஸ்வாமிகள் கல் விக்கிரகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.
கல் விக்கிரகம் செய்து வை என்று அன்று கனவில் சொன்னது நமது ஸ்வாமிகளின் உள் மனதில் கல்விக் கிரகம் செய்து வை என்று தோன்றியது. கல்வி என்றால் படிப்பு. கிரகம் என்றால் வீடு.படிப்புக்காக ஒரு வீடு கட்டு என்று நமது ஸ்வாமிகளின் உள் மனது சொல்லியது. அதன்படி 1969 முதல் வேத பாடசாலை நம் ஸ்வாமிகளால் தோற்றுவிக்கப் பட்டு நடைபெற்று வருகின்றது.
1970 ல் ஸ்வாமிகளின் உத்தரவின்படி கல் விக்கிரகச் சிலை வடிக்கப்பட்ட ஸ்ரீ ஞான ஸ்கந்தகுருநாதன் சிலை இங்கு வந்து சேர்ந்தது.
ஸ்கந்தகுரு நாதருக்கு சக்தி வேல் கொடுத்த பராசக்தியான ஸ்ரீஅஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி (ஸ்கந்த மாதா) துர்கா பரமேஸ்வரியையும், ஐம்பொன் விக்கிரகமாய் வடித்துத் தாயும் சேயும் எதிரெதிரே அமைத்துப் ப்ரார்த்தனை மண்டபம் அமைத்து 1971ல் மிகச் சிறப்பாக அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1968 முதல் 1986க்குள் 18 வருஷத்தை ஷண்மத ஸ்தாபனம் செய்துள்ளார் நம் ஸ்வாமிகள். இங்கு ஷண்மதமும் சம்மதம்
ஸ்கந்தமாதா தாயாருக்குக் கைகள் – 18
சாஸ்திரப்படி முருகனுக்குக் கண்கள் – 18
நமக்கு முன்னோர்கள் கொடுத்துள்ள புராணங்கள் – 18
நாம் பேசக்கூடிய பாஷைகள் – 18
சித்திகள் – 18
ஐயப்பன் படிகள் – 18
பாரத யுத்தம் நடந்த நாட்கள் – 18
இவற்றை எல்லாம் கேட்டு ஆடிவிட்டால் அருள் பெருக்கு எடுக்கும் நாள் ஆடிப் பதினெட்டு (18)
இங்கு ப்ரார்த்தனை மண்டபத்தில் தூணுக்குத் தூண் இடைவெளி நீளம் அடி – 18. முருகன் வாயிற்படி முதல் அம்பாள் வாயிற்படி வரை நீளம் அடி – 90. விநாயகருக்காக 18 அடி, முருகனுக்கு 18 அடி, ஐயப்பனாக 18 அடி ஆக மொத்தம் 54 அடி அகலம்.
அகலம் 54 அடியில் 5+4 = 9
நீளம் 90 அடியில் 9 + 0 = 9
ஆக 9 + 9 = 18
நம் ஸ்வாமிகள் ப்ரார்த்தனை மண்டபத்தில் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களையே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளும் விதமாய் அமைத்துள்ளார்கள். அவற்றினையே ஒரு புத்தகமாக நம் ஸ்வாமிகள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
நாம் அனைவரும் இடைவிடாது வணங்கும் தெய்வத்தை நினைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். எல்லாத் தெய்வங்களுக்குள்ளும் சக்தி என்பவள் வியாபித்து இருக்கிறாள். அதற்குப் பெயர் அம்பிகை என்பது. இதனையே ஸுப்ரமண்ய பாரதி “நம்பினவர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு, அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” என்று பாடியுள்ளார். அதனை நம் ஸ்வாமிகள் இங்கு ப்ரதிஷ்டை செய்துள்ளார். நான்கு வேத மூர்த்திகளுக்கு நடுவே அம்பிகை என்னும் பராசக்தியான ஸ்ரீ அஷ்டாதசாபுஜ மஹாலக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி என்று போற்றப்படும் ஸ்கந்தமாதாவையும், ப்ரதிஷ்டை செய்து நேர் எதிரில் பிள்ளையார் (வல்லப கணபதி), முருகன் (ஞான ஸ்கந்தகுருநாதர்), நடராஜர் சிவகாமியுடன் ஹரி ஹர புத்திரரான ஐயப்பனையும் ப்ரதிஷ்டை செய்து குருவும் தெய்வமும் ஒன்று என்று உணர்த்துவதற்காக (தெரிந்து கொள்வதற்காக) நம் ஸ்வாமிகள் தம் குரு பரம குரு ஆகியோரை அம்பாள் ஸந்நிதிக்கு அருகில் ப்ரதிஷ்டை செய்துள்ளார். நமது மனத்தை அம்பிகையின் திருவடிகளில் பதிய வைத்துக்கொள்வதற்காக எதிர் எதிராகத் தேவதைகளைப் ப்ரதிஷ்டை செய்துள்ளார். மஹாகவி பாரதியின் பாட்டின் கருத்தும் அதுவேயாகும்.
இங்குள்ள ஸ்கந்தமாதாவின் கைகள் 18, ஞான ஸ்கந்தகுருநாதர் அங்கு ஒரு முகத்துடன் இரண்டு கண்களுடன் காட்சி அளிக்கின்றார். ஆனால், ஸ்கந்த குருநாதருக்கு ஆறுமுகம் என்று பெயர். ஆறுமுகம் என்பவர் ஈஸ்வர குருவினுடைய நெற்றிக்கண்ணிலிருந்து உதித்ததால் நெற்றிக்கண் உடையவர் ஆறுமுகன். ஆக 3X6=18 கண்களை உடையவர் ஸ்கந்த குருநாதர்.
மனிதனை மாமனிதனாக ஆக்கும் இடம் சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள ப்ரார்த்தனை மண்டபம் ஆகும். நாம் உருவ வழிபாடு செய்வதற்கு தேவை ஒன்று ஆண் தெய்வம், மற்றொன்று பெண் தெய்வம். ஆண் தெய்வமே முருகப் பெருமான் என்ற ஞான ஸ்கந்த குருநாதர். பெண் தெய்வமே ஸ்கந்த மாதா என்கிற அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி அவாள். இந்தச் ஸந்நிதானத்தை தரிசிப்பவர்களுக்கு ஸ்கந்த மாதா சாந்தமும் ஸ்கந்த குருநாதர் ஆனந்தத்தையும் தரும்படி ஸ்ரீமத் சாந்தானந்த ஸ்வாமிகள் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ஓம் என்றால் ஸ்கந்தர், ஸ்ரீ என்றால் லக்ஷ்மி துர்கை, ஸ்கந்தாஸ்ரமம் என்றால் ஸ்கந்தன் உத்தரவில் ஏற்படுத்திய ஆஸ்ரமம். நமக்கு தெய்வ வழிபாடு செய்ய வழி காட்டியவர் ஆதி சங்கரர். அவர் நமக்காக ஆராய்ச்சி செய்து வழிபாட்டுக்கு முப்பத்து முக்கோடி தெய்வங்கள் உள்ளன என்பதனைக் கண்டு பிடித்து அதில் ஆறு தெய்வங்களை வழிபாடு செய்ய வழி வகுத்துக் கொடுத்தார். ஆகையினால் ஆதி சங்கரரின் பெயர் ஷண்மத ஸ்தாபகர். அந்த ஆதி சங்கரர் நமது வழிபாட்டுக்கு கொடுத்த ஷண்மத மூர்த்திகள் 1986ல் இங்கு ப்ரதிஷ்டை ஆகியுள்ளன. இங்கு ஷண் மதமும் சம்மதம்.
- சௌர மதம் – ஸ்ரீ சூரிய பகவான் – தேஜஸ், ஜீர்ண சக்தி,
- சாக்த மதம் – ஸ்ரீ பராசக்தி – பசி தீர்ப்பவள்
- வைணவ மதம் – ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் – பணம் கொடுப்பவர்.
- காணபத்ய மதம் – ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப மஹா கணபதி – நல்ல செலவுகள்
- சைவ மதம் – ஸ்ரீ தத்த பகவான் (பாணலிங்கம்) – நிறைகுடம் (மனச் சாந்தி)
- கௌமார மதம் – ஸ்ரீ ஞான ஸ்கந்தகுருநாதர் – ஆடிட் செய்பவர்
இவ்வளவையும் அனுபவிக்கத் தேவையான நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் ஆகும். தன்வந்திரி பகவான் நமக்கு கொடுப்பது தெம்புள்ள ஆகாரம் – நோயற்ற வாழ்வு. ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தங்கத்தை தங்க வைத்து அனுக்கிரகிக்கும் கடவுள் ஆவார். இது அனைத்த்தும் சங்கடமில்லாமல் கிடைக்க வேண்டி சங்கட ஹர கணபதியைப் ப்ரதிஷ்டை செய்துள்ளார் நம் ஸ்வாமிகள் அவர்கள். இந்த அனைத்துக்கும் மூலப் பொருளானது நான்கு வேதங்களே ஆகும். அந்த நான்கு வேத மூர்த்திகளையும் ப்ரதிஷ்டை செய்துள்ளார். அவர்களில் முதலாமவர் ரிக். இவர் கழுதை முகம் கொண்டவர். இரண்டாமவர் யஜுர். இவர் ஆட்டு முகத்தைக் கொண்டவர். மூன்றாமவர் ஸாமர். இவர் குதிரை முகத்தைக் கொண்டவர். நான்காமவர் அதர்வணர். இவர் குரங்கு முகம் கொண்டவர். வேத மூர்த்திகளுக்கு முகங்கள் இப்படி இருக்கும் என்று வேத வியாஸர் நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளார். அவரையும் வேத மூர்த்திகளின் அருகில் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தின் தோற்றம் சிவலிங்க வடிவத்தில் அமைந்துள்ளது உலகமே சிவலிங்கம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன.
- தத்த பகவான்
- தன்வந்திரி பகவான்
- ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
- பஞ்சமுக ஹேரம்ப கணபதி
- பஞ்சமுக ஹனுமான்
- ஞானஸ்கந்த குருநாதர்
- ஸ்கந்தமாதா
- மகான்கள் மண்டபம்
- வேதபாடசாலை
- உடையாப்பட்டி
- எருமாபாளையம்
- சந்நியாசி குண்டு
ஸ்கந்தாஸ்ரமத்தின் சிவலிங்க வடிவத் தோற்றம்
த்ரிவேணி சங்கமம்
ஸ்கந்தகிரி – ஸ்கந்த தீபம் ஏற்றும் இடம்
ஸ்கந்தபுரி – மஹான் முதல் மக்கள் வரை வாழும் இடம்
ஸ்கந்தாஸ்ரமம் – தேவதா ப்ரதிஷ்டை முதல் ஸ்வாமிகள் ரூம் வரை
- உடையாப்பட்டி – உடையாத பட்டி
- எருமாப்பாளையம் – அம்பாள் பாதத்தின் கீழே எருமைத் தலை உள்ளது
- ஸந்நியாசி குண்டு – ஸந்நியாசிக்கு உண்டு இந்தக் குன்று
பஞ்சமுக ஹேரம்ப கணபதி
பஞ்சமுக ஹேரம்ப கணபதி அருகில் அகஸ்தியரைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அகஸ்தியர் பாத யாத்திரை செல்லும் பொழுது ஒரு காட்டாறு குறுக்கிட்டு ஜலம் பெருகி ஓடிவருகிறது. அகஸ்தியரின் தபோவலிமையினால் தனது கொண்டியில் (கமண்டலம்) இருந்து நீரை வடிகட்டி எடுத்து விட்டார். ஆகையால் நீரில் வசித்து வந்த ஜந்துக்களான மீன், நண்டு, திமிங்கிலம் மற்றுமுள்ள கிருமிகள் வறட்சியில் வாடி வருந்திப் போய் ஹேரம்ப கணபதியை வேண்டிக் கொண்டன. அப்போது கணபதியானவர் காக்கா பிடித்தால் காரியம் நடக்கும் என்று சொன்னார். அப்போது நீர்வாழ் ஜந்துக்கள் தங்களுக்குக் காக்கை பிடிக்கத் தெரியாது என்றும், நீரில் மக்கள் இறங்கினால் காலையாவது பிடிக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. மக்களுக்கு இப்போது இரக்கம் இல்லை. உலகிலேயே இரக்கம் உள்ளவர் ஒருவர், அவரே பஞ்ச முக ஹேரம்ப கணபதி ஆவார் என்று ஜந்துக்கள் முறையிட்டன. இதனைக் கேட்ட பஞ்சமுக ஹேரம்ப கணபதியானவர் காக்கை ரூபத்தில் போய் அகஸ்தியரின் கெண்டியைச் சாய்த்து, அடைபட்டிருந்த நீரை வெளிக் கொணர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் கொடுத்தார். குட்டு வாங்கினாலும் மோதிரக் கையினால் கூட்டு வாங்க வேண்டும் என்ற பழமொழி இன்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கத்தைச் செய்தவரே அகஸ்திய மஹரிஷி ஆவார். மஹரிஷி காகத்தைக் குட்டுவதற்கு கைகளை ஓங்கும் பொழுது காக்கையாக வந்தவர் பஞ்சமுக ஹேரம்ப கணபதியாகி விட்டார். ஆகையினால் அகஸ்தியர் தம் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் நாமும் கணபதி சந்நிதியின் முன் நின்று நம் தலையில் குட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். ஹேரம்ப கணபதிக்கு வலது புறத்தில் அகஸ்தியர், இடது புறத்தில் அவர் மனைவி லோபமுத்ரா சிலைகள் வைக்கப் பட்டுள்ளன. ஹேரம்ப கணபதி சிலை 16 அடி உயரம் உள்ளது. இதனை 1975ல் ப்ரதிஷ்டை செய்துள்ளார். இதன் பெயர் திருஅருள்.
பஞ்சமுக ஆஞ்சநேயர்
பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு நேர் எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை நம் ஸ்வாமிகள் ப்ரதிஷ்டை செய்துள்ளார். ஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள ஸந்நிதானங்களை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகும். அதன் பயனாக தாயார் சாந்தத்தையும், அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள். இதை அனுபவிக்க நமக்குத் தேவை பக்தி, பலம், தைர்யம், விஷம் தீண்டாமை, பூமி, செழிப்பு, படிப்பு. அதற்காக 1974ல் 16 ஆடி உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயரரைப் ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் நாரதர், இடதுபுறம் ராகவேந்திர ஸ்வாமிகள் சிலைகளை வைத்துள்ளார்கள். இந்தப் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஐந்து முகங்கள்
- ஆஞ்சநேயர் – பக்தியும் பலமும் தருகிறவர்
- நரசிம்மர் – ஸ்வாமி கும்பிடும் தைர்யத்தை தருகிறவர்
- கருட பகவான் – நம்மை விஷ ஜந்துக்கள் தீண்டாமல் காத்து இரட்சிக்கிறார்.
- வராக மூர்த்தி – புசிக்க நல்ல உணவு தருகிறார்.
- ஹயக்ரீவர் – நல்ல கல்வி அருளுகிறார்.
மற்ற மூர்த்திகள்
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் நம் ஸ்வாமிகள் தாயையும் சேயையும் நேர் எதிராகப் ப்ரதிஷ்டை செய்துள்ள காரணத்தினால் “அருள்” என்று பெயர். ஆஞ்சநேயரும், விநாயகரும் நேர் எதிரில் இருப்பதால் “திருஅருள்” என்று பெயர். அருளையும் திருஅருளையும் அடையத் தேவை குரு அருள். அந்த குரு அருளே ஸ்ரீ தாத்தாத்ரேய பகவான். அவருடைய சிலையை 1976ல் ப்ரதிஷ்டை செய்துள்ளார். அருள், திருவருள், குருவருள் அடையத் தேவை நோயற்ற வாழ்வு. அதற்காகவே தன்வந்த்ரி பகவானை ப்ரதிஷ்டை செய்துள்ளார். குறைவற்ற செல்வமான தங்க பிஸ்கட்டை தங்க வைக்கும் ஸ்வாமியான ஸ்வர்ணஆகர்ஷண பைரவரைப் ப்ரதிஷ்டை செய்து, அனைத்தும் சங்கடமில்லாமல் மக்களுக்குக் கிடைப்பதற்காக சங்கடஹர கணபதியைப் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
ஸ்ரீ தாத்தாத்ரேய பகவான் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவருக்கு அருகில் அத்ரி மகரிஷியையும், இடது புறம் அவர்தம் மனைவி அனசூயா தேவியையும் ப்ரதிஷ்டை செய்துள்ளார். இதன் பெயர் தெய்வ அனுக்ரஹம். அதை அடைய மக்களுக்குத் தேவை நவக்ரஹ தோஷ நிவர்த்தி. ஆகையினால் முருகனைச் சுற்றி வந்தால், நவக்ரஹ தோஷம் விலகும் என ஜோதிட சாஸ்திரப்படி முருகனைச் சுற்றி மனைவியுடன் நவக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
ப்ரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாண லிங்கமான புவனேஸ்வரர், புவனேஸ்வரியை முருகன் ஸந்நிதியில் வைத்துள்ளார்.
யாகசாலையில் உள்ள சிற்பங்கள்
ஸ்ரீ ஷோடச ஸ்கந்தர்
முருகனின் 16 விதமான வடிவங்கள்
- ஸ்ரீ சிகி வாஹன ஸுப்ரமணியர்
- ஸ்ரீ ஸ்கந்த ஜாத ஸுப்ரமணியர்
- ஸ்ரீ அக்னி ஜாத ஸுப்ரமணியர்
- ஸ்ரீ ஸரபேச ஸுப்ரமணியர்
- ஸ்ரீ காங்கேய ஸுப்ரமணியர்
- ஸ்ரீ சரவணோத்பவ ஸுப்ரமணியர்
- ஸ்ரீ கார்த்திகேய ஸுப்ரமணியர்
- ஸ்ரீ குமார ஸுப்ரமணியர்
- ஸ்ரீ ஷண்முக ஸுப்ரமணியர்
- ஸ்ரீ தாரகாரி ஸுப்ரமணியர்
- ஸ்ரீ ஸேனானி ஸுப்ரமணியர்
- ஸ்ரீ குஹ ஸுப்ரமணியர்
- ஸ்ரீ பால ஸுப்ரமணியர்
- ஸ்ரீ தேசிக ஸுப்ரமணியர்
- க்ரௌஞ்ச பேதன ஸுப்ரமணியர்
- ஸ்ரீ வேலாயுத ஸுப்ரமணியர்
சித்தர்கள் 23 பேர்கள்
- ஸ்ரீ திருமூலர் (திருவாவடுதுறை)
- ஸ்ரீ தாயுமானவர் (திருச்சி)
- ஸ்ரீ சிவவாக்கியர் (கும்பகோணம்)
- ஸ்ரீ சட்டநாதர் (சீர்காழி )
- ஸ்ரீ காளங்கிநாதர் (சேலம் சித்தர்மலை)
- ஸ்ரீ தேரையர் (கழுகுமலை)
- ஸ்ரீ புலிப்பாணி சித்தர் (பழனி)
- ஸ்ரீ புலஸ்தியர் (ஆவுடையார் கோவில்)
- ஸ்ரீ அமுகண்ணர் (நாகை)
- ஸ்ரீ போகர் (பழனி)
- ஸ்ரீ அகஸ்தியர் (அகஸ்திய கூட பர்வதம்)
- ஸ்ரீ இடைக்காடர் (திருவண்ணாமலை)
- ஸ்ரீ கோரக்கர் (பேரூர்)
- ஸ்ரீ மச்சமுனி (திருப்பரங்குன்றம்)
- ஸ்ரீ குதம்பை சித்தர் (மாயவரம்)
- ஸ்ரீ கமல முனி (திருவாரூர்)
- ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் (விருத்தாசலம்)
- ஸ்ரீ ராமதேவர் (அழகர்மலை)
- ஸ்ரீ பதஞ்சலியார் (இராமேஸ்வரம்)
- ஸ்ரீ வல்லப சித்தர் (மதுரை)
- ஸ்ரீ பின்னாக்கீசர் (எகிப்து)
- ஸ்ரீ கருவூரார் (கரூர்)
- ஸ்ரீ கொங்கணர் (திருப்பதி)
தசமஹா வித்யா
தசாவராதத்தில் பெருமாளுக்கு உட்சக்தியாக இருந்து ஆற்றல் படைத்தவர்கள்
- கமலாத்மிகா
- ஷோடசி
- பகளாமுகி
- தக்ஷிண மஹாகாளி
- ராஜ மாதங்கி
- புவனேஸ்வரி
- தாரா (நீல சரஸ்வதி)
- த்ரிபுர பைரவி
- சின்ன மஸ்தா
- தூமாவதி
நவ துர்கைகள் (தேவி மஹாத்மீயத்தில் மார்க்கண்டேய மஹரிஷியால் கூறப்பட்ட தேவி கவசம் என்ற ஸ்தோத்ரத்தில் கூறப்பட்டுள்ளவர்கள்)
- ஸ்ரீ ஸைலபுத்ரி
- ஸ்ரீ ப்ரம்மசாரிணி
- ஸ்ரீ சந்த்ரகண்டீ
- ஸ்ரீ கூஷ்மாண்டீ
- ஸ்ரீ ஸ்கந்தமாதா
- ஸ்ரீ காத்யாயனீ
- ஸ்ரீ காளராத்ரி
- ஸ்ரீ மஹாகௌரி
- ஸ்ரீ சித்திதாத்ரி
மாத்ருகா சக்திகள் – 9
- ஸ்ரீ ப்ராம்ஹி
- ஸ்ரீ மாஹேஸ்வரி
- ஸ்ரீ கௌமாரி
- ஸ்ரீ வைஷ்ணவி
- ஸ்ரீ வாராஹி
- ஸ்ரீ நரஸிம்ஹீ
- ஸ்ரீ ஐந்த்ரி
- ஸ்ரீ சிவதூதி
- ஸ்ரீ சாமுண்டா
தெய்வத்தை கண்ட மஹான்கள்
(ஸ்வயம் ப்ரகாச மண்டபத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்)
- ஸ்ரீ ஆண்டாள்
- ஸ்ரீ பட்டினத்தார்
- ஸ்ரீ சேக்கிழார்
- ஸ்ரீ மாணிக்கவாசகர்
- ஸ்ரீ திருஞானசம்பந்தர்
- ஸ்ரீ சுந்தரர்
- ஸ்ரீ அப்பர்
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
- ஸ்ரீ ரமணமகரிஷி
- ஸ்ரீ புரந்தரதாசர்
- ஸ்ரீ இராமலிங்க வள்ளலார்
- ஸ்ரீ அருணகிரிநாதர்
- ஸ்ரீ சமர்த்த ராமதாஸ்
- ஸ்ரீ வேதாந்த தேசிகர்
- ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்
- ஸ்ரீ ச்ருங்கேரி சந்த்ரசேகர பாரதி ஸ்வாமிகள்
- ஸ்ரீ ச்ருங்கேரி ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள்
- ஸ்ரீ காஞ்சி சந்த்ரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (மஹா பெரியவா)
- ஸ்ரீ மத்வாச்சாரியார்
- ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள் (சேந்தமங்கலம் ஸ்வாமிகள் )
- ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள் (ஜட்ஜ் ஸ்வாமிகள் )
- ஸ்ரீ ராமானுஜாச்சாரியார்
- ஸ்ரீ மங்கையர்க்கரசி
- ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள்
- ஸ்ரீ பாஸ்கரராயர்
- ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர்
- ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள்
ஹோம குண்டம் எதிரில்
ஹோமகுண்டத்திற்கு நேராக இருப்பது அக்னி பகவான். அவர் அருகில் இருப்பது வலது பக்கம் சூரியன், இடது பக்கம் சந்திரன். குடும்பத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டியவரே அர்த்தநாரீஸ்வரர். குடும்பத்தை நிர்வகிக்கிக்கப் பணம் தேவை. பணத்தைப் பஞ்சமில்லாமல் பகிர்ந்து கொள்ள அனுக்ரஹம் செய்பவர்தான் சங்கரநாராயணர்.
ஸ்கந்தாஸ்ரமத்தின் அடியாளாச் சின்னம் (emblem) சித்திகள் 18. ஆனால் சித்தர்கள் இன்னம் பலர் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதில் நமக்குக் கிடைத்த 23 பெயர்களை அவரவர் ஸமாதி அடைந்த ஊர்களின் பெயர்களையும் எழுதியுள்ளார் நம் ஸ்வாமிகள். இவ்வளவையும் ப்ரதிஷ்டை செய்து சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில், முப்பத்து முக்கோடி தெய்வங்களையும் தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றுத் தந்துள்ளார் நமது ஸத்குருநாதர். நமது மனதை ஒருநிலைப் படுத்தி நிறுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி நாம ஸங்கீர்த்தனமே ஆகும். அந்த நாம ஸங்கீர்த்தனத்தைப் பாடி அனுபவித்து அவர்களுக்குக் கிடைத்த பேரின்பத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டுமென்று எடுத்துரைத்த மஹான்கள் மூவர். அவர்கள் 1. துக்காராம் 2. சைதன்யர் 3. த்யாகப்ரம்மம் (திருவையாறு). இவர்கள் அனைவரும் பரந்த பாரத தேசத்தில் தான் பிறந்தவர்கள். ஆகையினால் சின்னமாக நமது பாரத தேசத்தை அமைத்துள்ளார்.
நவக்ரஹங்கள்
பொதுவாக தோஷம் இல்லாத ஜாதகமே கிடையாது. என்ன தோஷம் என்று சோதிட சாஸ்திரத்தில் ஊடுருவிப் பார்த்ததில் பிறவி எடுப்பதே பெரிய தோஷம். பிறவி எடுத்த பயனாக பிறவிப்பயனுடைய முருகனையே சரணாகதி அடைய வேண்டும் என்று சோதிட சாஸ்திரம் உறுதியாகக் கூறுகிறது. இதையே முருக பக்தரான அருணகிரி நாதர் “நாள் என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்; கொடும் கூற்று என் செயும்; குமரேசன் தாள் பாடி சரணடைந்தால்” என்று பாடியுள்ளார். அவர் முருகனைக் கால் சலங்கை முதல் க்ரீடம் வரை வர்ணித்துப் பாடியுள்ளார். அதன் பொருளாக நம் ஸ்வாமிகள் முருகனைச் சுற்றி மனைவியுடன் நவக்ரஹங்களை ஜோதிட சாஸ்திரத்தின் படி ப்ரதிஷ்டை செய்துள்ளார்கள். முருகன் ஞான ஸ்கந்த குருநாதன் கிழக்கு நோக்கி நிற்கின்றார். அவருக்குக் கண் போலச் சூரிய சந்திரர்களும், அவருக்கு ஈஸான்ய பாகமான வடகிழக்கில் குரு பகவானும் தென் கிழக்கில் சுக்கிரனும், அருகில் செவ்வாயும், அதற்கு நேர் வடக்கில் புதனும், மேற்கு நோக்கி ராகு, சனி, கேது என்ற மூர்த்திகளையும் ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
நவக்ரஹங்கள் – அவர் மனைவியர்
- ஸூர்யன் – உஷா, ப்ரத்யுஷா
- சந்த்ரன் – ரோஹிணி
- அங்காரகன் – சக்திதேவி
- சுக்ரன் – சுகீர்த்தி
- ராஹு – சிம்ஹி
- சனி – நீலாதேவி
- கேது – சித்ரலேகா
- புதன் – ஞானாதேவி
- குரு – தாராதேவி
ஸ்கந்தாஸ்ரமத்தின் இருப்பிடம்
சேலத்தில் இருந்து ஆத்தூர் சாலையில் உடையாப்பட்டி என்ற க்ராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தை ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் ஏற்படுத்தி உள்ளதே மக்கள் அனைவரும் தன்னைத் தானுணர்ந்து நமக்குள் பகவான் இருக்கிறார் என்று உணரவே. அவர் யார் என்றால் ஒன்று ஆண், இரண்டாவது பெண். இந்த இரண்டு தெய்வங்களும் தான் இங்கு நடமாடும் தெய்வங்கள். ஆகையால் ஆசாமி என்று சொல்லுகிறோம்.
எந்த இடத்தில் எங்குப்போனாலும் எந்தச் ஸந்நிதானத்திலும் சரியாகத் தெரியவில்லை. ஆகையால் ஆசாமிகள் மனத்தில் பதிவதற்காக ஸ்வாமிகள் மூலஸ்தானத்தில் விளக்கு (light) போட்டு, எடுத்துச் சொல்ல இங்குள்ள பூஜகர்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்துள்ளார்கள். ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸந்நிதியில் யாரும் காசுகள் போடக்கூடாது. வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் வாரி வழங்கும் ஸந்நிதானத்தை ஸ்ரீ ஸ்வாமிகள் அமைந்துள்ளதால் யார் யாருக்கும் என்ன வேண்டுமோ அதனை வேண்டிக் கொள்ளலாம்.
ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தின் விசேஷ நாட்கள்
மாதம் – விசேஷ நாட்கள்
- சித்திரை – சித்ரா பௌர்ணமி
- வைகாசி – வைகாசி விசாகம்
- ஆனி – ஆனித் திருமஞ்சனம் (உத்தர நக்ஷத்ரம்)
- ஆடி – ஆடிப்பூரம், ஆடிப் பதினெட்டு
- ஆவணி – விநாயக சதுர்த்தி
- புரட்டாசி – நவராத்ரி
- ஐப்பசி – ஸ்கந்த ஷஷ்டி
- கார்த்திகை – கார்த்திகை தீபம் – ஸ்கந்த ஜோதி
- மார்கழி – தத்த ஜயந்தி, ஹனுமத் ஜயந்தி
- தை – பொங்கல், புனர்பூசம், வருஷாபிஷேகம், தைப்பூசம்
- மாசி – மஹா சிவராத்ரி
- பங்குனி – பங்குனி உத்திரம்
நடை பெறும் பூஜைகள்
இவை தவிர நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் கிடைக்க, திருவோணம் நக்ஷத்ரத்தில் தன்வந்த்ரி பகவானுக்கு விசேஷ பூஜையும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு பௌர்ணமியன்று விசேஷ பூஜையும் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் இரண்டு, ஸுக்ல பக்ஷ மற்றும் க்ருஷ்ண பக்ஷ ப்ரதோஷ பூஜை நடை பெறுகிறது. ப்ரதோஷ தினத்தன்று நர்மதா நதியினின்று கொன்டு வரப்பட்ட பாண லிங்கமான புவனேஸ்வரருக்கும், ஜகன்மாதா புவனேஸ்வரி தேவிக்கும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை மஹாந்யாஸ சதுருத்ரிய ஜபத்துடன் அபிஷேக அலங்கார அர்ச்சனை தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வேத மூர்த்திகளைப் ப்ரதிஷ்டை செய்து முறையாக வழிபாடு செய்யப்பட்டு வருவது சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தின் விசேஷமாகும். வேத மூர்த்திகளுக்கும் அவர்களின் நாடுநாயகமாக இருக்கும் பராசக்திக்கும் பூஜை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அருள் பொங்கித் ததும்பி பூரணமாக உள்ளது. ஆகையால் அந்த அருளைப் பருகுவதற்காக அருள் பெருக்கெடுக்கும் நல்ல நாளான ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அன்று காலை ஒன்பது மணி முதல் ஒன்பது மணி நேரம் மாலை ஆறு மணி வரை.
“ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஷண்முகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்”
என்று நாம ஸங்கீர்த்தனம் செய்வதும், 1986ஆம் வருடத்துடன் 18 வருடம் பூர்த்தியான காரணத்தினால் 1986ல் ஒரு வருடம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
“ஓம் ஓம் நமச்சிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் ஓம் நமச்சிவாய”
என்று நாம ஸங்கீர்த்தனம் செய்து அருள் பெருகச் செய்துள்ளார் நம் ஸ்வாமிகள் அவர்கள்.
சிவராத்ரி முதல் ஒரு வருடம் அகண்ட பஜனை
ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் அவர்களுக்கு வேதங்களைக் காப்பதிலும், வேள்விகளை நடத்துவதிலும் எவ்வளவு ஈடுபாடு உண்டோ, அவ்வளவு ஈடுபாடு பஜனையிலும் நாமஸங்கீர்த்தனத்திலும் உண்டு. நாமஸங்கீர்த்தனம் செய்யும் பரம பாகவதர்களிடம் ஸ்வாமிகளுக்கு அளவு கடந்த ப்ரீதியும் உண்டு. ஸ்ரீ ஸ்வாமிகள் புதுக்கோட்டையில் ஸ்ரீ புவனேஸ்வரி ஸந்நிதியில் முருக நாம அகண்ட பஜனை முன்பு செய்துள்ளார். பக்தியினாலும் நாமஸங்கீர்த்தனத்தினாலும் தான் மக்கள் நிம்மதி பெற முடியும் என்ற எண்ணமும் கொண்டவர் ஸ்வாமிகள். நான்கு யுகங்களிலும் நான்கு கால்கள் கொண்ட தர்ம தேவதை க்ருத யுகத்தில் நான்கு கால்கள் கொண்டும், த்ரேதா யுகத்தில் மூன்று கால்கள் கொண்டும், த்வாபர யுகத்தில் இரண்டு கால்கள் கொண்டும், காளி யுகத்தில் ஒரு காலை மட்டும் பற்றிக் கொண்டும் நிற்கின்றது என்பர் பெரியோர். கலியில் அனைவரும் தர்மத்திற்கு ஒவ்வாத காரியங்களையே செய்வர். வேத நிந்தனை செய்வர். ஈஸ்வர வழிபாட்டில் ஈடுபாடு கொள்ளார். குறைந்த ஆயுளும் குறைந்த புத்தி சக்தியும் பெற்றிருப்பார் என்று புராணங்கள் பேசுகின்றன இவ்வாறான கலியில் யஞ்ஞம் தானம் தவம் விரதம் இவற்றை முறைப்படி குறையின்றி நம்மால் செய்வது முடியாத காரியம். குறைவின்றி செய்யவில்லை என்றால் அது முழுப் பலனை அளிக்குமோ! செய்த அளவிற்கு பலன் உண்டு.
ஆகையால் கலியில் கங்கா ஸ்னானமும், ஹரி சிவ நாமோச்சாரணமும் தான் நாம் உய்ய ஒரே வழி. இக்கல்வியில் தவத்தினாலும் எது அடையமுடியாததோ அந்தப் புண்ணிய பலத்தை நாம ஸங்கீர்த்தனத்தாலயே அகத்திய முடியும் என்பது ஒன்று தான் கலியில் சிறந்த குணம்.
ஆகவே கலியில் அனைவரும் நல்ல நலன்கள் பெற பக்தி மார்க்கம் கூறப்பட்டிருக்கிறது. அது ஒன்பது விதம். அவையாவன:
- பகவன் நாமாவைக் கேட்பது
- பகவன் நாமாவைச் சொல்லுவது
- பகவானை எப்போதும் நினைப்பது
- திருவடிச் சேவை செய்வது
- அர்ச்சிப்பது
- வணங்குவது
- பகவானுக்கு அடிமையாவது
- பகவானுடன் தோழமை கொள்வது
- ஆத்மார்ப்பணம் செய்வது
என்று இவாறு வகுத்துக் கூறியிருக்கின்றனர் பெரியோர்.
இந்த ஒன்பது மார்க்கங்களில் நாமஸங்கீர்த்தனம் என்பது அனைவரும் கையாளக்கூடிய ஒரு சிறந்த சுலபமான வழியாகும். இதற்குப் பிறருடைய உதவி தேவையில்லை. இந்த நாமஸங்கீர்த்தனத்திற்கு தேசம் காலம் ஸ்னானம் ஆசாரம் இவை எல்லாம் கூட அவசியமில்லை என்று நாம ஸங்கீர்த்தனத்தைப் பெருமைப் படுத்தி பேசுகின்றன புராணங்கள். ஸந்த்யா வந்தனம், மந்த்ர ஜபம், வேள்வி, வேதாந்த ஞானம், வேதாத்யயனம், பூஜை இவற்றிற்குச் சொல்லப் பட்ட வர்ணாச்ரமிகளுக்கு உள்ள நியமம் ஏதும் இதில் இல்லை. ஆகவே சுலபமான வழி நாம ஸங்கீர்த்தனம். நாமக்களை உச்சரித்தாலேயே கலிதோஷம் அனைத்தும் நீங்கி விடும்.
இதை மனத்தில் வைத்துக் கொண்டு ஸ்ரீ ஸ்வாமிகள் குரோதன வருடம் மாசி மாதம் 24ம் நாள் சனிக்கிழமை (08.03.1986) மிகப் புண்யம் அளிக்கும் சிவராத்ரி தினத்தில் தொடங்கி மறு சிவராத்ரி, ஒரு வருட காலம் ‘ஓம் நம: சிவாய ஓம் நமோ நாராயணாய’ என்ற ஏழு கோடி மந்த்ரங்களில் மிகவும் உயர்ந்த பஞ்சாக்ஷரத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் சிறந்த பல பாகவதர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தினார்கள். நித்யமும், ஒரு வருடமும் அன்னதானம், பாகவதர்களுக்கு மனதிற்கு மகிழ்வு அளிக்கும் முறையில் நல்ல உபச்சாரம். இப்படியாக வருடம் பி=முழுவதும் ஸ்கந்தகிரியில் நாம ஸங்கீர்த்தனம் நடந்தது. வருட முடிவில் சிவராத்ரி அன்று அதை ஒட்டி முன்னும் பின்னுமாக 5 தினங்கள் ஸ்கந்தாஸ்ரமம் விழாக் கோலம் பூண்டு வைகுண்டமாகவும், கைலாஸமாகவுமே காட்சி அளித்தது. அப்படி ஒரு சிறப்பான அலங்காரங்கள். பல மின் ஒளி விளக்குகளின் மாயாஜாலங்கள். பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த பாகவதர்களின் கூட்டம். இது ஒரு மாபெரும் பாகவத மேளா. ஆண்களின் பரதநாட்டியம், வேஷம் தரித்து அதற்கேற்ப பண்ண, ஸகல விதமான வாத்தியங்களும் ஒலித்தன. இரவு பகல் வித்யாசம் தெரியவில்லை. எப்போதும் காதுகளையும் மனத்தையும் ஒருங்கே கவரும் ஒரு இன்னிசை. இப்படி ஒரு அகண்ட பஜனையைச் செய்தார் ஸ்வாமிகள். இதுவரை ஒரு வருட காலம் அகண்ட பஜனை செய்ததாகக் கேள்விப்பட்டதில்லை. ஸ்வாமிகள் செய்யும் அனைத்துக் கார்யங்களும் பிறரால் செயற்கரியனவே.
1988 முதல் திருப்பணிகள் செய்து, திறந்த வெளியில் ப்ரதிஷ்டை செய்திருந்த பஞ்சமுக ஆஞ்சநேயர், தத்தாத்ரேயர், பஞ்சமுக கணபதி முதலான மூர்த்திகளுக்கு கொடைவள்ளல்கள் ஒன்று கூடி கொடை போட்டுக் கொடுத்து 1990ல் குடமுழுக்கு விழா நடத்தினார் நம் ஸ்வாமிகள் அவர்கள்.
ஸ்கந்தாஸ்ரமம் நமது சொந்த ஆஸ்ரமம். அது பக்தி செய்யும் பக்தர்களுக்குச் சொந்த ஆஸ்ரமம். இங்கு தனிப்பட்ட நபர் என்று பெயர் நக்ஷத்ரம் சொல்லி அர்ச்சனைகள் செய்வதில்லை. நாம் அனைவரும் அஸ்வினி முதல் ரேவதி வரை நக்ஷத்ரங்களிலும், 12 ராசிகளிலும் தான் மாட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறோம். ஆகையினால் 27 நக்ஷத்ரங்களையும், 12 ராசிகளையும் சொல்லித் தினசரி காலையில் கோபூஜை, கணபதி ஹோமம் மஹாந்யாஸ ஜபத்துடன், சதுருத்ரிய ஜபமும் செய்து முருகனுக்கு ஞானஸ்கந்தகுருநாதனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யும் காரணத்தினால், உலகத்தில் யாரும் தனிப்பட்ட நபர் கிடையாது. உலகமே பகவானின் அவதாரம். ஆனாலும் 27 நக்ஷத்ரங்கள், 12 ராசியில் தான் அவதாரம் ஆகிறார்கள் என்று சாஸ்திரங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இதையே நம் ஸ்வாமிகளின் அருளாணைப்படி செய்து வருகிக்கின்றார்கள். செய்வன திருந்த செய்வதற்காகவே தினசரி சரிவர பூஜைகள் செய்வதற்காக இங்குள்ள பூஜகர்களை வசதி வாய்ப்புடன் வைத்து நம் ஸ்வாமிகள் போஷித்து வருகிறார்கள். ஸ்கந்தாஸ்ரமம் பக்தர்களுக்குச் சொந்த ஆஸ்ரமம். தரிசன நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை. பக்தர்கள் நேரத்தை அனுசரித்து வந்து குருவருளையும், திருவருளையும் பெற்றுய்ய வேண்டுகிறோம்.
சேந்தமங்கலம்
28.04.1985ல் சேந்தமங்கலத்தில் ஸ்ரீஇடும்பன், ஸ்ரீமேதாதக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ வனதுர்கை, ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீபஞ்சமுக ஹேரம்ப கணபதி, ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ சனைச்சர பகவான், ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமி தெய்வங்களை ப்ரதிஷ்டை செய்துள்ளார்.
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்
தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் தாம்பரத்திலுள்ள மஹாலக்ஷ்மி நகரில் (ராஜ கீழ்ப்பாக்கம்) சென்னை மாநகர மக்களின் துயர் துடைக்க எண்ணி ஒரு ப்ரம்மாண்டமான ஆஸ்ரமம் அமைக்க நம் ஸத்குரு தீர்மானித்தார். அதன் விளைவாக சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் மிகப் ப்ரம்மாண்டமான உருவில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரி, ஸ்ரீமத் ஸ்வாமிநாத ஸ்வாமி, ஸ்ரீ வீர சரபேஸ்வரர், ஸ்ரீ உக்ர ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ சூலினி துர்கா, ஸ்ரீ தாத்தாத்ரேயர் ஆகிய விக்ரகங்களை ப்ரதிஷ்டை செய்து 24.06.1999 ஆம் ஆண்டு ஸ்ரீ மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெறச் செய்தார். அன்று முதல் தொடங்கி கோடி கோடி ஹோம இலக்காக செய்ய எண்ணி தினந்தோறும் ஸ்ரீ சரபேஸ்வர சூலினி ப்ரத்யங்கிரா ஹோமத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் என்று வரை அந்த ஹோமம் நடைபெற்று வருகிறது. ஞாயிறு தோறும் மாலை மாலை வேளையில் மக்கள் பெருவெள்ளம் அலை மோத ஸ்ரீ வீர சரபேஸ்வரருக்கு ப்ரதோஷ வேளையில் ஹோமமும் அபிஷேகமும் இன்று வரை நடை பெற்றுக் கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்து ஆஸ்திக பெருமக்கள் துயர் துடைத்து வருகிறது.
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்திரமத்தில் சமீபத்தில் உலக அமைதிக்காக 110 நாள் தொடர் ஸ்ரீ மஹாஸுதர்சன ஹோமம் 12.12.2001 முதல் 31.03.2002 வரை நடை பெற்று, 01.04.2002 அன்று நிறைவு விழாவில் ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் 82வது வர்தந்தி, மற்றும் ஸ்வாமிகளின் 60 ஆண்டு தொடர் ஆன்மீக தர்மப் பனியைப் போற்றியும் , கோவை பரமஹம்ஸ ஸ்ரீ தயானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள், “அவதூத சந்நியாசிகள் சித்தபுருஷர்கள்” என்று நம் ஸ்வாமிகளைக் குறிப்பிட்டார். அவர் வாக்கின்படி நம் ஸ்வாமிகள் ஞானச் சித்தர் மட்டுமல்ல. அவரை “சாதனை சித்தர் சாந்தானந்த மஹான்” என்றே சொல்ல வேண்டும். ரிஷிகளை நாம் தற்காலம் நேரில் கண்டதில்லை. அவரே வேதரிஷி. “வேள்வித்திலக முனி, வேள்வி அரசர்” என்று திருவாட்டி சௌந்தரா கைலாஸம் அம்மையார் சொன்னதும் மிகப் பொருந்தும்.
சிறியன சிந்தியாத சீரிய உள்ளம். சிந்தனையெல்லாம் சாதாரணமானதல்ல. அகண்டு, விரிந்த, பரந்த, உயர்ந்த, நெடிய, உயர்நோக்கு. மந்த்ர சாஸ்த்ரங்களை ஆழ்ந்து ஆய்ந்தறிந்து அதற்கேற்ப தெய்வங்களின் விஸ்வமோஹன ஸ்வரூபத்தைக் கண்டு, ஒவ்வொரு விக்ரகத்தையும் ப்ரம்மாண்டமான அளவில் வடிவமைக்க வழிவகுத்து ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தியவர். அதே போன்று ஹோமங்கள் நடத்துவதிலும் ஒரு சிறந்த நிறைந்த பேராற்றல். சாதாரணமாக யாரும், கண்டும் கேட்டுமறியாத உயர்ந்த அதிசக்திவாய்ந்த மஹா மந்த்ரங்களை ஸம்புடிதம் செய்து ஹோமங்களை ஒரு நாளா… இரு நாளா… 108 நாட்கள் என்றும், ஸ்ரீ சரபசூலினி ப்ரத்யங்கிரா நித்ய ஹோமத்தை “கோடி”என்ற இலக்குடன் செய்து வருவதென்பது அசாத்தியமான சாதனையாகும்.
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்கள்:
ஸ்ரீ மாதா புவனேஸ்வரி:
ப்ரம்மாண்ட உருவில் அழகான காந்த சக்தியுடனும், சாந்த முகத்துடனும், இகலோக வாழ்க்கைக்குத் தேவையான சுகபோகங்களை வாரி வழங்கும் தேவியாகவும், பக்தர்களை காந்தம் போல் ஈர்க்கும் ஞானசக்தியே வடிவான புவனேஸ்வரி, பக்தர்களுக்கு விரும்பிய வரம் தரும் ஹ்ரீங்கார ஸ்வரூபிணியானவள்.
ஸ்ரீ சரபேஸ்வரர்: (பஞ்சலோக-ஐம்பொன் விக்ரகம் உயரம் 12 அடி எடை 4 டன்)
தினந்தோறும் ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரபர் சூலினி ப்ரத்யங்கிரா ஹோமம் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், ஞாயிற்றுக் கிழமை ராஹுகாலத்தில் அதிகப் படியாக சிறப்பு ஹோமம் 4:30 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெற்று கடதீர்த்தமுடன் ஸ்ரீ சரபருக்கு குறைந்த பட்சம் 50லிட்டர் பாலாபிஷேகமும் செய்யப்பட்டு வருகிறது. ஆறு வாரங்கள் தொடர்ந்து வந்து இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்பருக்கு குறைகள் நீங்கும், பிரச்சினைகள் தீரும், கோரிக்கைகள் நிறைவேறும். இந்த ஞாயிற்றுக்கிழமை ராஹுகாலத்தில் ராஹு பகவான் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட்டால் நம் ஜாதகத்தில் ராஹு தோஷம் நிவர்த்தியாகும்.
ஸ்ரீ உக்ர ப்ரத்யங்கிரா தேவி: (பஞ்ச லோகம் ஐம்பொன் விக்ரஹம், 13 அடி உயரம், 4 டன் எடை)
அதர்வண மஹா பத்ரகாளி, ஸ்ரீ உக்ர ப்ரத்யங்கிரா தேவி, அங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் என்ற இரு முனிவர்கள் தவம் செய்து “க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே காராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே க்ஷம்” என்ற மூலமந்த்ரத்தை தேவியிடமிருந்து பெற்றதால் ப்ரத்யங்கிரா என்று பெயர் பெற்றார். வடமொழி எழுத்துக்களில் கடைசியில் அமையும் எழுத்துக்களில் ஒன்றான “க்ஷம்” என்பதில் தொடங்கி “க்ஷம்” என்பதில் முடியும் 20 அக்ஷரங்கள் கொண்ட இது க்ரியா சக்தி வடிவானவள் “க்ஷம்” என்பதை சிந்தாமணி பீஜம் என்று சொல்வர். கலியுகத்தில் மேற்கண்ட மந்த்ரத்தை ஜபித்து ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியை வழிபட்டால் நினைத்தது கைகூடும்.
ஸ்ரீ சுவாமி நாத ஸ்வாமி:
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் என்ற பெயருக்குடைய மூலப்ரதான தெய்வம் ஸ்கந்தகுருநாதன். ஸ்ரீ ஸ்வாமிகள் பூர்வாஸ்ரம திருநாமம் ஸுப்ரமண்யம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீ சூலினி:
சரபத்தின் இரு இறக்கைகளில் ஒன்று ப்ரத்யங்கிரா காளி அம்சம் மற்றொன்று சூலினி துர்கை அம்சம். ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஸந்நிதியில் பீடத்துக்கு கீழே சிங்க வாஹனத்தில் எழுந்தருளியுள்ளாள். துர்கை சூலினியை நினைத்தாலே துக்கம், பயம், பிணி விலகும்.
ஸ்ரீ சக்ர பூர்ண மஹாமேரு:
பஞ்சலோஹம் ஐம்பொன் விக்ரஹம் 4.5 அடி உயரம். ஸ்ரீ வித்யா முறைப்படியும் ஸ்ரீ வித்யா தத்துவப்படியும் சிவனுடைய நான்கு கோணங்களும், சக்தியின் ஐந்து கோணங்களும் ஆக ஒன்பது கோணங்களாகிய நவாவரணம் கொண்ட மேரு என்பது, முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கு வாஸம் செய்து அம்பிகையை வழிபடுகின்றார்கள்.
ஸ்ரீ தத்தாத்ரேயர்:
9 ஆதி உயரம் சிவன் ப்ரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் அத்ரி மஹரிஷியின் மனைவியின் பதிவ்ரதா தன்மையை உலகுக்கு எடுத்து காட்ட வந்த இடத்தில், அவர்களைத் தன் பதிவ்ரதா சக்தியினால் குழந்தையாக்கினாள். அது சமயம் அத்ரி முனிவர் அங்கு வந்து விஷயம் அறிந்து மூன்று குழந்தைகளையும் ஒருங்கிணைத்து அனுசூயை கையில் கொடுக்கும் பொழுது, மூன்று தலைகளும் ஓருடலும் கொண்ட குழந்தையாயிற்று. தத்தாத்ரேயர் – அத்ரிக்கு கொடுக்கப்பட்டவர் என்று ஒரு அர்த்தம். பிறவி ஞானியாக அவதூதரராக (ஆடையில்லாமல்) வளர்ந்து பரப்ரம்ம ஞானியாகி விடுகிறார். அவர் போதித்த அவதூத கீதை மிகச் சிறப்பு வாய்ந்தது.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்:
18 அடி உயரம், பஞ்சலோக ஐம்பொன் விக்ரகம் – ஒருபுறம் ஸ்ரீ ஸுதர்ஷன சக்ரமும், மாரு புறம் ஸ்ரீ லக்ஷ்ம நரசிம்மரும் கொண்டது
ஸ்ரீ பஞ்சமுக ஹேரம்ப கணபதி: 9 ஆதி உயரம்.
வெள்ளை நிறத்தில் ஐந்து யானை முகங்களும் மனித உடலும் கொண்டவர் கணபதி. ஜேஷ்டராஜன் ஆனஸ்ருண்வன்: பக்தர்களின் குறைகளைக் காது கொடுத்து பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டு அருள் பாலிக்கக் கூடியவர். அநாயகைக நாயகன் என்றால் தலைவன், வேறு தலைவன் யாருமில்லாத ஒரே தலைவன். உலகின் மூத்த தெய்வக்குழந்தை. முழு முதற் கடவுள். முருகன் சிவனது அம்சமென்றால், கணபதி பார்வதியின் அம்சம். பூமியிலிருந்து உண்டானதாக சொல்லப் படுவதால் “பௌமன்” என்று பெயர் பெற்றவன். அதனால் தான் விநாயக சதுர்த்தி அன்று களி மண்ணால் செய்த விநாயகரை வணங்குகிறோம். பூமியிலிருந்து உண்டானதற்கு சான்றாக, ச்ருங்கேரியில் ரத்னகர்ப கணபதி ஸந்நிதி உள்ளது.
ஸ்ரீ தர்ம ஸாஸ்தா:
கலியுகவரதனாய் விளங்கும் சபரிமலை ஐயப்பன் – 6 அடி உயரம், பஞ்சலோக விக்ரஹம்
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்: 9அடி உயரம்
ஸ்ரீ அஷ்டாதசபூஜ மஹாலக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி: 8 ஆதி உயர விக்ரஹம்
ஸ்ரீ சனைச்சர பகவான்: 6 அடி உயரம் உள்ள சிலை
ஸ்ரீ சஹஸ்ர லிங்கம் : ஆயிரம் முகங்கள் கொண்ட அற்புத சிவலிங்கம் 13 அடி உயரம். நந்தி 6 அடி உயரம்.
நம் ஸத்குரசாந்தானந்த ஸ்வாமிகள் பேரருளால் விளைந்த நற்பயன்களையும் நல்லாசிகளையும் அறுதியிட்டுக் கூறவேண்டுமானால் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் அது மிகையாகாது. சுருங்கக் கூறின் ஸத்குரு சாந்தானந்தர் ஒரு அவதூத ஆன்மீக சிகரம். அவர் விதேஹ முக்தி அடைந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய எல்லோருக்கும் அவர் இன்றும் நம்மிடையே இருப்பதாக தான் தோன்றுகிறது. அவரது அருளும் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.
ஜெய் ஜெய் ஸத்குரோ!!
ஜெய் ஜெய் ஸ்கந்த குரோ!!
ஜெய் ஜெய் ஸ்கந்த மாதா!!
ஜெய் ஜெய் புவனேஸ்வரி!!