ஸ்ரீ வீர சரப மந்த்ரோபதேச கவசம்

ஸ்ரீ வீர சரப மந்த்ரோபதேச கவசம்

ஸ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ப்ரம்மேந்திர ஸரஸ்வத் அவதூத ஸ்வாமிகள் அருளியது
ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் ஸ்ரீ கணேசாய நம:

ஓங்கார கணபதியே ஓம் முருகா ஷங்கரநாராயணா லக்ஷ்மிநாராயணா அர்த்தநாரீஸ்வரா வீர சரபேஸ்வர கவசம் வேண்டுகிறேன்
அழிவற்ற பரப்ரம்ம ஸ்வரூபமான சேந்தமங்கலம் ஸ்வயம்ப்ரகாச அவதூத மஹா புருஷா வீர சரப கவசம் உபதேசிப்பாய்
அதர்வண பத்ரகாளியுடன் ஷூலினி துர்கயோடிருந்து வரும் சிவ பரம்பொருளின் கவசத்தை அனுக்ரஹிப்பாய்
உலக மக்களுக்குள் உள்ளன்பாய் நல்லறிவாய் ஆன்மாவாய் இருந்து வரும் வீர சரபேஸ்வர கவசம் வேண்டுகிறேன்

முப்பத்து முக்கோடி மஹா மந்திரங்களின் வித்தான வீர சரப மஹா மந்திரம் உபதேசிப்பாய்
மகனே அழிவற்ற சிவ பரம் பொருளென போற்றும் சிவ பரம்பொருளே வீர சரபேஸ்வரனாவான்
நால் வேதம் போற்றிப் புகழும் நாம ரூபமற்ற பரப்ரம்மமே வீர சரபேஸ்வரனாவான்
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களை ரக்ஷிக்க பரமேஸ்வரனே வீர சரபாவதாரம் எடுத்துள்ளான்
தேவாதி தேவர்களின் இன்னல்களை மிகக்கொடிய துயரத்தை துடைத்தெறிய சிவபெருமான் வீர சரபாவதாரம் எடுத்துள்ளான்
ஷ்ருதியின் சாரமே ஸ்வயம் ப்ரகாச யோகியே ஸத்குருநாதா வீர சரபமாய் முன் வருவாய்

கருதும் மெய் அடியார்களை காத்து ரக்ஷிக்க பரசிவ மயமான பரம்பொருளே வீர சரபமாய் ஓடோடி வந்திடுவாய்
ப்ரணவ ஸ்வரூபனே ப்ரம்ம ஞானிகளின் குல தெய்வமே வீர சரபேஸ்வரா மக்களைக் காத்திட சீக்கிரம் வந்திடுவாய்
அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாமாய் இருந்து வரும் ஜோதிப் பிழம்பான வீர சரபேஸ்வரா தீமைகளை அழித்திட விரைவாய் வருவாய்
மண்ணாய் வானாய் கனலாய் நீராய் காற்றாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா உலகை ரக்ஷிக்க அரைநொடிக்குள் வருவாய்
தேவாதி தேவர்களின் அச்சமகற்றிய அருட்பெரும் ஜோதி ஸ்வரூபமே வீர சரபேஸ்வராபாரத மக்களின் அச்சத்தை போக்கிட பறந்தோடி வந்து ரக்ஷிப்பாய்

சரணமடைந்தவர்களின் இன்னல்களைப் போக்கிடும் வீர சரபேஸ்வரா சரணமடைந்திட்டேன் காத்திடுவாய்
முக்திக்கு வித்தான முழு முதற் கடவுளே வீர சரபேஸ்வரா இவனை மாமனிதனாக்கிடுவாய்
எங்கும் எல்லாமாய் இருந்து வரும் ஈஸா வீர சரபேஸ்வரா அச்சம் அகற்றிடுவாய்
ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்று உள்ளன்புடன் ஏத்துவையேல் அறியாமை ஒழிந்துவிடும்

நான்கு மஹாவாக்ய சாரமெலாம் தனக்குள்ளிருக்கும் நான் தான் என்று உணர்த்தும் வீர சரபேஸ்வரா நீயே நான் நானே நீ என்றுணர்த்திடுவாய்
அகத்துள் செந்தூர் ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்று நெக்குருக ஜபம் செய்தால் உண்மையான விடுதலை கிட்டி விடும்
நாத்தழும்பேற ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்று ஜபம் செய்தால் இவனைப் பற்றியுள்ள இருவினையும் மும்மலமும் எரிந்து சாம்பலாகும்
உனது அன்பாய் அறிவாய் ஆன்மாவாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரனை உணர நான் யார் என உனக்குள் சென்று கேட்டிடுவாய்

சரணமடைந்தவுடன் வீர சரபேஸ்வரன் மிகக் கொடிய ஸங்கல்பத்தை ஒழித்திடுவான்
நான்மறைக்குள் இருந்து வரும் நான்கு மஹாவாக்ய சாரமே வீர சரபேஸ்வரனாவான்
அழிவற்ற பரசிவமே பரஞ்ஜோதி ஸ்வரூபமே வீர சரபேஸ்வரனாவான் நம்பிடுவாய்
நித்தம் ஆடும் சிவ சிதம்பர நடராஜா சிவா பரம்பொருளே பரசிவமே வீர சரபேஸ்வரனாவான்

ஹிரண்யனை சம்ஹரித்து சினத்துடன் விஸ்வரூபமெடுத்துள்ள ந்ருஸிம்ஹ ஸ்வாமியின் கோபத்தைத் தணித்து தேவர்களை ரக்ஷித்த வீர சரபேஸ்வரன் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திளுள் இருப்பதைக் காண கண் கோடி வேண்டும்
ஈரேழுலகை நடுநடுங்கச் செய்த உக்ர ந்ருஸிம்ஹ ஸ்வாமியை விழுங்கி தன்னுடன் இரண்டறக் கலந்து கொண்டு தான்தானாய் இருந்து வருபவன் வீர சரபேஸ்வரனாவான்
ஹரியும் சிவனும் ஒன்றென்பதை உலகிற்கு உணர்த்தவே பரசிவமான பரமேஸ்வரன் வீர சரபாவதாரம் எடுத்துள்ளான்
அழிவற்ற பரப்ரம்மமே ஹரியும் சிவனுமாவார்கள் நம்பிடுவாய் மறந்திடாதே

நாராயணனும் சிவபெருமானும் ஒரு நாணயத்தின் இருபுறம் போன்றவராவார்கள் நம்பிடுவாய்
சிவபெருமானின் உயிராய் நாராயணனும் நாராயணனின் உயிராய் சிவபெருமானும் இருக்கிறார்கள் நம்பிடுவாய்
நாராயணனே சிவபெருமானாகவும் சிவபெருமான் நாராயணனுமாக இருப்பதை மறந்திடாதே
உலக நாடக மேடையில் நாராயணன் ந்ருஸிம்ஹணாகவும் சிவபெருமான் சரபேஸ்வரனாகவும் நாடகாமாடுகிறார்கள் நம்பிடுவாய்

பாரினைப் படைத்த பரம்பொருளான அழிவற்ற சிவமே பாரினைக் காத்து ரக்ஷிக்க நாராயணனாக வந்து விட்டான்
உலகில் இருந்து வரும் அரக்க குணமுடைய அதமர்களை உருக்கி வார்த்திட ஜகத்ஜோதிர் மயமாய் சிவபெருமான் சார்பாவதாரம் எடுத்துள்ளான்
நான் யார் எனக் கேட்டுணர்பவனே ஹரிஹரனின் நிஜ ஸ்வரூபம் நான் தான் என்றுணர்வான் மறந்திடாதே
அழிவற்ற நாராயணனே மக்களின் பகுத்தறிவாகவும் அழிவற்ற சிவபரம்பொருளே அனைவருள்ளத்திலும் ஆத்மாவாய் இருக்கின்றான் நம்பிடுவாய்

நான்கு மஹாவாக்ய சாரம் நான் தான் என்றுணர நான் யார் எனக்கேட்டிடுவாய்
ஸ்வயம்பு மயமாய் ஹரிஹரன் ஸ்வயம்புவாக ஜோதிர்மயமாய் அனைவருள்ளும் நான் நான் என்றிருக்கின்றான் நம்பிடுவாய்
ஈரேழுலகில் இருந்து வரும் முப்பது முக்கோடி தேவர்களை ரக்ஷிக்க அவதரித்த வீர சரபேஸ்வரனே நாராயணனாவான்
இவ்வுலகில் அரக்க குணமுடையவர்களை உருக்கி உத்தமனாக வார்த்திட வீர சரபேஸ்வரா பரஞ்ஜோதி வந்திடுவாய்

இருவினையையும் மும்மலத்தையும் எரித்து சாம்பலாக்கிட சரப மஹாமந்த்ரத்தை அகத்துள் ஜபித்திடுவாய்
வீர சரப மஹாமந்த்ரத்தின் மஹிமையை எழுத்தாலோ சொல்லாலோ வர்ணிக்க முடியாதப்பா
மகனே ஓம் கேம் காம் கம் பட் ப்ராணக் க்ராஹாஸி ப்ராணக் க்ராஹாஸி ஹும் பட் ஸர்வ ஷத்ரு சம்ஹரணாய சரப சாலுவாய பக்ஷிராஜாய ஹும் பட் ஸ்வாஹா எனப் போற்றும் சரபேஸ்வரனின் மூல மந்த்ரம் உபதேஸித்தோம்
எண்ணிய யாவையும் ஈடேற்றி வைக்கும் ஈஸா ஸர்வேஷா சரபேசா இவனகத்தை உனது கோவிலாக்கிக் கொண்டிடுவாய்

பாரத புண்ய பூமியை காத்திட சிவபரம்பொருளான சரபேசா இவனிதயத்துள் இருந்திடுவாய்
தமிழக மக்கள் புகழுடன் வாழ்ந்திட சரபேசா தமிழகத்தின் தலைநகருள் வந்திடுவாய்
உலக மக்களின் உயிரை வதைக்கும் அரக்க குணமுடைய பாவிகளை ஒழித்திட
ஓடோடி வந்திடுவாய்
பாரத மக்களின் துக்கத்தை துடைத்திட சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் சரபேசா வந்திடுவாய்

இவ்வுலகைக் காத்திட எங்கும் நிறைந்துள்ள ஈஸா சரபேசா அதர்வண பத்ரகாளியுடன் வந்திடுவாய்
என் தாயும் தந்தையுமான சரபேசா அதர்வண பத்ரகாளியெனப் போற்றும் உக்ரப்ரத்யங்கிரா தேவியுடன் வந்திடுவாய்
சரணமடைந்திட்ட அடியார்களைக் காத்து ரக்ஷித்திட சூலினி துர்கையுடன் வந்திடுவாய்
நெஞ்சில் வீர சரபேஸ்வரனை நினைத்திருப்பையேல் மஹாபயம் அனைத்தும் நீங்கி பரஞ்ஜோதி மயமாகிடுவாய்

சீருடன் சிறப்போடு வாழ்ந்திட நீயும் சிவபரம்பொருளான சரபேஸ்வரனைப் பற்றிடுவாய்
ஸர்வஷத்ரு ஸம்ஹாரகனான வீர சரபன் ஸர்வ துஷ்ட க்ரஹங்களை ஒழித்துவிடும்
ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்று நாத்தழும்பேற ஜபம் செய்தால்
ஆயுள் ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யத்தைக் கொடுத்திடுவாய்

ஸர்வமங்கள ஸ்வரூபமான பரமேஸ்வரன் அடியார்களை ரக்ஷிக்க வீர சரபேஸ்வரன் அவதாரம் எடுத்துள்ளான்
யக்ஷ, கந்தர்வ, ப்ரம்ம ராக்ஷஸ, பூத, ப்ரேத, பைசாச, பில்லி சூன்யத்தை ஒழித்திட ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வரய நம: எண்றேற்றிடுவாய்
அழிவற்ற பரப்பிரம்மமே பரசிவமெனப் போற்றும் பரஞ்ஜோதிக் கடவுளான வீர சரபேஸ்வரன் ஆவான் நம்பிடுவாய்
அழிவற்ற பரப்ரம்மமே ஈரேழுலகை ரக்ஷிக்க நாம ரூபத்துடன் சிவ விஷ்ணு உருவத்துடன் செய்துள்ளான்

ஸ்ரீ சரப ருத்ரனின் மஹாமந்த்ரம் மந்த்ரராஜமென்று வேத மந்த்ரம் கூறுதப்பா
நோய் நொடியுடன் பிறவிப்பிணி நீக்கும் மந்த்ரம் சரப மஹாமந்த்ரமாகும்
தீராத இடர்களைத் துடைத்து ஆயுள் ஆரோக்யத்தை சரப மஹாமந்த்ரம் தந்து விடும்
மிகக் கொடிய மஹாபயத்தோடு ஸர்வஷத்ருவையும் நாசம் செய்யும் மஹாமந்த்ரம் சரபமஹாமந்த்ரமாகும்

பகைவர்களைப் பொசுக்கி அன்பையும் பணிவையும் தருபவன் வீர சரபேஸ்வரனாவான்
ஞான சித்தியைத் தந்து முத்தியளிக்கும் சரபேஸ்வரன் பரம்பொருளான பரமேஸ்வரனாவான்
அகப்புறப் பகைமையை அழித்து அழிவற்ற சுகத்தைத் தருபவன் வீர சரபேஸ்வரனாவான்
ஒன்பது க்ரஹங்கள் படுத்தும் பாட்டை பட்டென ஒழிப்பவன் வீர சரபேஸ்வரனாவான்

அகவேதனையுடன் புறவேதனையைத் தீர்த்து வேண்டியதருளுபவன் வீர சரபேஸ்வரனாவான்
சீரும் சிறப்பும் செழித்திட நீயும் வீர சரபத்தை சிக்கெனப் பற்றிவிடு மறந்திடாதே
ருணபயம் தீர்த்து வஞ்சகமகற்றி வறுமையை ஒழித்துக் காட்டுபவன் வீர சரபேஸ்வரனாவான்
பாரினைக் கெடுக்கும் அரக்க குணமுடைய வஞ்சகரை ஒழித்து நல்லவர்களை வாழ வைப்பவன் வீர சரபேஸ்வரனாவான்

எண்ணியதெல்லாம் எளிதாய் முடித்திட எல்லாம் வல்ல ஈஸா சரபேஸ்வரனாய் இவன் முன் வந்திடுவாய்
அழிவற்ற சத்ய ஆனந்த மயமான சரபேஸ்வரா இவன் முன் வந்திடுவாய்
கருதும் அடியார்கள் கருதியதை முடித்தருளும் சச்சிதானந்த மயமான சரபேசா இவன் முன் வந்திடுவாய்
சிவ சிதம்பரேசா சரபேசா சர்வேசா இவன் முன் வந்திடுவாய்

முக்திக்கு வித்தான ஆதி அந்தமற்ற நாம ரூபமற்ற சரபேஸ்வரா இவன் சிரஸினை ரக்ஷிப்பாய்
தத்துவத்தின் சாரமான சதாசிவா சரபேஸ்வரா இவன் முகத்தினை ரக்ஷிப்பாய்
பரப்ரம்ம மயமான பரஞ்ஜோதிக் கடவுளே சரபேஸ்வரா இவன் நெற்றியை ரக்ஷிப்பாய்
ஞானந்தமயமாய் இருந்து வரும் ஸ்ரீ ருத்ரனான சரபேஸ்வரா இவன் புருவத்தை ரக்ஷிப்பாய்

அருட்பெருஞ்ஜோதி ஸ்வரூபா சரபேஸ்வரா இவன் கண்களுடன் காதுகளை ரக்ஷிப்பாய்
அருள் மயமான சிவபரம்பொருளே சரபேஸ்வரா மூக்கினையும், பற்களோடு, நாக்கினையும் ரக்ஷிப்பாய்
ஆதிஅந்தமற்ற ஸ்வயம்ப்ரகாச ஸத்குரோ சரபேஸ்வரா இவன் கன்னத்தையும் கழுத்தினையும் ரக்ஷிப்பாய்
ஆதிஅநாதியுமான பரம்பொருளே சரபேஸ்வரா இவன் தோளினையும் மார்பினையும் ரக்ஷிப்பாய்

ஈரேழுலகினில் இருப்பதனைத்துமாய் இருந்து வரும் சரபேஸ்வரா இவன் இதயத்துள் இருந்து ரக்ஷிப்பாய்
அசையும் அசையாப் பொருளாய் இருந்து வரும் சரபேஸ்வரா இவன் ஆத்மாவாய் இருந்து ரக்ஷிப்பாய்
ஈரேழுலகில் இருந்து வரும் உயிர்களின் உயிர்க்குயிராய் இருந்து வரும் சரபேஸ்வரா இவன் வயிற்றினையும் முதுகினையும் ரக்ஷிப்பாய்
தேடும் அடியார்களுக்குள் சிதாகாசமயமாய் இருந்து வரும் சரபேஸ்வரா இவன் இடுப்பினையும், குதம், குறியினையும் ரக்ஷிப்பாய்

துன்பமனைத்தினையும் அறவே துடைத்தெறியும் சரபேஸ்வரா இவன் துடைகளையும் கால்களையும் ரக்ஷிப்பாய்
அதர்வண பத்ரகாளியையும், ஆனைமுகனையும், ஆறுமுகனையும் ஈன்றெடுத்த சரபேஸ்வரா இவன் கை கால் விரல்களுடன் நகங்களையும் ரக்ஷிப்பாய்
ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்றவுடன் இவன் உயிரைக் காத்து ரக்ஷிப்பாய்

ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்று நினைத்தவுடன் இவ னை திக்குகள் தோறும் நின்று ரக்ஷிப்பாய்
கண்ணை இமை காப்பது போல் சரபேஸ்வரா இவனுள் இருக்கும் அன்பினைக் காத்து ரக்ஷிப்பாய்
அலால விஷம் உண்ட பரமேஸ்வரனே சரபேஸ்வரா இவன் அறிவினைக் காத்து ரக்ஷிப்பாய்
அருவமாய் உருவமாய் இருந்து வரும் சரபேஸ்வரா இவன் ஆத்மாவாய் நீ இருப்பாய்

ஹரியும் சிவனும் ஒன்றென்று உணர்பவருள் சரபேஸ்வரா அத்வைத மயமாய் இருப்பாய்
தொற்றுநோய்களுடன் பற்றித் தொடர்ந்து வரும் பிறவிப் பிணியினையும் பொசுக்கி இவனைப் பரஞ்ஜோதி மயமாக்கிடுவாய் சரபேஸ்வரா
சாதி குலம் கோத்திரத்தின் பெயர் சொல்லி சமயோசிதம் போல் பேசும் அரக்க குணமுடையவர்களை உருக்கி வார்த்து ரக்ஷிப்பாய்
நீ வேறு நான் வேறு என்றுபதேசிக்கும் தேசத்ரோகிகளை உருக்கி உத்தமனாக வார்த்திடுவாய்

மதத்தின் பெயர் சொல்லி மதம் பிடித்து அலையும் மஹாபாவிகளை உருக்கி மாமனிதன் ஆக்கிடுவாய்

உலக மக்களின் குறை போக்கி மனநிறைவு காண வேண்டுமென்று சரபேஸ்வரா நிமிஷம் தவறாமல் பூஜித்தேன் ரக்ஷிப்பாய்
நிதானித்து சிந்தித்து உலகிற்கு நலம் தரும் மெய்ப்பொருளை சிந்திந்துரைக்கும் மஹான்களின் உபதேசங்களை சரபேஸ்வரா ரக்ஷிப்பாய்
சுயநலத்துடன் பணம் பதவி புகழுக்காக நாட்டின் மக்களைக் கெடுக்கும் தீயவர்களின் தீய எண்ணங்களை சரபேஸ்வரா சிதைத்திடுவாய்
தனது சுயநலம் பூர்த்தியாவதற்கு பேராசையுடன் பொய் பொறாமையுள்ள அரக்க குணம் உடையவர்களை சரபேஸ்வரா தொலைத்திடுவாய்

மக்களின் மகத்தான நலனை மறந்து நேர்மையற்ற வழியில் செல்லும் மிகக் கொடிய பாவிகளை சரபேஸ்வரா மன்னித்து ரக்ஷிப்பாய்
ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்று நினைத்தவுடன் மனமாற்றத்தை உண்டாக்கி வைக்கும் சரபேஸ்வரா மனக்குறையைப் போக்கி ரக்ஷிப்பாய்
மித்யையான வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரக்க குணமுடைய அதமர்களை சரபேஸ்வரா உத்தமனாகிடுவாய்
அணுவளவும் ஆத்மானுபூதியற்ற அதமர்கள் தான் வாழ்வதற்கு பொய் சொல்லி தான் ஒரு பண்டிதன் என்றும் சித்தன் என்றும் பறைசாற்றி பிறரை ஏமாற்றும் அதமர்களை சரபேஸ்வரா மன்னித்து ரக்ஷிப்பாய்

உண்மையாக உளமுருக நினைத்தவுடன் மனமாற்றத்தை உண்டாக்கி வைக்கும் பரம்பொருள் எனப் போற்றும் பரமேஸ்வரனான சரபேஸ்வரா காமக் க்ரோதத்தையும் மோகத்தையும் துடைத்திடுவாய்
உலகில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கடுகளவுமற்றவர்களை ஸ்ருஷ்டித்த சரபேஸ்வரா எல்லோரையும் காத்து ரக்ஷிப்பாய்
நற்பணியினால் நாட்டு மக்கள் நலமடையப் போவதில்லை என்று உபதேசிக்கும் அதமர்களையும் சரபேஸ்வரா அவர்களுடைய நல்லறிவாய் இருந்து ரக்ஷிப்பாய்
நாணயமற்றவர்களின் தேசசேவையினால் நாட்டைக் கெடுக்கும் மஹாபாவிகளையும் சரபேஸ்வரா காத்து ரக்ஷிப்பாய்

தமது சுயநலம் பூர்த்தியாவதற்கு பிறரைக் குறை கூறி போராடும் பேய்க்குணமுள்ள பித்தர்களையும் சரபேஸ்வரா காத்திடுவாய்
ஆசைகளை காட்டாற்றைப் போல் மக்களின் மனத்துள் ஓடவைக்கும் மாயஜால வித்தைகளை காட்டி வ்ரும் பாவிகளை சரபேஸ்வரா மன்னித்து ரக்ஷிப்பாய்
தமது பேச்சின் திறமைகளால் ஆசையெனும் விஷ ஆற்றில் மக்களைத் தள்ளி மடிய வைக்கும் பாவிகளான துரோகிகளையும் சரபேஸ்வரா காத்து ரக்ஷிப்பாய்
சிந்தித்து செயல்படத் தெரியாத திமிர் பிடித்த மக்களின் பேச்சினால் அழிவுப் பாதையில் செல்பவர்களை சரபேஸ்வரா காத்து ரக்ஷிப்பாய்

முற்றிலும் தேசபக்தியற்ற தேசத்ரோகிகளின் மனத்தை மாற்றி அவர்களையும் சரபேஸ்வரா ரக்ஷிப்பாய்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நாணயம், தன்னம்பிக்கையற்ற மூடர்களையும் சரபேஸ்வரா காத்து ரக்ஷிப்பாய்
சில்லரை ஆசை உள்ளவர்கள் சில்விஷமம் செய்து நமது நாட்டை கெடுக்கும் மிகக் கொடிய பாவிகளையும் காத்து ரக்ஷிப்பாய் சரபேஸ்வரா
பதவியுடன் பணபலத்தினால் மிகக்கொடிய பாவத்தை துணித்து செய்து வரும் கொடியவர்களையும் சரபேஸ்வரா காத்து ரக்ஷிப்பாய்

ஓம் கேம் காம் கம் பட் ப்ராண க்ரஹாசி ப்ராண க்ரஹாசி ஹும் பட் ஸர்வ ஷத்ரு ஸம்ஹரனாய சரப சாலுவாய பக்ஷிராஜாய ஹும் பட் ஸ்வாஹா

ஜாதி மத மாத்சர்யங்கள் பொய் பொறாமை பேராசைகளை பொசுக்குபவன் வீர சரபேஸ்வரனாவான்
மனத்துக்குள் இருந்து வரும் த்வைதம் அனைத்தையும் சுட்டெரித்து சாம்பலாக்கும் கடவுள் வீர சரபேஸ்வரனாவான்
கடலலை போல் இருந்து வரும் ஸங்கல்பத்தை நாசம் செய்து ஸதா காலமும் தான் தானாய் இருத்தி வைக்கும் கடவுள் வீர சரபேஸ்வரனாவான் நம்பிடுவாய்
மிகக் கொடிய எண்ணங்களை த்யாகம் செய்ய வைத்து த்வைதம் அனைத்தையும் சுத்தப் பொய் என்று நம்ப வைப்பவன் வீர சரபேஸ்வரனாவான்

வீர சரபேஸ்வரனாய் சிவபரம்பொருளுக்கு உடல் உயிர் பொருள் ஆவிகளை தன்னையே கொடுத்து விடுபவன் அழிவற்ற அருட்பெருஞ்ஜோதி மயமாகி விடுவான்
நான்கு வேத மஹாவாக்ய ரஹஸ்யத்தின் சாரம் நான் தான் என்பதை உள்ளத்தில் உணர்த்துபவன் வீர சரபேஸ்வரனாவான்
சைதன்ய சாச்வத சாந்த சிதானந்த ஸ்வரூபமான ஆன்மாவே வீர சரபேஸ்வரனாவான்
வீர சரபேஸ்வரா நீரே தாயுடன் தந்தை உறவினனும் நண்பர்களும் தெய்வமும் ஆவாயப்பா

ஸதாஸர்வத்ர காலமும் சத்யஞானானந்த மயமாயும் அழிவற்ற பரப்ரம்ம மயமாய் இருந்து வருபவன் வீர சரபேஸ்வரனாவான்
உலகிற்பற்பல கோடானகோடி தெய்வமாயும் தேவராயும் ரிஷிகளாயும் மாமனிதராயும் மனிதருடன் மிருகங்களாயும் இருந்து வருபவனே வீர சரபேஸ்வரனாவான்
மக்கள் அனைவருடைய புத்திக்கும் சாக்ஷியாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா போற்றி போற்றி
மனதிற்கெட்டாத முக்குணங்களுக்கு கடந்தவரான வீர சரபேஸ்வரா போற்றி போற்றி

சாஸ்வதமான பரிசுத்த ப்ரம்ம மயமான வீர சரபேஸ்வரா போற்றி போற்றி
மஹாவாக்யங்களின் லக்ஷ்யமாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா போற்றி போற்றி
சச்சிதானந்த சாஸ்வத ஸ்வயம்ப்ரகாச திவ்ய தேஜோ மயமான ஸத்குரோ வீர சரபேஸ்வரா போற்றி போற்றி
ஆனந்த வடிவினன் ப்ரம்மானந்த மயமான சரபேஸ்வரா போற்றி போற்றி

பிறவிப் பிணிக்கு வைத்யரும் ஸம்ஸார ஸாகரத்தைக் கடத்தி வைப்பவருமான வீர சரபேஸ்வரா போற்றி போற்றி
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார நிக்ரஹ அனுக்ரஹம் செய்து வரும் வீர சரபேஸ்வரா போற்றி போற்றி
காலாக்னி ருத்ரன் என்று வேதங்கள் போற்றும் ஸ்ரீ ருத்ரனின் அவதாரமான வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா
நாம ரூபமற்றவரும் அழிவற்ற ஆனந்த மயமானவருமான வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா

அசையும் அசையாப் பொருளாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா
ஜீவாத்மாக்களுக்குள் பரமாத்ம ஸ்வரூபமாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா
பரிபூரணமானவரும் என்றென்றும் உள்ளவருமாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா
ஹ்ருதயாகாச மத்தியில் சுத்த ஸ்படிகம் போன்ற சிதாகாசமாய் இருந்து வரும் வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா

அனைவரகத்துள் அறிவாய் ஆத்மாவாய் அதுவே நான் நான் என்று இருந்து வரும் வீர சரபேஸ்வரா சரணம் சரணமப்பா
ஆதி அந்தமற்ற பிறப்பும் இறப்புமற்ற மாறுபாடாற்ற சிதானந்த மயமாய் இருந்து வரும் சரபேஸ்வரா சரணம் சரணமப்பா
பிறவிப் பெருங்கடலையும் அழிந்து போகும் ஸம்பத்தையும் த்வைத ப்ரபஞ்சத்தையும் பரசிவமே மித்யை என்று உபதேசிக்கும் வீர சரபேஸ்வரனாவான்

ஆத்யாத்மிக ஆதிதெய்விக ஆதிபௌதிக தாபத்ரயங்களை பொய் என்று உணர்த்துபவன் வீர சரப ருத்ரனாவான்
வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவராயும் இவ்வுலக நாடகத்திற்கும் நித்ய சாக்ஷியாய் இருப்பவன் வீர சரபேஸ்வரனாவான்
எவருக்கும் மேம்பட்டது ஈரேழுலகில் ஒன்றுமில்லையோ நான்கு வேத வேதாந்த சாரமயமாய் இருந்து வரும் ப்ரணவ மயமான ப்ரம்மமே வீர சரபேஸ்வரனாவான்
அழிவற்ற ஆனந்தத்தையும் ஸகல சௌபாக்யத்தையும் போக மோக்ஷத்தையும் அளிப்பவருமான கடவுள் வீர சரபேஸ்வரனாவான்

இறக்கைகளுக்கு? அப்பாற்பட்டவரும் பரம பவித்ர பரிசுத்த ஆகாயம் போன்றவரும் நான்கு மஹாவாக்ய லக்ஷ்யமாய் இருந்து வருபவன் வீர சரபேஸ்வரனாவான்
புத்திக்கு சாக்ஷியாய் இருந்து வருபவரும் முக்குணங்களைக் கடந்தவரும் மனத்திற்கேட்டாதவரே வீர சரபேஸ்வரனாவான்
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார நிக்ரஹ அனுக்ரஹம் செய்து வரும் அழிவற்ற கடவுள் வீர சரபேஸ்வரனாவான் நம்பிடுவாய்

த்வைத மயமான பொய்த்தோற்றத்திற்கப்பாற்பட்டவரும் வடிவமற்றவரும் மாசற்ற அறிவாயும் ஆனந்தமாயும் ப்ரம்ம ஸ்வரூபமாய் இருந்து வருபவரே வீர சரபேஸ்வரனாவான்
அழிவற்ற ப்ரம்ம ஸ்வரூபமாய் இருந்து வரும் ஹரியையும் ஹரனையும் அவமதிப்பவன் மிகக் கொடிய ப்ரம்ம ராக்ஷஸனாகப் பிறப்பான்
பரம்பொருளான சிவனையும் பரப்ப்ரம்ம மயமான நாராயணனையும் எவன் தனதான்மாவாக உணருகிறானோ அவனே ஜீவன் முக்தனாவான்
நான்கு மஹா வாக்யங்களினால் உணரப்பட வேண்டிய வீர சரபேஸ்வரனின் திருநாமமே அழிவற்ற ஓம் என வேதங்கள் போற்றும் ப்ரம்ம ப்ரணவமாகும் மறந்திடாதே

ஆதி அந்தமற்ற மரணமற்ற மாறுபாடற்ற சிதாகாச சச்சிதானந்த மயமாய் இருந்து வரும் உனது அறிவும் ஆன்மாவும் வீர சரபேஸ்வரனாவான் மறவாதே
புழுவானது குழவியை நினைத்து நினைத்து எப்படி அதுவாகவே ஆகி விடுகிறதோ அதைப்போல நீயும் சிவ பரம்பொருளான வீர சரபேஸ்வரனை நினைத்து பரமேஸ்வரனாகி விடுவாய் மனமே மறவாதே
இரண்டற்றதும் ஒன்றாய் இருப்பதுமான அழிவற்ற பரப்ரம்மமே நான் நான் என்றுணர்பவனின் பல கோடானு கோடி பிறவிகளில் செய்த பாவம் வினாடியில் எரிந்து சாம்பலாகிவிடும்

பேராசை உடையவர்களும் பொறுமை இழந்து இழிவான கெட்ட நடத்தை உடையவர்களும் நன்றி கெட்ட பாவிகளும் பிறரை பேச்சினால் ஹிம்சிக்கும் கொடிய மஹாபாவிகளின் கெட்ட மனத்தை அழிப்பவன் வீர சரபேஸ்வரனாவான்
தெய்வ தேவ ரிஷிகளுடன் ஸத்குருவின் சாப தோஷங்களைப் போக்குவிக்கும் கடவுளான வீர சரபேஸ்வரனுக்கு ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
அஞ்ஞான இருளைப் போக்கும் கோடானகோடி சூரியன் போன்றவனான கருணையெனும் அம்ருதக் கடல் போன்ற ஸ்ரீ வீர சரபேஸ்வரனுக்கு ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
சப்தகோடி மஹாமந்த்ரமும் சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் இருந்து வரும் ஓம் நமோ பகவதே வீர சரபேஸ்வராய நம: என்கிற மஹாமந்த்ரத்துக்குள் அடக்கமாக இருந்து வரும் வீர சரபேஸ்வரனுக்கும் அதர்வண பத்ர காளிக்கும் ஜய மங்களம் நித்ய சுப மங்களம்

காலத்தின் கட்டுப்பாட்டை மீறி நன்மை ஒன்றையே உலகிற்கு செய்து வரும் வீர சரபேஸ்வரனுக்கும் அதர்வண பத்ர காளிக்கும் ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
தமிழகத்தின் தலைநகருள் தாம்பரம் அருகில் ராஜ கீழ்ப்பாக்கம் மஹாலக்ஷ்மி நகருள் இருந்து வரும் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திற்கு ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
உலகமே கோவில் நகரமெனப் போற்றிப் புகழும் தமிழகத்தில் உள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
மக்களின் துன்பத்தை துடைத்தெறியும் வீர சரபேஸ்வரனுக்கும் அதர்வண வேதம் போற்றும் அதர்வண பத்ர காளிக்கும் ஜய மங்களம் நித்ய சுப மங்களம்

மிகக் கொடிய பஞ்ச மஹா பாபத்தைப் போக்கி நற்பயனைத் தந்து ரக்ஷிக்கும் சென்னை தாம்பரம் அருகில் ராஜ கீழ்ப்பாக்கம் இருக்கும் மஹா லக்ஷ்மி நகருள் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திற்கு ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
உலகிற்கு உபகாரமான தேச சேவையை செய்து வரும் ஈச பக்தர்கள் அனைவருக்கும் ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
அளவற்ற நற்பயனை வாரிவழங்கும் வீர சரபேஸ்வர கவசத்திற்கும் கவச பாராயணம் செய்பவருக்கும் உலகில் உள்ள மக்களுக்கும் ஜய மங்களம் நித்ய சுப மங்களம்
ஜய மங்களம் நித்ய சுப மங்களம்

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: